Showing posts with label தமிழர் அரசியல். Show all posts
Showing posts with label தமிழர் அரசியல். Show all posts

13 May 2014

உலகின் முதல் வலிமையான அரசை உருவாக்கியவன் தமிழனே

தமிழர்களே உலகில் முதன்முதலில் வலிமையான அரசை கட்டமைத்தனர் என்பதற்கும்? தமிழர்களே உலகம் முழுவதும் பரவி பல ஆற்றங்கறை நாகரிகத்தை உருவாக்கினர் என்பதற்கும்? நமக்கு மற்ற ஆதாரங்கள் ஆயிரம் இருந்தாலும், 
அவற்றையெல்லாம் விட மிகப்பெரிய ஆதாரம்!, கடற்படையை குறிக்கும் " NAVY "
என்ற சொற்பதமே!!!



தமிழில் சிறிய படகுளை கட்டுமரம் என்பர். அதையே ஆங்கிலத்தில் "Catamaran " என்கின்றனர். தமிழில் பெருங் கப்பல்களை நாவாய் என்பர். அதையே ஆங்கிலத்தில் "Navy " என்கின்றனர். இது மட்டுமல்ல, உலகின் அனைத்து நாகரிகங்களிலும், தாங்கள் நாடு கடலில் மூழ்கிய போது Nova என்ற கடவுள், தங்களை கப்பல்களில் காப்பாற்றி அப்பகுதிக்கு கொண்டுவந்து சேர்த்ததாக,பழங்கதை ஒன்று புழக்கத்தில் உண்டு!!!




கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பரதவர் உபயோகித்த கலம். நான்கு பாய்மரங்களைக் கொண்டது





திருநெல்வேலி தொல்பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டடுள்ள, பூம்புகார் கடற்கடையிலிருந்து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த கப்பலின் அடிபப்டையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் உருவாக்கிய சோழர் கால கப்பலின் உடற்பகுதியின் மாதிரி



இலக்கியங்களில் நாவாய்


நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களி இநல் யானைக் கரிகால் வளவ (புறம் 66)



களிறே முந்நீர் வழங்கும் நாவாய் போல (மதம் கொண்டு ஓடிற்று - புறம் 13)

வெளில் இளக்கும் களிறு போல,
தீம் புகார்த் திரை முன்துறை,
தூங்கு நாவாய், துவன்று இருக்கை,
மிசைக் கூம்பின் நசைக் கொடியும்; (பட்டினப்பாலை 172-175)

கடலோடி தமிழனை பற்றி கிரேக்க அறிஞர் பிளினி

There is another more serviceable port, belonging to the Neacyndi tribe, called Porakad; this is where king Pandion reigned, his capital being a town in the interior a long way from the port, called Madura;


நாவாய்களை செலுத்தியவனே, பல ஆயிரம் ஆண்டுகளின் மொழி திரிபில் Nova என்று அழைக்கபடுகிறான் தோழர்களே....!!! குமரிகண்டம் எனும் பழம் பாண்டிய நாடு,
கொடும் கடல் கோள்களால் மூழ்கி விட? அங்கிருந்து தப்பிய பாண்டியர்கள்,
உலகம் முழுவதும் தப்பி சென்றுள்ளனர் என்பதற்கு இந்த Nova கதையும், Navy என்ற வார்த்தையுமே மிகச்சிறந்த சான்றுகள் தோழர்களே!!!


பாண்டியர்கள் மாபெரும் கடலோடிகள், அதனால் தான் தங்கள் அடையாலங்கள் அனைத்திலும் கடலை சம்பந்தபடுத்துவர்!!! குமரிகண்டமே பல தீவு கூட்டங்களின் தொகுப்பு என்கின்றனர் ஆய்வாளர்களில் பலர்!!! Navy என்ற சொல் மட்டுமல்ல,
பாண்டியர்களின் ஒப்பற்ற வேந்தர்களான சிவனும், முருகனும், அவர்களின் இன்ன பிற அடையாளங்களும், உலகம் முழுவதும் விரவி கிடப்பதின் காரணம் இது தான் தோழர்களே!!!

அவ்வளவு ஏன்?


பாண்டியர்களின் குல சின்னமான இரட்டை மீனின் ஆதிக்கம் இல்லாத,
உலகின் பழம் பெரும் அரசுகள் எதுவுமில்லை!!! 



உயர்ந்த தொழிற்நுட்ப அறிவு பெற்ற பெரும் நாகரிகம் படைத்தவர்களால் மட்டுமே, இன்றைக்கு கூட பெரும் கப்பற்படையை கட்ட முடியும். 
எம் பாண்டியர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெரும் கடற்படை கட்டி, இவ்வுளகையே கட்டி ஆண்டிருக்கிறார்கள் என்றால்! எவ்வளவு நாகரிகத்தின் உச்சத்தில் இருந்திருப்பர்...? தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகமே இந்திரனையும், சிவனையும் இன்றும் கொண்டாடுகின்றனர் என்பது இப்போது புரிகிறதா தோழர்களே!!! கிரேக்கர்களே தங்களை பாண்டியர்கள் ஆண்டதை ஒப்புக் கொள்கையில்,ஆரியர் என்ற ஆடுமாடு மேய்ப்பவனின் புரட்டு கதைகளை எம்மிடம் பரப்பும் திராவிட வடுகர்களே? நான் தெரியாமல் தான் கேட்கிறேன்? ஆடு மாடு மேய்பவனுக்கு கப்பல் கட்ட தெரியுமா??? இல்லை கப்பல் ஏறி கடலில் செலுத்ததான் தெரியுமா??? கப்பல் என்பதை படத்தில் கூட பார்த்திராத ஆரியனால், உலக வல்லரசு படைத்த எங்களை அடக்கியிருக்க தான் முடியுமா??? இந்த கேள்வியெல்லாம் கேட்க தெரியாத? இதைபற்றி எல்லாம் அனா ஆவனா கூட தெரியாத வடுகன் சொல்கிறான்!
தமிழர்களுக்கு எதுவும் தெரியாது என்று!!! பும்பூம் மாடு மேய்த்த பரம்பரையில் வந்த கெட்டிபொம்மு நாயக்கனெல்லாம், வீரபாண்டியனாகி விட்ட காலக்கொடுமையை?,
எம் முன்னோர்களான சிவனும், முருகனும் ரத்தக்கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருப்பர், அவர்களின் பிள்ளைகளாகிய நம் இயாலாமையை நினைத்து வேதனைகளுடன்!!!

ஆரியத்தை விட ஆயிரமடங்கு எம் குலத்தை அழித்த திராவிட வடுகர்களே? தமிழர்கள் யாரும் முன் வரதாலேயே தான், பெரியார் தமிழர்களை காகக்கும் பெரும்பனியை ஏற்றுக்கொண்டார் என்பது உண்மையென்றால், பச்சை தமிழர்கள் இதோ நாங்கள் வந்துவிட்டோம்! 



தயவு செய்து எம் வழியில் குறுக்கே நிற்காதீர்!!!
வாழ்வோ வளமோ, எங்கள் தலையெழுத்தை நாங்களே முடிவுசெய்கிறேம்! இல்லையென்றால், உங்கள் தலையெழுத்தை நாங்கள் முடிவு செய்ய வேண்டியது வரும்!!! தோற்றவனின் ரத்த வெறி எப்படி இருக்கும் என்பதை,
அவன் மீண்டெழுந்த உலக வரலாறுகளில் கொஞ்சம் படித்து பாருங்கள், உங்களுக்கே புரியும்???

Ref: மரக்கலம் வகைகள்

இவண்

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

29 April 2014

தமிழரை காட்டி கொடுத்த பெரியார்

பெரியாரின் திராவிட மொழிகள் பற்றிய பார்வை என்பது கன்னட,தெலுங்கு,மலையாளிகள் உள்ளிட்ட மாற்று இனத்தவர்கள் மட்டுமே தமிழர்களை மொட்டை அடிக்க குத்தகை எடுத்தவர்கள் என்பதை இந்த கட்டுரை ஆணித்தரமாக நிரூபிக்கும்.



தமிழரை காட்டி கொடுத்த பெரியாருக்கு தமிழ் மண்ணில் இருக்கும் சிலைகளில் ஒன்று

தமிழுக்கும், தமிழிய(திராவிட) மொழிகளுக்கும் இடையேயான உறவைப்பற்றிப் பெரியார் கொண்டிருந்த நிலைப்பாடு, இயற்கைக்கும் அறிவியலுக்கும் என்றும் பொருந்தவே பொருந்தாது. பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைப்படி பால்,தயிர்,மோர் இவை மூன்றும் ஒன்றே.....!!! புரியவில்லையா....? வாசியுங்கள்.

பெரியாரின் கருத்துப்படி பழைய சென்னை மாநிலத்தில் தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகிய தனித்தனி மொழிகள் கிடையாதாம்! அவை யாவுமே தமிழ் தானாம்! ஆகவே, தெலுங்கும், கன்னடமும் மலையாளமும் துளுவும் தமிழில் இருந்து தோன்றவில்லையாம். அவை யாவும் போக்குவரத்து குறைவு, தட்ப வெட்ப வேற்றுமை ஆகியவற்றால், தமிழே பல்வேறு வகைகளில் பேசப்பட்டமையால் வந்த தமிழின் வடிவங்கள் மட்டுமாம்!  தலை சுற்றுகிறதா? பெரியார் எழுதியதை படியுங்கள்.

"தமிழன்,தெலுங்கன்,கன்னடியன்,மலையாளி ஆகியோர் பேசுவதெல்லாம் தமிழ் தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழி என்று கூறுபவன் தமிழ்மகன் அல்லன்;தமிழை அறியாதவன்;ஆரியத்துக்கு சோரம் போனவன்;நம்மைக் காட்டிக் கொடுத்து ஆரிய மேலாண்மைக்கு ஆக்கம் தேட முயற்சிப்பவன். இந்த நான்கும் வேறுவேறு மொழிகள் என்று கூறுபவர்கள் 'தமிழர் என்று தம்மை நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; கருதிக் கொண்டு இருக்கிறார்கள்' என்று கூறலாமே ஒழிய இவர்களைத் தமிழறிந்தவர்கள் என்று நாம் ஒப்புக் கொள்ள முடியாது.

நம் புலவர்களில் சிலர், இந்த நான்கும் ஒன்றில் இருந்து வந்தவை; ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த அக்கை தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட்டம் என்பது தான் என் கருத்து. இத்திராவிட தாய்க்கு பிறந்தது ஒரே ஒரு மகள் தான்; அது தான் தமிழ். அந்த ஒன்றைத்தான் நாம் நான்கு பெயரிட்டு அழைக்கின்றோம். நான்கு இடங்களில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதே ஒழிய, நான்கிடத்திலும் பேசப்படுவது தமிழ் தான். நான்கும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு; ஒன்று தான் நான்காக,நமது அறியாமையால் கருதப்பட்டு வருகிறது. இதை மெய்ப்பித்து காட்டவும் முடியும்" (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80) என்றும்,

"ஒன்று நான்கா வகுக்கப்பட்டது என்பதற்கும், ஒன்றில் இருந்து நான்கு பிறந்தன,கிளைத்தன என்பதற்கும் வேற்றுமை உண்டு. ஆகவே, தமிழ் நீண்ட தொடர்பற்ற காரணத்தால் நான்காகப் பிரிந்து இருக்கிறதேயன்றி, தமிழில் இருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பவை தோன்றியவை அல்ல;உண்டாக்கப்பட்டவை அல்ல என்று திராவிடர்கள் உணர வேண்டும். இந்த உண்மையைத் தெரிந்துகொண்டால் ஒழிய, இந்த நான்கு நாட்டாருக்குள்ளும் வேற்றுமை உணர்வு தோன்றாமல் இருக்காது. இந்த நான்கும் தமிழ்மொழியே தான் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை" (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80)

இப்படி இயற்க்கைக்கு ஒவ்வாத ஒரு விஷயத்தை கூறியதோடு மட்டும் இன்றி, தமிழ் புலவர்களை இன்னும் ஒரு படி மேலே சென்று மட்டம் தட்டுகிறார்.

"தெலுங்கர்,கன்னடியர்,மலையாளிகளுக்கு உள்ள மொழிப்பற்றில், மொழி உணர்ச்சியில் தமிழ் புலவர்களுக்கு நூறில் ஒரு பங்கு கூட இல்லை" -- (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80)

"மற்றும் தெலுங்கர்,கனடியர்,மலையாளி இவர்களை தமிழர்கள் ஆக்க வேண்டும் என்றால், 'திராவிடர்' என்று சொல்லித் தான் ஆக்க முடியும்; 'திராவிடமே தமிழ்; தமிழே திராவிடம்' என்னும் புத்துணர்ச்சியைத் திராவிட மக்கள் பெறுவார்களாக!" (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80)

நிற்க.

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்பும், முன்பும் இங்கே தாய் தமிழ் மண்ணில் தமிழர்கள் அல்லாதோர் ஆதிக்கமே இன்றும் நீடித்து கொண்டு இருக்கிறது என்பதை நன்கு அறிந்த பெரியாரின் திராவிட மொழிகள் பற்றிய சிந்தனை என்பது தமிழரை காலம் காலமாக மற்றவர்களிடம் காட்டி கொடுக்கும் ஒரு செயல் என்பதை நிறுவ இதுவே போதுமானது.

இருப்பினும், உண்மையில் பெரியார் 'என்னால் நிரூபிக்க முடியும்' என்று கூறினாரே, அந்த அடிப்படையில் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மட்டும் தானா திராவிட மொழிகள் என்று அவர் கூறியது உண்மை தானா என்பதை தமிழர்கள் உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறோம். உண்மையில் தமிழில் இருந்து உருவாகிய மொழிகள் சுமார் 60க்கும் மேல். அவற்றில் ஒருசிலவற்றை இங்கு காண்போம்.

* தமிழுக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு.
Ref: http://www.faculty.ucr.edu/~legneref/bronze/dravid.htm

* தமிழுக்கும், கொரிய மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு.
Ref: http://en.wikipedia.org/wiki/Dravido-Korean_languages

தமிழுக்கும், சப்பான் மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு.
http://japanese-dravidian.blogspot.in/

* தமிழுக்கும், சிங்கள மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு
"Rev. S. Gnanapiragasam - `There are more than 4,000 Tamil words in the Sinhala vocabulary. If the Sinhala vocabulary is stripped of all the Tamil words there will be no Sinhala language."
Ref: http://www.lankanewspapers.com/news/2007/10/20510_space.html

ஆகவே தமிழில் இருந்து உதித்த மொழிகள் பல இருந்தும், திராவிட மொழிகள் எனில் அது தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மட்டுமே என்றும், இவை நான்குமே தமிழ் தான் என்றும், அதை தம்மால் நிரூபிக்க இயலும் என்று மார்தட்டிய பெரியாரின் நோக்கம் தமிழர் அல்லாதோரிடம் தமிழரை காட்டி கொடுப்பது மட்டுமே......மட்டுமே.....மட்டுமே.....!!!

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்


பெரியார் தமிழுக்கு ஆற்றிய தொண்டுகள்

பெரியார் தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறினார் என்பதற்கு ஆயிரம் விளக்கம் கொடுக்கும் புண்ணியவான்கள், உண்மையில் தமிழின் மீதோ,தமிழரின் மீதோ பெரியார் வைத்திருந்த கண்ணோட்டத்தை பற்றி கவலை பட்டது இல்லை. ஒருக்காலும் பெரியார் தமிழை ஆட்சிமொழி ஆக்கவோ, பாட மொழியாக்கவோ முயன்றதே இல்லை. அதற்காக அவர் இந்தியை எதிர்த்து போராடியதும் இல்லை. அவர் இந்திக்கு பதிலாக ஆங்கிலத்தையே முன்வைத்தார். இதில் தமிழுக்கு எந்த இடத்தில் பெரியார் தொண்டாற்றி உள்ளார் என்று நீங்களே பார்த்து சொல்லுங்களேன்.



விடுதலை 1965 மார்ச் 3 அன்று எழுதிய ஆசிரிய உரையில்,
"நீதானே முன்பு இந்தியை எதிர்த்தாய்? இப்போது ஏன் இப்படி('தமிழ்நாடு தமிழருக்கே') சொல்கிறாய்?  என்று கேட்பீர்களானால், சொல்கிறேன். இப்போதும் நான் இந்தியை எதிர்க்கத்தான் செய்கிறேன். ஆனால், நீங்கள் சொல்வது போல் தமிழ் கெட்டுவிடுமே என்று அல்ல. இனிமேல் கெடத் தமிழில் என்ன மிச்சம் இருக்கிறது? ஆனால் நமக்கு ஆங்கில அறிவு தேவை என்பதால், இந்தியை எதிர்க்கிறேன்! இந்தி எதிர்ப்பு மொழி சிக்கல் அல்ல;அரசியல் சிக்கல் தான்!"

குடி அரசு ஏட்டில் இந்திப் புரட்டு என்னும் தலைப்பில் 20.1.1929 அன்று பெரியார் எழுதிய ஆசிரியர் உரையில்,
"இந்தியாவுக்கு ஒரு பொதுமொழி வேண்டுமானாலும் -- அல்லது வணிகத்திற்கு ஒரு பொது மொழி வேண்டுமானாலும், ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுத்து அதை எல்லா மக்களிடையிலும் பரப்ப முயற்ச்சிக்க வேண்டுமேயன்றி,வேறு மொழியைப்பற்றி எண்ணுவது முட்டாள்த் தனமோ சூழ்ச்சியோ தான் ஆகும்".

""---- தமிழ்ப் படிப்பதனாலாவது, தமிழ்தாய்ப் பற்றினாலாவது மனிதனுக்கு தன்மான உணர்ச்சியும் பகுத்தறிவு உணர்ச்சியும் வருமா என்று ஐயப்பட வேண்டி இருக்கிறது"

பெரியார் 14.8.1948 அன்று சென்னையில் ஆற்றிய ஓர் உரையில்,
"காலையில் நான் இம் மாநாட்டுத் தலைவரை ஆதரித்துப் பேசுகையில், 'தமிழை விட ஆங்கிலத்தைக் கட்டாயப்பாட மாக்கினால், அதற்க்கு வாக்களிப்பேன்' என்று கூறினேன்' -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், மூன்றாம் தொகுதி , ப.1763

ஈ.வே.கி. சம்பத் நடத்தி வந்த தமிழ் செய்தி ஏட்டின் பொங்கல் மலரில்,
"தமிழ் ஒரு 'நியூசென்ஸ்'! தமிழ் புலவர்கள் யாவரும் குமுக எதிரிகள்" -- கவிஞர் கருணானந்தம், தந்தை பெரியார்,ப.414

"சனியனான தமிழுக்கு" விடுதலை 16.3.1967, ஆசிரியவுரை, கவிஞர் கருணானந்தம், தந்தை பெரியார், ப.477

விடுதலை ஏட்டில் 'தாய்ப்பால் பைத்தியம்' என்னும் தலைப்பில் பெரியார், 'எனக்கு தமிழ் பற்றும் இல்லை! நான் தமிழனும் இல்லை!" என்று எழுதியுள்ளார். -- புலவர் வி.போ.பழனிவேலன், ஈ.வே.இரா. பெரியாரும், இந்தியும் (கட்டுரை), தென்மொழி தி.பி.1996, பங்குனி (1964 மார்ச்),ப.59

தாய்மொழிக் கல்வி என்னும் அடிப்படை மனித உரிமையை கடுமையாக விமரிசித்து பெரியார் கூறியதாவது,
"இன்றைய நாளில் கூட மேற்கண்ட தமிழ் தாயின் பாலை நேரே அருந்தி வளர்த்த பிள்ளைகள் ஆங்கிலப் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால்,(இந்த அன்பர்கள் உட்பட) எவ்வளவோ ஆற்றலும் திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள வாழ்க்கை நிலையே வேறாக -- அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக -- ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரமுள்ள உழைப்பாளர்களாகி இருப்பார்கள்  என்று உறுதியோடு கூறுவேன்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991 - 93

"தாய்ப்பாலை (தமிழை) எதற்காகப் படிக்க வேண்டும்? படித்த பிறகு, அஃது எதற்குப் பயன்படுகிறது?" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991 - 93

"இன்றைய முற்ப்போக்குக்கு முதல் எதிரி தாய்ப்பால் குடித்த மக்கள்தானே?" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

பெரியாரின் கூற்றுப்படி தாய் மொழி மீது பற்று வைத்தால் அது பிற்போக்கு! பற்று இல்லை எனில் முற்போக்கு! என்ன ஒரு சித்தாந்தம்.....? மேலும் வாசியுங்கள்.

"இன்றைக்கு எந்தத் துறையிலானாலும் நமக்குத் திறமை ஏற்ப்பட வேண்டுமானால், (ஆங்கில) புட்டிப் பால் தானே எண்ணங்கள், செயல்முறைகள், நடைமுறையின் பெயர்கள், அடிப்படை கருத்துகள் முதலியவற்றை அறிந்து வரும்படி, நம் மக்களை மேல்நாடுகளுக்கு அனுப்பிவைக்க முடிகிறதே தவிர, நமது தாய்ப்பால் (தமிழ்) இதுபோல் எதற்காவது பயன்படுகிறதா?" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

பெரியார் வானளாவ புகழும் எந்த ஆங்கிலேயரும் 'முற்போக்கு' என்னும் சாக்கில் தத்தம் தாய்மொழியை என்றாவது மறந்தது உண்டா? யோசியுங்கள் தமிழர்களே....!!!

ஸ்டாலின் மொழியியல் கொள்கையானது, தமிழகத்தில் உள்ள பொதுவுடைமை கட்சிகளை தமிழ் மக்களோடும் மண்ணோடும் ஓட்டம்விடாமல் செய்த கொள்கை ஆகும். அதன்படி "மொழி என்பது ஒருவருக்கு ஒருவர் தத்தம் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உதவுகின்ற வேர்ருக்கருவியே அன்றி வேறில்லை" என்பதை பெரியார் அப்படியே முன்மொழிகிறார்.

"இதை தவிர, மொழியில் வேறு என்ன இருக்கிறது? இதற்காகத் தாய்மொழி என்பதும், தகப்பன் மொழி என்பதும், நாட்டுமொழி என்பதும், மொன்னோர் மொழி என்பதும், மொழிப்பற்று என்பதும் ஆனவற்றை எல்லாம் மொழிக்கு எதை பொருத்துவது?" என்று சொல்லி சீறுகிறார் பெரியார்.-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

அட தமிழருக்கு இயல்பாய் தோன்றிய தாய் மொழி பற்றுக்கு கூட பிராமணர் தான் காரணம் என்பது பெரியாரின் அறிய கண்டுபிடிப்பு.
"இந்தி கட்டாயம் என்பதால் தானே தமிழ் மொழிப் பைத்தியம் நமக்கு ஏற்ப்பட்டது? இது பார்ப்பனர்களின் திறமையே ஆகும்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 991- 93

"ஆங்கில எழுத்துக்களையே தமிழ் எழுத்துக்களுக்கு நெடுங்கனக்காக -- அகர வரிசையாக --- எடுத்துக் கொள்ளலாம் என்றும், தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற எழுத்து ஆங்கிலத்தில் ஏதாவது ஒன்றிரண்டு குறையுமானால், அதற்க்கேற்ற தமிழ் எழுத்தையே எடுத்து கொள்ளலாம் எனும் சொன்னதோடு, மற்றும் ஆங்கிலமே தமிழனின் பேச்சு மொழியாக ஆகும்படியான காலம் ஏற்ப்பட்டால் நான் மிக மிக மகிழ்ச்சியும் நிறைவும் அடைவேன் என்றும் பேசியிருக்கிறேன்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் ,இரண்டாம் தொகுதி , பப 988-89

"உங்கள் வீட்டில் மனைவியுடனும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்;பேச பழகுங்கள்;பேச முயலுங்கள்;! தமிழ்ப் பைத்தியத்தை விட்டு ஒழியுங்கள்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் ,இரண்டாம் தொகுதி , பப 988-89
என்றும் தமக்கே உரிய பாணியில் தமிழ் தொண்டாற்றி உள்ளார் பெரியார்.

தமிழர்களே,

'ஒரு தேசிய இனத்தை அழிக்க வேண்டும் என்றால் அதனுடைய மொழியை அழி' என்பது தான் வல்லரசு நாடுகளின் உத்தி. தேவநேய பாவாணர் கிட்டத்தட்ட கெஞ்சி கேட்டும் ஒரு தமிழ் வழி பள்ளியை கூட திறக்க உதவி செய்யாத பெரியார், புற்றீசல் போல ஆங்கில வழி பள்ளிகளையே திறந்தார்/திறக்க முன் நின்றார். அந்த ஆங்கில வழி பள்ளிகளே இன்று சமச்சீர் கல்வி போன்ற குறைந்த பட்ச உரிமையை எதிர்த்து கொடி பிடிக்கின்றனர் என்பது உபரித் தகவல்.

வாழ்க பெரியாரின் தமிழ் தொண்டு.....!!! வளர்க அவரின் புகழ்.....!!!

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

20 January 2014

தமிழர் யார் என்பதற்கான வரையறை

கேள்வி: செம்மண்,உவர் மண்,களி மண் உண்டு. மாறாக 'தமிழ் மண்' என்று எங்கும் இருந்தது இல்லையே...? இதே போல தமிழர் தேசம் என்றோ, தமிழர் என்றோ யாரும் எங்கும் இருந்தது இல்லையே...? அப்படி என்றால், தமிழ் தேசியம் பேசும் அமைப்புகள், எந்த அடிப்படையில் 'இன்னார் தான் தமிழர்' என்று வரையறை செய்கிறீர்கள்?

பதில்: தொழில் பிரிவுகளாகவே ஆதியில் சாதி என்கிற இனக் குழுக்கள் உருவாகின என்பதையும், இந்தியா முழுக்க முன்பு 'தமிழ்' என்ற மொழி தான் பேசப்பட்டது என்று அண்ணல் அம்பேத்கார் உள்ளிட்டோர் ஆய்ந்து அறிந்து கூறியதற்கு இணங்க, அப்படி தமிழ் கூறும் மக்கள் அன்று முதல் இன்று வரை பல்வேறு இனக்குழுக்களாகவே வரையறுக்கப்பட்டு உள்ளனர் என்பதும் உண்மை. மாறாக மொழி மட்டுமோ, அல்லது பூகோள இடமோ ஒரு இனத்தை தீர்மானிக்காது. இந்திய அரசியல் சட்டத்தில் ஒருவர் மதம் கூட மாற முடியும். ஆனால், சாதி விட்டு சாதி மாற முடியாது. காரணம், பல ஆயிரம் வருடங்களாக இந்த இனக்குழு (என்கிற) சாதியானது, அத்துணை இறுக்கமான ஒரு இத்யாதி. இவ்வாறு இனக்குழுக்களின் தொகுதியே ஒரு இனத்தை வரையறுக்கிறது. இந்த அடிப்படையில் தமிழர் என்ற இனத்தை 'தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்' இப்படி வரையறை செய்கிறது.

"தாய் மொழியாக தமிழை கொண்ட, தமிழ் சாதியை சேர்ந்தவனே தமிழன் ஆவான்".

இப்படி துல்லியமாக வரையறுக்காவிட்டால், எதிர் காலத்தில் என்ன என்ன கேடுகள் விளையும் என்பதற்கு சமீபத்திய நிகழ்வு தான் 'கேரளாவில் இருந்து தமிழர்களை(?) வெளியேற்ற நினைக்கும் அட்டப்பாடி பிரச்சனை".

இதில் உண்மை நிலவரத்தை முதலில் பார்ப்போம்.
அட்டப்பாடியில் இருளர், முதுவன் உட்பட பல பழங்குடி மக்களின் நிலங்களை அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி பழங்குடி அல்லாத பலர் மோசடி செய்து உள்ளனர். பல ஆண்டுகளாக இந்த அபகரிப்பு பற்றிய சர்ச்சைகள் பல்நிலை நீதிமன்றங்களைத் தாண்டி உச்சநீதிமன்றத்தால் நிலங்களைத் திரும்பப்பெற தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 70 பேரிடம் இருந்து நிலங்களைத் திரும்பப்பெற தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த 70 பேரில் 51 பேர் மலையாளிகள். மீதி 19 பேர் பிறமொழியினர். அந்த 19 பிறமொழியினரில் பெரும்பான்மையினர் கன்னட ஒக்கலிக்க கவுடாக்கள். நில மீட்புக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருபவர்கள் இந்த ஒக்கலிக்க கவுடாக்களே ஆவர். மலையாளிகள் கூட எதிர்க்காத நிலையில் ஒக்கலிக்க கவுடாக்கள் "தமிழரை விரட்ட மலையாளிகள் முயலுவதாக கதைக்கட்டிக்" கொண்டு தமிழர் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள். இதற்க்கு தமிழக கவுண்டர்கள் சிலரை கவுடாக்கள் பயன்படுத்தி வருவதாகவும் தெரிகிறது. கன்னட கவுடாக்களுக்கும் தமிழக கவுண்டர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. கவுடா எனும் பட்டம் கொண்டவர்களில் மூன்று சாதிகள் உண்டு கர்நாடகாவில். அதில் ஒக்கலிக்கா எனும் சாதியை சேர்ந்தவர்தான் முன்னால் பிரதமர் தேவாகவுடாவும் அவரது மகன் முன்னால் கர்நாடக முதல்வர் குமாரசாமியும் ஆவார். தமிழரின் வாழ்வாதாரத்திர்க்காய் குரல் கொடுக்காத தெலுங்கர் கருணாநிதி இதில் கொதிப்பதின் காரணம் இது தான். நடுவம் போன்ற அமைப்புகள் களத்தில் இறங்கி உண்மை நிலையை கூறிய பின்பு தான், அவமானப்பட்ட தமிழ் அமைப்புகள் 'கப் சிப்' என இந்த பிரச்னையை புரிந்து கொண்டு கை கழுவி விட்டனர்.

NOTE: அட்டப்பாடியில் வாழும் இருளப்பள்ளர்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவுகளை காணவும்.

அட்டப்பாடி தமிழர்களுடன் நடுவத்தின் தலைவர் செல்வா பாண்டியர்

இதில் ஒக்கலிகா கவுண்டர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லி கொண்டாலும், அவர்கள் தமிழர்கள் அல்ல என்று உணர்த்துவது அவரின் சாதியே. மேலும், மலையாள பழங்குடியினர் என்று 'இருளப் பள்ளர்களை' கூறினாலும், அவர்கள் மலையாளிகள் அல்ல அவர்களே பூர்வீக தமிழர்கள் என்றும் கூறுவது அவரின் சாதியே.....!!!

ஆனால், எடுப்பார் கைப்பிள்ளை போல, குருட்டாம் போக்கில் தமிழ் தேசியம் பேசி, யார் தமிழர் என்ற வரையறையே தெரியாமல் அரசியல் செய்ய நினைக்கும் அமைப்புகளில் முக்கியமானது 'நாம் தமிழர்' அமைப்பு. இந்த அட்டப்பாடி பிரச்னையை, அதன் உள் அர்த்தம், நோக்கம் என எதுவுமே தெரியாமல், 'தமிழர்களுக்கு எதிராக மலையாளிகளின் அராஜாகம்' என்ற போர்வையில், உண்மை தமிழர்களை, அந்த பழங்குடி மக்களை 'மலையாளி' என்று திரித்து கூறியதோடு அன்றி, 'தமிழர்கள் என்று தங்களை கூறி கொள்ளும், கன்னட/தெலுங்கு கவுடாக்களை' காக்கும் பொருட்டு அவர்களை தமிழர் என்றும், அவர்கள் பக்கமே தாங்கள் நிற்ப்போம் என்று கூறும் 'செந்தமிழன்'(???) சீமான் அவர்களின் மெய் சிலிர்க்கும் உரையை இங்கே காணுங்கள் மக்களே...!!!

Source: https://www.youtube.com/watch?v=krXyrShap7s

நடுவத்தின் சார்ப்பாக தமிழ் அமைப்புகளுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம்.
* நாம் அனைவரும் ஒரே இலக்கை நோக்கி, கருத்தியலில் சில முரண்பாடுகளுடன் களமாடும் அமைப்புகள் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், யாருக்காக போராடுகிறோம் என்ற அடிப்படையையே கேள்விக்குறி ஆக்கும் நோக்கத்தில், எந்தவித கருத்தியல் அடிப்படையும் இல்லாமல் இருக்கும் ஒரு சில தமிழர் அமைப்புகள், இனியாவது தங்கள் தவறை உணர்ந்து, தோழமை அமைப்புகளுடன் களமாட வருமாறு அழைக்கிறோம்.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

தொடர்புக்கு
செல்வா பாண்டியர் : +91 98403 77767

06 January 2014

இந்துத்துவாவின் இரண்டு தூண்கள்: திராவிடம் & தலித்தியம்

கேள்வி: தலித்தியமும், திராவிடமும் ஒடுக்கப்பட்டவருக்கு ஆதரவாகவும், பார்ப்பனியத்துக்கு எதிராகவும் செயல்படுகிறது. அதில் ஏதேனும் விமர்சனம் உண்டா?

பதில்:
இது கொஞ்சம் பெரிய மேட்டர். அதை எளியவடிவில் கதை போல விளக்கிவிட்டு விசயத்துக்குள் செல்வோம்.

திருட்டு கூட்டாளிகள்
தமிழரசனுக்கு ஒரு தங்கநிற சட்டையும், வீடும், அஞ்சு ஏக்கர் நிலமும், அந்த நிலத்தின் நடுவில் குலதெய்வ கோவிலும் உள்ளது.

ஆரியா என்பவன் தமிழரசனை வீழ்த்த நினைத்து அதை தந்திரமாக செய்கிறான். எப்படி? தமிழரசனுக்கு சொந்தமான அத்தனையும் தன்னுடையது என்கிறான்.
திவாகர் என்பவன் 'கவலைப்படாதே தமிழரசா, நான் இருக்கிறேன் உனக்கு' என்று ஆறுதல் சொல்வது போல களம் இறங்குகிறான். பின்பு திவாகர் 'உண்மை தான் தமிழரசா, ஆரியா சொல்வது தான் உண்மை. இதெல்லாம் உன்னுடையது அல்ல, அவனுடையது' என்கிறான். அதாவது தமிழரசனுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று திவாகர் ஆர்யாவுக்கு தான் துணை நிற்கிறான். 
தலிக்கா என்ற இன்னொரு நாட்டாண்மை வருகிறான். 'கவலைப்படாதே தமிழரசா. நான் இருக்கிறேன் உனக்கு' என்று களம் இறங்குகிறான். இறுதியில் அந்த தலிக்கா போட்டானே ஒரு போடு.... "அடேய் தமிழரசா......நீ தமிழரசனே கிடையாதப்பா......உனக்கும் இந்த உடமைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதப்பா.....எல்லாமே ஆரியாவோடது தான்" என்கிறான். திவாகராவது தமிழரசனின் உடமைகளை ஆரியாவோடது என்று கூறினான். ஆனால் தலிக்கா ஒரு படி மேலே போய், தமிழரசனுக்கும் அவனது உடமைக்கும் 'எந்த சம்பந்தமுமே இல்லை' என்று கூறிவிட்டான். 
கொடுத்த காரியத்தை கண கச்சிதமாக முடித்து விட்டீர்கள் என்று ஆர்யாவுடன், திவாகரும், தலிக்காவும் இருட்டறைக்குள் கை குலுக்குகிறார்கள்.
====================

இப்போ விசயத்துக்கு வருவோம்.

உண்மையில் தமிழரசனை காக்க நினைத்து இருந்தால் திவாகர் , தமிழரசனின் உடமைகள் அவனுடையது தான் என்பதை ஆய்ந்து அறிந்து சொல்லி இருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

தலிக்கா தமிழரசனை காக்க நினைத்து இருந்தால், தமிழரசனே இந்த உடமைகளுக்கு உரியவன் என்று கூறி இருக்க வேண்டும். ஆனால் ஒரு படி மேலே சென்று , தமிழரசனுக்கும் உடமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அடி ஆதாரத்தையே குலைக்கும் வேலையை செய்து இருக்கிறார்.

மேலே தமிழரசன் என்ற இடத்தில் 'தமிழர்' என்றும்,
ஆரியா என்ற இடத்தில் 'பார்ப்பனிய இந்துத்துவா' என்றும்,
திவாகர் என்ற இடத்தில் 'திராவிடம்' என்றும்,
தலிக்கா என்ற இடத்தில் 'தலித்தியம்' என்றும் போட்டு மீண்டும் படியுங்கள். உங்களுக்கு ஒரு உண்மை புரியும்.

> இந்திரன் ஆரியக்கடவுள் என்பது போன்ற திராவிடர்களின் உளறலின் உள் அர்த்தம் இப்போது புரிந்திருக்கும்.
> ஒரு உதாரணத்துக்கு, தமிழ் குடியான பள்ளர்களை/பறையர்களை ஏன் தலித்தியவாதிகள் 'நீங்களெல்லாம் தமிழர்களே அல்ல, பூர்வீக பவுத்தர்கள்' என்று பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

ஆம்,
ஆரியம் - திராவிடம் - தலித்தியம் ===> இந்த மூன்றுமே 'மண்ணின் மைந்தர்கள்' என்ற கருத்தியலுக்கு எதிரானது என்று புரியும். 'தமிழர்' என்ற கருத்தியலுக்கு எதிரானவை என்று புரியும். அந்த அடிப்படையில் இவை மூன்றையுமே நாம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும், புறம்தள்ள வேண்டும் என்றும் புரியும்.

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

07 November 2013

தமிழருக்கான அரசியலின் அடிப்படை

அரசியல் அடிப்படை
குறிப்பு: தங்கத்தை உரசிப்பார்க்கும் உரைகல் போல, இந்த 'அரசியல் அடிப்படை' என்ற கருவியை உங்கள் முன் 'தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்' வைக்கிறது. இது புது கருத்து ஒன்றும் இல்லை. ஏற்க்கனவே பலருக்கு தெரிந்தது தான். ஆனால், பொது வாழ்க்கையில் நுழைய விரும்பும் எவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய அடிப்படை இவை என்பதால் விரிவாக பகிர்கிறோம். இந்த கருவியை கொண்டு உலக அளவில் நடக்கும் அரசியலை நீங்கள் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்ப்பது மட்டும் இன்றி, இங்கே குறிப்பாக தமிழர் அரசியல், ஈழத்தமிழர் அரசியல் என்று அரசியல் செய்வோர்கள் நல்லவர்களா, தீயவர்களா,அப்பாவிகள் என்றும் உங்களால் கணிக்க முடியும். மேலும் நமக்கான அரசியல் பாதை என்ற ஒன்று இருக்கிறதா, இல்லையா என்றும், இருக்கிறது என்றால் எது, இல்லை என்றால் எப்படி உருவாக்குவது என்றும் இந்த கட்டுரை ஒரு சிறு வெளிச்சத்தை தரும் என்று நம்புகிறோம்.



பொதுவாக நாகரிக மனித சமூகத்தை மூன்று பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். (குறிப்பு: இவை பொருளாதாரம் என்ற ஒன்றை மட்டும் வைத்து அளக்கப்படுவது இல்லை. சமூக பங்களிப்பு என்பதை பொறுத்தவை இந்த வர்க்கங்கள்.).

1. அதிகார வர்க்கம்  (சுமார் 2%)

2. நடுத்தர வர்க்கம் (சுமார் 60-75%)

3. பாட்டாளி வர்க்கம் (சுமார் 25-30%)



பாட்டாளி வர்க்கத்தின் குணநலன்
> அப்பாவிகள், எளிதில் ஏமாறுபவர்கள்/ஏமாற்றப்படுபவர்கள்
> அன்றாடம் காய்ச்சிகள்
> அடிமட்ட அரசியல் தொண்டர்கள்
> சதுரங்கத்தில் சிப்பாய்கள் போல களம் இறக்கப்படுபவர்கள்,முதலில் களப்பலி ஆகுபவர்கள்
> அதிகார வர்கத்தால் பயன்படுத்தப்படுபவர்கள்.
> தொலைநோக்கு சிந்தனையோ, அரசியல் அறிவோ, தன்னை சுற்றி நிகழும் நிகழ்வுகளையோ அறிந்து வைத்திருக்காத பாமரர்கள்
> புரட்சியையோ, கிளர்ச்சியையோ,சமுதாய மாற்றமோ நடை பெற வேண்டும் என்றால் கூட இவர்களால் தன்னிச்சையாக செய்ய முடியாது. அதற்க்கும் இவர்கள் நம்பி இருப்பது அதிகார வர்க்கத்தை தான்.

நடுத்தர வர்கத்தின் குணநலன்
> காய்ச்சல் வருவதற்கு முன்பு மருந்து சாப்பிடும் பொதுமக்கள்.
> கருத்தியலை பின்பற்றுபவர்கள். அந்த கருத்தியல் உம் (திராவிடம்,இந்து மதம், சாக்கியம்) போல எதுவாக வேண்டும் என்றாலும் இருக்கலாம். ஆனால் இந்த நடுத்தர வர்க்கம் அதை பின்பற்ற மட்டுமே செய்யும்
> தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று வாழ்பவர்கள்.
> அதிகார வர்க்கத்தால் மறைமுகமாக பாதிக்கப்படுபவர்கள்.
> அதிகார வர்க்கம் என்ன கெடுதல் செய்தாலும் அதை தாங்கி அதற்க்கு தகுந்த மாதிரி வாழப்பழகியவர்கள்.
> கிளர்ச்சி,புரட்சி,சமூக சிந்தனை,மாற்றம் என்று எதை பற்றியும் அலட்டிகொள்லாதவர்கள்.
> இவர்களால் அதிகார வர்க்கத்துக்கு எந்த காலத்திலும் பாதிப்பு இல்லை.

அதிகார வர்க்கம்
> இந்த 2% மட்டுமே உள்ள இவர்கள் தான் மீதம் இருக்கும் 98% நடுத்தர வர்க்கமும், பாட்டாளி வர்க்கமும் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பார்கள். அவர்கள் என்ன உடுத்த வேண்டும், என்ன படிக்க வேண்டும், என்ன உண்ண வேண்டும், இன்னும் சொல்லப்போனால் 98% மக்கள் உயிர் வாழ வேண்டுமா வேண்டாம் என்பதை கூட இந்த 2% அதிகார வர்க்கமே முடிவு செய்யும்.
> ஒட்டுமொத்த உலக அரசியலிலும் இந்த 2% அதிகார வர்க்கத்தின் ஒவ்வொரு அசைவுகளும் தான் இந்த உலகத்தின் தலை எழுத்தையே தீர்மானிக்கிறது.
> இந்த அதிகார வர்கத்தில், கீழ்க்கண்ட வகையான நபர்கள் உள்ளனர்.

* கருத்தியலை உருவாக்குபவர்கள்
* அந்த கருத்தியலை வலுவாக அடியொற்றி அரசியல் செய்பவர்கள்
* முதலாளிகள், தொழில் வல்லுனர்கள்
* மக்கள் வெகுஜன ஊடக உரிமையாளர்கள்
* கொள்கை வகுப்பாளர்கள்
* பரவலாக அறியப்பட்ட அறிவுஜீவிகள்
etc....

எனவே "பொதுவாழ்வில் 98% மக்களுக்கு பயனளிக்கும் வகையில் யார் யாரெல்லாம் செயல்பட நினைக்கிறார்களோ, அவர்களின் இலக்கு அதிகார வர்கத்தில் இடம் பிடிக்க முயற்சிப்பதே" ஆகும். மற்றபடி வேறெந்த வர்கத்தை குறிவைத்து நாம் நகர்ந்தாலும், அந்த போராட்டமும், முயற்சியும் அப்போதைக்கு தீர்வாக இருக்கலாமே ஒழிய, நிரந்தர தீர்வாக இருக்காது. இந்த அடிப்படை உண்மையை உள்வாங்கி கொண்டு, அதிகார வர்க்கத்தை இன்னும் சற்று நுணுக்கமாக அலசுவோம்.

அதிகார வர்கத்தில் இருக்கும் அனைவருமே நல்லவர்களும் அல்ல, கெட்டவர்களும்அல்ல.
=> அதிகார வர்கத்தில் உள்ள 90% பேர் கிரிமினல்களே.....!!! இந்த கணக்கு எல்லா காலத்துக்கும், எல்லா நாட்டில் உள்ள சமூக கட்டமைப்புக்கும் பொருந்தும்
=> மீதம் உள்ள வெறும் 10% பேர் மட்டுமே மற்ற அனைவரை காட்டிலும் நேர்மையானவர்கள். இந்த 10 சதவீத அதிகார வர்க்கத்தால் தான், இன்றும் உலகம் உருப்படியாக இயங்கி கொண்டு இருக்கிறது.

எப்போதெல்லாம் மேலே குறிப்பிடப்பட்ட 10% பேரின் கை ஓங்கி, மீதம் உள்ள 90% அதிகார வரகத்தின் கையை விட ஓங்கி இருக்கிறதோ அந்த காலம் தான் வரலாற்றில் பொற்காலம் என்றும், அந்த ஆட்சியையே நல்லாட்சி என்றும் காலம் பதிவு செய்கிறது. 

நிற்க. ஆக தமிழருக்கு தலைமை தாங்க நினைக்கும் எந்த ஒரு தலைமையும்,அமைப்பும் செய்ய வேண்டியது இவையே.

> அதிகார மையத்தை நோக்கியதாக தங்கள் செயல்திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.
> 10% அதிகார மையத்தில் உண்மையானவர்களாக இருப்பதோடு மட்டும் இன்றி, மீதம் உள்ள 90% சதவீத கிரிமினல் அதிகார வர்க்கத்தை இராஜதந்திர காய் நகர்த்தல்களின் மூலம் கட்டுக்குள் வைத்திருக்கவும் செயல்திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

சரி. தமிழருக்கு தலைமை தாங்க நினைக்க எவரும் அந்த 10% அதிகார மையத்தில் இடம் பிடிப்பது எல்லாம் சரி. அதை யார் செய்வது எப்படி செய்வது?. அதை பார்க்கும் முன்பு, ஒட்டு மொத்த அதிகார வர்க்கமும் உலக வரலாற்றில் எப்படி தங்கள் இலக்கை அடைய காய் நகர்த்தினார்கள் என்பதற்கு சில உதாரணங்களை பார்ப்போம்.

1.அதிகார வர்க்கம் கருத்தியலை உருவாக்கும்
2.அந்த கருத்தியலை பரப்புரை செய்யும்
3.அந்த கருத்தியல் ஒட்டி, பாட்டாளி வர்க்கத்தை தனக்கு தேவையானபடி ஒருங்கிணைத்து பயன்படுத்திக் கொள்ளும்.

உதாரணம்#1: (கிரிமினல் அதிகார வர்க்க சிந்தனை)
1.மாக்ஸ் முல்லர் ஆரிய கருத்தியலை உருவாக்குகிறார்.
2.அதை அவர் தொட்டு பலரும் பரப்புரை செய்கின்றனர்.
3.அந்த ஆரிய கருத்தியலை ஒட்டி பிராமணர்கள்,இந்து மதத்தையும் இந்தியாவையும் கட்டி எழுப்புகின்றனர்.பாட்டாளி வர்க்கத்தை 'இந்து' மடத்தை காக்க பயன்படுத்துகின்றனர்.

அப்படி என்றால் பிராமணர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று நினைத்தால் நாம் செய்ய வேண்டியது 'பிராமணாள் கபே'வை உடைப்பது அல்ல. மாக்ஸ் முல்லரை, அவரின் ஆரிய கருத்தியலை உடைக்க வேண்டும்.

உதாரணம்#2 (மக்களுக்கான சிந்தனை)
1.புத்தர் 'ஒடுக்கப்பட்டோருக்கான மீட்சி' என்ற கருத்தியலை உருவாக்குகிறார். அதனை ஒட்டி 'புத்த மதம்' தோற்றுவிக்கப்படுகிறது.
2.அதை பலரும் பரப்புரை செய்கின்றனர்.
3.பின்பு புத்தமதம் பாட்டாளி மக்களை ஒருங்கிணைத்து, கிளர்ந்து வளர்ந்தது.

அப்படி என்றால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்க நாம் செய்ய வேண்டியது இவை தான். இதற்க்கு சற்று காலம் பிடிக்கும். ஆனால் கண்டிப்பான வெற்றியை இனி வரும் அனைத்து தலைமுறைக்கும் தரும் என்று நம்புகிறோம்.

1. தமிழருக்கான கருத்தியல் உருவாக்கப்பட வேண்டும். அந்த கருத்தியலில் யார் தமிழர், என்ன அவர்களின் தேவை என்பவை தெளிவாக குறிப்பிட பட வேண்டும். மிக விரிவாக அலசி ஆராயப்பட்டு விவாதிக்கப்பட்டு உறுதி செய்யப்பட வேண்டும். (உம்: 'தமிழர் அரசு' என்பது தமிழருக்கான ஒரு கருத்தியல்).
2. தமிழருக்கான கருத்தியலுக்கு எதிர் கருத்தியல்கள், சிந்தனைகள் அனைத்தும் உடைக்கப்பட வேண்டும். (உம்: தலித்தியம்,திராவிடம்,ஆரியம்)
3. தமிழருக்கான கருத்தியல் பரப்புரை செய்யப்பட வேண்டும்.
4. மீதம் இருக்கும் 98% மக்களும் அவர்களை அறியாமலேயே இதை பின்பற்ற அவர்களாகவே தொடங்குவார்கள்.
5. அந்த கருத்தியலை ஒட்டி அரசியல் தொடங்கப்பட வேண்டும்.
6. அந்த அரசியல ஒட்டி களம் காணும்போது, கருத்தியலால் ஒருங்கிணைக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம், தமிழருக்கான அதிகார வர்க்கத்துடன் கை கோர்த்து இலக்கை அடைய உதவும்.

தமிழருக்கான கருத்தியலை உருவாக்க,விவாதிக்க சக தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்