09 July 2013

தமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே...!!!

கேள்வி: பார்ப்பன அடிவருடிகளான சேர,சோழ,பாண்டியர்களால் தான் தமிழன் தீண்டத்தகாதவன் ஆக்கப்பட்டான். தமிழன் இன்று தலைகுனிய காரணமே ஆரிய பார்ப்பானும், மூவேந்தர்களும் தான். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:
பொதுவாக தமிழக வரலாறை பேசும் எவரும், குறிப்பாக திராவிட இயக்கத்தாரும் மூவேந்தர் வரலாறு, ஆரியர் வருகை, பார்ப்பனியம் என்று பேசி விட்டு, ஒரே தாவாக தாவி தமிழக வரலாறை முகலாயர்,ஆங்கிலேயர் என்று கடத்திவிடுவார்கள். இடைப்பட்ட சுமார் 500 வருட வரலாறை அவர்கள் பேசவே மாட்டார்கள். அப்படி பேசினாலும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அப்படி அந்த 500 வருட இடைப்பட்ட வரலாற்றில் என்ன தான் நடந்தது? அதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

அதற்க்கு முன்பு எமக்கு 'ஆரியம்,திராவிடம்,தலித்தியம்' என்ற கருத்தியல்களில் நம்பிக்கை இல்லை என்பதையும், இங்கே யாம் பேசும் ஆரியம்,திராவிடம் அனைத்தும் திராவிட இயக்கங்களின் பார்வையில், அவர்கள் இது நாள் வரை கூறி வந்த விசயங்களின் அடிப்படையிலேயே அலசப்படுகிறது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

தமிழனை வீழ்த்தியது திராவிடன்(வடுகர்கள்)..!!

மூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை. அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது? இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது. அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள்? காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்.

* தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது. அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா? எந்த ஆரிய பார்ப்பனா தமிழன் மீது போர் தொடுத்தான்? பதில் உண்டா? வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை. மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு. இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.

* பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல. அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கருனாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல். மானவக் குலம்  என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது. 'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும். அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்.
Source: http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka10.htm

* தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும். குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு.

* என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர். சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே.  அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்துகொண்டது இல்லை. இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும். பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார்,வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது.


நாயக்கர் ஆட்சியின் கேடுகள்
* உண்மையில் தமிழர் மீதான நாயக்கரின் போர் என்பது இனப் போர் அல்ல. தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நடந்த மொழிப் போர். தமிழை தூக்கி எறிந்து விட்டு,சமஸ்கிருதத்தை முன்னிறுத்த நடந்த போர்.
* > இந்த நாயக்கர் ஆட்சியில் தான் கோவிலில் இருந்த தமிழ் தூக்கி எறியப்பட்டு சமஸ்கிருதம் உள்ளே வந்தது.
> அதுவர இருந்த தமிழ் பிராமணர்களை(அய்யர், அய்யங்கார்) வெளியேற்றி தெலுங்கு பிராமணர்களை பணிக்கு அமர்த்தியது.
> தமிழ் மக்கள் கீழ் நிலை படுத்தப்பட்டு தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரம், நிலம் உடமைகளை கைப்பற்றினர்.
> தமிழ் ஆட்சி மொழி அந்தஸ்தை இழந்து, சமஸ்கிருதம் ஆட்சி மொழியானது. பெரியார் உள்ளிட்டோர் தமிழை சாடுவதும், ஆங்கிலத்தை பேணுவதும் அவரின் முன்னோர்கள் வழி வந்த எண்ணம் தான்.
> அது வரை இருந்த ஆட்சி கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டு, தமிழர் நிலம் முழுவதும் 'பாளையங்களாக' பிரிக்கப்பட்டு, பாளையப்பட்டு முறை கொண்டுவரப்பட்டது.
தமிழனை வீழ்த்தியதற்கு அடையாளமாய் ஆமையை கொல்லும் நாயக்கர் சிலை (Source: Mr.Orissa Balu)

> ஒவ்வொரு பாளையத்திலும் "இனி தமிழன் எழ கூடாது" என தெலுங்கர்கள் இராணுவத்தை ஆங்காங்கே நிறுத்தி வைத்தனர். தமக்கு உதவிய சில கைக்கூலி தமிழ் சாதிகளுக்கு வறண்ட, புழகத்துக்கு புரோஜனம் இல்லாத பாளையங்கள் சன்மானமாக வழங்கப்பட்டன.
> மண்ணின் மைந்தர்களை இழித்தும் பழித்தும் பேச புது இளைக்கிய வகையான 'பள்ளு இலக்கியம்' போன்றவை உருவாக்கப்பட்டன.
> 'பார்த்தாலே தீட்டு, தொட்டாலே தீட்டு' என்று தமிழ் இனம் சாதி புதை சேற்றில் புதைத்து ஒழிக்கப்பட்டது.

* பின்பு குல்பர்கா அரசின் அரசனான வெங்காசி என்ற மராட்டிய வந்தேறியின் படை எடுப்பைத் தொடர்ந்து சோழர்களின் தலைநகராம் தஞ்சையில் மராத்தியர் ஆட்சி அமைந்தது. இன்று வரை எம் பாட்டன் ராஜ ராஜனின் திரு உருவ சிலை கோவிலுக்கு வெளியில் கேட்பாரற்று கிடக்க முக்கிய காரணமே இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு நிர்வாகியாக விளங்கும் மராட்டியரே ஆகும்.

இதில் இருந்து யாம் தெரிந்து கொள்வது:
* தமிழும், தமிழரும் ஆரியப்படை எடுப்பால் கெட்டதாக வரலாறு இல்லை. 'திராவிடராம்' கன்னடர்,தெலுங்கர்,மராத்தியர் ஆகியோரின் படைஎடுப்பாலே தமிழன் வீழ்ந்தான். இது மறுக்க முடியாத கசப்பான உண்மை.
* தமிழக மண்ணில் எந்த காலத்துக்கும் வடுகர்களின்(கன்னடர்,தெலுங்கர்) ஆதிக்கமே நீடிக்க வேண்டும் என்பதற்காக, இல்லாத ஆரிய பூச்சாண்டியை காட்டியதே திராவிடர்களின் உக்தி என்பதும் தெளிவாகிறது.

மூவேந்தர்கள் யோக்கியர்களா? 

    மூவேந்தர்களை பார்ப்பன அடி வருடி என்றும், இன்றும் தமிழன் தாழ்ந்ததற்க்கு அவர்கள் தான் காரணம் என்று திட்டமிட்டு பரப்புரை செய்து வரும் திராவிட இயக்கத்தினரின் போக்கிற்கு ஒரு உதாரணத்தையும், அவர்களின் பார்வையில் இருக்கும் ஓட்டைகளையும் இங்கே பார்க்கலாம். இதன் மூலம் தங்களது 'ஆரிய திராவிட' கருத்தியலை நிலை நிறுத்த மட்டுமே திராவிடர்கள் மூவேந்தர்களை அணுகி உள்ளார்கள் என்றும், அவர்களின் நோக்கம் தமிழன் தாழ்வுற்ற பழியை அனைத்தையும் பார்ப்பனர்களின் மீதும், மூவேந்தர்களின் மீதும் திணிப்பது மட்டுமே என்பதும் தெளிவாக விளங்கும்.

திராவிட பார்வையில் ராஜ ராஜன்
ராஜ ராஜ சோழன் நான்…. -- பாமரன்

மார்க்சிய பார்வையில் ராஜ ராஜன்
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–1  -- ஜெயமோகன்
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2  -- ஜெயமோகன்

இருப்பினும் மூவேந்தர்கள் தொட்டு தமிழ் மன்னர்களின் வாழ்வியலை உலக கண்ணோட்டத்தில் முதலில் அலசுவோம்.

* பல்லவர்களின் காலத்துக்கு முன்பு பிராமணர்கள் என்ற ஒருங்கிணைப்பு இந்தியாவில் எங்கும் கிடையாது. அந்த அந்த கோவிலில் பூசாரிகள், அந்த அந்த பகுதி கோவிலை பராமரித்தனர். திராவிட இயக்கத்தினர்கள் சொல்வது போல பிராமணர்கள் ஆரியர்களோ, வெளியில் இருந்து வந்தவர்களோ அல்ல. அவர்கள் இந்த மண்ணிலேயே இருந்து வாழ்ந்து, பின்னர் 'ஆரிய கருத்தியலால்' தங்களின் நலம் பேண தங்களை தாங்களே ஆரியர்கள் என்று சொல்லி கொண்டனர். அவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் அல்ல என்பதற்கும், அவர்கள் இந்த மண்ணிலேயே இருந்து உதித்தவர்கள் என்பதற்கும் இந்த மரபணு ஆய்வு ஒரு உதாரணம்.ஆதாரம்: 
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf

* சாதிகள் என்பது (உண்மையில் சாதி என்ற வார்த்தை தமிழில் இல்லை. சாதி என்பதற்கு பதிலாக இனக்குழு என்றே பயன்படுத்த வேண்டும்) ஆரிய பார்ப்பனர்களால் தமிழ் சமூகத்தில் புகுந்தது இல்லை. அது கைபர்,போலன் கணவாய் மூலம் அவர்கள் இங்கே வந்ததாக திராவிடர்கள் கூறும் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழரிடம் இன்னும் சொல்லப்போனால் இந்தியா முழுவதும் இருந்து வந்துள்ளது. எனவே சாதி கட்டமைப்பை உருவாக்கினது தமிழனே. ஆரியன் அல்ல.
உதாரணம்: சிந்து சமவெளி நாகரிகம் என்ற திராவிட நாகரிகத்தில் மக்கள் பிரிவுகள் (சாதிகள்) இருந்துள்ளன.
"Both civilizations, India and China, utilized a feudalistic political system"
"The Indus Valley had a strong centralized government led by a priest king"
Source: 
http://www.studymode.com/essays/Early-Civilizations-Comparison-China-And-The-428024.html
* "The Rise and Spread of Civilization in India and China

* எல்லாவற்றிக்கும் மேலாக நால்வர்ண பிரிவுகள் (fuedal system) என்ற சமூக கட்டமைப்பு உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து நாகரிகங்களிலும் உள்ளது குறிப்பிடத் தக்கது. இதில் இருந்து ஆரிய பிராமணர்கள் தான் தமிழனிடம் சாதியை,நால்வர்ணத்தை விதைத்தார்கள் என்னும் திராவிடர் இயக்கங்களின் கட்டுக்கதை பொய் என்று நிரூபணம் ஆகிறது.

உதாரணங்கள்:எனவே ஆரியர்கள் வந்தார்கள், அவர்கள் தான் சாதியை கண்டு பிடித்தார்கள், மூவேந்தர்களை கையில் போட்டு கொண்டு தமிழரை அடிமை படுத்தினார்கள் என்ற திராவிடர்களின் கட்டு கதைகள் பொய்யாகி விட்டன. 

அப்படியானால் இந்த நால்வர்ண பிரிவுகள் சரியா என்று நீங்கள் கேட்கலாம். அது அந்த காலத்துக்கு பொருந்தி இருக்கலாம். ஆனால் இந்த காலத்துக்கு அது ஒத்து வராது. இன்னும் சொல்லப்போனால் அந்த நால்வர்ணத்தை யார் உருவாக்கினார்களோ அவர்கள் தான் அதை சரிசெய்யவோ, தூக்கி எறியவோ, அதில் திருத்தம் செய்யவோ வேண்டும். ஆனால், தமிழனை வீழ்த்திய திராவிடர்களிடம்(தெளுங்கர்களிடம்) இந்த பொறுப்பை ஒப்படைப்பது, சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வதற்கு சமம். இத்தனை காலம் சாதி ஒழிப்பு,கலப்பு திருமணம், சாதி மறுப்பு திருமணம் என்ற போர்வையில் திராவிடர்கள் இங்கே செய்து கொண்டிருப்பது தமிழனை ஒட்டு மொத்தமாக அழித்து ஒழிக்க கையாண்டு கொண்டிருக்கும் தந்திரம் ஆகும்.

எனவே தமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே....திராவிடனே....திராவிடனே....!!!

-- இவண் --
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

14 comments:

 1. An Eye Opener ! Let the message spread to every nook and corner of our society and wake up the hapless Tamilians from slumber ! A whiplash for the hypocritic demagogues !

  ReplyDelete
 2. Eagandanambi Eagandan

  ஆரியத்தை கொண்டாடியது இந்த தெலுங்கு,கன்னட நாயக்க மன்னகள் தான். இந்த தெலுங்கு கன்னட நாய்க்கமன்னர்கள் ,ஹரிகரபுக்கர் என்ற ஆரியனின் வழிகாட்டுதலோடு இந்து சனாதன தர்மத்தைக் காக்க ,தென்னகம் முழுமையும் ஆரியத்தின் மனு தர்மத்தை நிலை நிறுத்தத் துணை போனவர்கள்.இந்த நாயக்க மன்னர்களின் உதவியோடு தான் தமிழ்நாட்டில் உள்ள சிவன் கோயில்களில் கொடிமரத்தின் இடது புறம் ஹர்கர புக்கனின் சிலையை வைத்து அவ்ரையும் தமிழ் மக்கள் வழிபடவைத்தனர்,தங்கள் ஆதிக்கத்தால் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.எனவே தமிழர்களே இனி சிவன் கோயிலில் உள்ள ஹரிகரபுக்கரின் சிலையை வணங்கவேண்டிய அவசியம் இல்லை என்பதை உணருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் பனி தொடரட்டும்

   Delete
  2. //ஆரியத்தை கொண்டாடியது இந்த தெலுங்கு,கன்னட நாயக்க மன்னகள் தான். இந்த தெலுங்கு கன்னட நாய்க்கமன்னர்கள் ,ஹரிகரபுக்கர் என்ற ஆரியனின் வழிகாட்டுதலோடு இந்து சனாதன தர்மத்தைக் காக்க///

   ஆக இதர்க்கு மூலக்காரணம் ஆரியம் தானே... தெலுங்கர்களையும் சேர்த்து தானே ஆரியர்கள் ஏமாற்றி இருக்கிறார்கள்.... அதை தானே திராவிட கட்சி எதிர்க்கின்றது....
   ஆரியர்கள் வருகைக்கு முன்னர் அய்யர்கள் இருந்தார்கள் ஆனால் அவர்கள் ஆரியர்கள் அல்ல, தமிழரிகள் (ஆசிரியர்கள் / சமனர்கள் / புத்தர்கள் - எ.டு. திருவள்ளுவர்)

   தமிழ் அய்யர்களை கொன்று விட்டு அங்கே ஆரிய அய்யர்களை வைக்கப்பட்டனர்... அதை தானே திராவிட கட்சி எதிர்க்கின்றது....

   நால் வகை சமுதாய கட்டமைப்பு இருந்தது சரி தான், அதி எப்போழுது தீண்டாமை வந்தது... அதை கொண்டு வந்தது ஆரியம் தானே....?

   Delete
 3. அட தெலுங்கு நாய்களா கோவிலுக்குள் எங்கும் விழுந்து கும்பிடுவது தவறு கொடி மரத்தடியில் மட்டுமே வணங்கவேண்டும் என்று பொய்கதை சொல்லி தெலுங்கன் ஹரிகரன் புக்கன் கால்களில் விழுந்து கும்பிட செய்தீர்களா? இதை எல்லாம் அனைத்து தமிழருக்கும் உடனடியாக கொண்டு செல்லுங்கள் அய்யா அப்படி செய்தால் தான் உண்மையிலேயே தமிழனுக்கு பிறந்தவன் எல்லாம் சைகோ பின்னாலும் தண்ணிவண்டி தேனா மூனா கருவராகத்தின் பின்னாலும் பல்லக்கு தூக்கி திரியமாட்டார்கள் தமிழர் ஆய்வு நடுவத்துக்கு கோடானு கோடி நன்றிகள் உங்கள் கட்டுரைகளை நாங்களும் மக்களிடம் கொண்டு செல்ல அனுமதியுங்கள் நன்றி 9283145266

  ReplyDelete
  Replies
  1. //உங்கள் கட்டுரைகளை நாங்களும் மக்களிடம் கொண்டு செல்ல அனுமதியுங்கள் //

   கண்டிப்பாக கொண்டு செல்லுங்கள். எம் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு.

   Delete
  2. Why telugus came ? because muslims invaded tamil land and captured madurai from 1314 AD to 1370 AD islam ruled madurai. People of madurai suffered . Kannadigas and telugus rescued madurai. From 1370 to 1530 Madurai was handed to pandyas. IN 1530 AD pandyas were defeated by a Chola prince. And Vijayanagara Army came to rescue the Pandya. But nagama nayak did not hand over the power to pandya because madurai was badly maintained. Emperor Achutha Raya accepted this and Nayakas came to rule Madurai. It is muslims who betrayed Pandyas during malik kafur invasion. talk about that.

   Delete

 4. மக்களே இதில் இருந்து சில வரலாற்றை தெரிந்துக்கொள்ளுங்கள்... ஆணால் திரவிடத்தை எதிர்க்கும் என்னத்தில், உங்களை ஒரு தவறான கண்ணோட்டதிதில் அழைத்துச் செல்கின்றனர்...
  மறுபடியும் பார்ப்பான ஆதிக்கத்தை உள்ளே கொண்டுவர பார்க்கிறார்கள்.. இந்த காலகட்டத்திலும் பார்ப்பானர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லவில்லை... "we are hindu brahmins" அப்படிதான் சொல்கிறார்கள்....

  மற்ற மாநிலத்தவரை ஆதரித்து பார்ப்பானியர்கள் தான், இன்றும் பல நிறுவனங்கள் கன்னட ஐயர், கேரல ஐயர்-கள் கையில்தான் இருக்கிறது... இவர்கள் வந்தது திரவிட கட்சியின் ஆட்சியில் இல்லை, அதர்க்கு முன் இருந்த பார்ப்பான ஆட்சியில் தான்...

  தமிழ்க்கு தனி நாடு கேட்டு வாங்கலாம் ஆணால் அதில் பார்ப்பானியம் வேண்டவே வேண்டாம்.... இன்றாலவும், வங்கிகளிலும், தனியார் நிறுவனங்களிலும், மற்ற அரசு அலுவலகங்களிள் பார்ப்பானர்கள் தலமை பதவில் இருந்துக் கொண்டு தமிழர்களை வலர விடாமல் மற்ற மாநில பார்ப்பானர்களை ஆதரிக்கிரார்கள் இதை நீங்களே கண்கூடாக பார்திருப்பிர்கள்... எ.டு. ரஜினி(சிவாஜி ராவ் - கன்னட ஐயர்), கமல் இவகளை வளர்த்தது, கே.பாலசந்தர்(ஐயர்) தான், தமிழ் இளஞ்ச்சர்கள் விடாமல் பார்த்துக் கொண்டனர்....

  (வடிவேலு ஸ்டைலில்) உஷார் ஐயா... உஷாரு...!!

  ReplyDelete
 5. அவசியமாகவும் அவசரமாகவும் தமிழர்கள் அறிந்து, புரிந்து கொள்ள வேண்டிய அருந்தகவல்கள். நன்றி!

  ReplyDelete
 6. ஆரியர்.&திராவிடர் இரன்டுநபர்களுக்கும் ஒரு ஒற்றுமைஇருக்கிறது.
  (தமிழர்களிடம் உள்ள தெய்வப்பக்தியும்,(எதையுமேஅறிவுப்பூர்வமாக சிந்திக்காமல்) ஐயா என்றால் (ஐயோபாவம்)என்று சொல்லும் தமிழர்களின் நற்குணத்தையும்
  தெரிந்துகொண்ட ,
  கெட்ட குணம் கொண்ட ஆ.தி.தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.
  இதுதான் உண்மை நிலை தமிழர்களுக்கு தமிழ் தான்பேசவரும்.
  (தமிழனுக்குவேறமொழி பேசத்தெரியாது.)
  தமிழன்டா
  ரா.ரதிஷ்குமர்

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி