09 July 2013

தமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே...!!!

கேள்வி: பார்ப்பன அடிவருடிகளான சேர,சோழ,பாண்டியர்களால் தான் தமிழன் தீண்டத்தகாதவன் ஆக்கப்பட்டான். தமிழன் இன்று தலைகுனிய காரணமே ஆரிய பார்ப்பானும், மூவேந்தர்களும் தான். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:
பொதுவாக தமிழக வரலாறை பேசும் எவரும், குறிப்பாக திராவிட இயக்கத்தாரும் மூவேந்தர் வரலாறு, ஆரியர் வருகை, பார்ப்பனியம் என்று பேசி விட்டு, ஒரே தாவாக தாவி தமிழக வரலாறை முகலாயர்,ஆங்கிலேயர் என்று கடத்திவிடுவார்கள். இடைப்பட்ட சுமார் 500 வருட வரலாறை அவர்கள் பேசவே மாட்டார்கள். அப்படி பேசினாலும் முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். அப்படி அந்த 500 வருட இடைப்பட்ட வரலாற்றில் என்ன தான் நடந்தது? அதை கொஞ்சம் விரிவாக பார்ப்போம்.

அதற்க்கு முன்பு எமக்கு 'ஆரியம்,திராவிடம்,தலித்தியம்' என்ற கருத்தியல்களில் நம்பிக்கை இல்லை என்பதையும், இங்கே யாம் பேசும் ஆரியம்,திராவிடம் அனைத்தும் திராவிட இயக்கங்களின் பார்வையில், அவர்கள் இது நாள் வரை கூறி வந்த விசயங்களின் அடிப்படையிலேயே அலசப்படுகிறது என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

தமிழனை வீழ்த்தியது திராவிடன்(வடுகர்கள்)..!!

மூவேந்தர்கள் மீது இது வரை எந்த ஆரிய பார்ப்பானும் படை எடுத்து வந்து வீழ்த்தியது இல்லை. அப்படி என்றால் யார் தான் வீழ்த்தியது? இந்த வரலாறு தான் அந்த 500 வருடத்தில் அடங்கி இருக்கிறது. அதை தான் திராவிட சிகாமணிகள் மறைக்கிறார்கள். ஏன் மறைக்கிறார்கள்? காரணம், தமிழனை வீழ்த்தியதே இந்த திராவிட சிகாமணிகளின் முன்னோர்களான தெலுங்கர்கள் தான் என்பதால்.

* தமிழரின் தாயகம் கடைக் கழக காலத்திலேயே வேங்கடம் முதல் குமரி வரை என சுருங்கி விட்டது. அதன் பின்னர் எந்த நேரடி ஆரிய படை எடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்தது உண்டா? எந்த ஆரிய பார்ப்பனா தமிழன் மீது போர் தொடுத்தான்? பதில் உண்டா? வடக்கில் இருந்து எந்த ஆரிய படை எடுப்பும் விந்திய மலைக்கு தெற்க்கே வந்து வெற்றி பெற்றதே இல்லை. மாறாக, தமிழ் பேரரசர்களே வடக்கு நோக்கிப் படை செலுத்தி வென்று கொடிநாட்டிய வரலாறுகள் உண்டு. இருப்பினும், வென்ற இடங்களை யாதொரு தமிழரசனும், பிடித்தாண்ட வரலாறு இல்லை. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன், பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் முதலானோர் பல வடக்கத்திய நாடுகளை வென்று திரை கொண்டு வந்தாரே அன்றி, அவற்றை பிடித்து ஆள எண்ணியதே இல்லை.

* பிராமணிய கொடுநெரிகளைச் சட்டவடிவமாக்கிய 'மனு நூல்', ஆரியரால் ஆக்கப்பட்ட நூல் அல்ல. அது கி.பி.நான்காம் நூன்றாண்டில் கருனாடகத்து (திராவிடன்) கடம்பப் பேரரசனான மயூரவர்மனின் அவையில் அரங்கேற்றப் பெற்ற சட்ட நூல். மானவக் குலம்  என்பது 'ஆரிபுத்திரனின் வழிவந்த' கடம்ப்பரையும், சாளுக்கியரையுமே குறித்தது. 'மானவத் தருமநூல்' எனப்பட்ட மனுநூல் இதனால் கருனாடகத்து கன்னட அரசர் ஆக்கிய நூலேயாகும். அதையொத்த ஆவத்தம்பா சூத்திரம், போதாயன சூத்திரம், நாரதர் சூத்திரம் முதாலான பிராமனியாயச் சட்ட நூல்களும் கூடத் தென்னகத்தின் 'திராவிட' அரசுகளால் ஆக்கப்பெற்ற சட்ட நூல்களே ஆகும்.
Source: http://www.ourkarnataka.com/states/history/historyofkarnataka10.htm

* தமிழன் மீது ஆரியன் படை எடுத்து வெல்லவில்லை என்றால், வேறு யார் தான் அவர்களை வென்றார்கள் என்ற கேள்வி இயல்பாய் எழும். குலுத்துங்க சோழனுக்கு பிறகு சோழப் பேரரசில் சாளுக்கிய ஆதிக்கம் ஓங்கி வளர்ந்ததும், அதுவே சோழ பேரரசின் வீழ்ச்சியின் ஆரம்பம் என்றும் கருதலாம். இது மண உறவால் சோழர் வீழ்ந்த வரலாறு.

* என்ன தான் மூவேந்தர்கள் வீழ்ச்சி நேரடியாகவும் மறைமுகமாவும் தொடர்ந்தாலும் அவர்கள் தங்கள் தாய் மொழியான தமிழை உயர்த்தியே பிடித்தனர். சமஸ்கிருத கலப்பு இருப்பினும் ஆட்சி மொழி தமிழே.  அதில் ஒருக்காலும் அவர்கள் சமரசம் செய்துகொண்டது இல்லை. இந்த இடத்தில் தான் நாம் 'விஜயநகர பேரரசின்' (திராவிட) படை எடுப்பை கவனிக்க வேண்டும். பாண்டிய பேரரசில் சக்களத்தி மக்களுக்கிடையே நிலவிய அதிகார போட்டியில் தலையிடுவதன் மூலம், Trojan Horse போல் உள்ளே நுழைந்தது இந்த விஜயநகர வடுக பேரரசு (அதாவது பெரியார்,வைகோ உள்ளிட்ட திராவிட தலைவர்களின் முன்னோர்கள்). பின்னர் நாகம நாயக்கன் என்பானின் வழியாக மதுரை அரசையே கைப்பற்றி கொண்டு, 'நாயக்கர் அரசு' என்னும் ஒரு வந்தேறி ஆட்சியை அமைத்தது.


நாயக்கர் ஆட்சியின் கேடுகள்
* உண்மையில் தமிழர் மீதான நாயக்கரின் போர் என்பது இனப் போர் அல்ல. தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் நடந்த மொழிப் போர். தமிழை தூக்கி எறிந்து விட்டு,சமஸ்கிருதத்தை முன்னிறுத்த நடந்த போர்.
* > இந்த நாயக்கர் ஆட்சியில் தான் கோவிலில் இருந்த தமிழ் தூக்கி எறியப்பட்டு சமஸ்கிருதம் உள்ளே வந்தது.
> அதுவர இருந்த தமிழ் பிராமணர்களை(அய்யர், அய்யங்கார்) வெளியேற்றி தெலுங்கு பிராமணர்களை பணிக்கு அமர்த்தியது.
> தமிழ் மக்கள் கீழ் நிலை படுத்தப்பட்டு தெலுங்கர்கள் ஆட்சி அதிகாரம், நிலம் உடமைகளை கைப்பற்றினர்.
> தமிழ் ஆட்சி மொழி அந்தஸ்தை இழந்து, சமஸ்கிருதம் ஆட்சி மொழியானது. பெரியார் உள்ளிட்டோர் தமிழை சாடுவதும், ஆங்கிலத்தை பேணுவதும் அவரின் முன்னோர்கள் வழி வந்த எண்ணம் தான்.
> அது வரை இருந்த ஆட்சி கட்டமைப்பு சீர்குலைக்கப்பட்டு, தமிழர் நிலம் முழுவதும் 'பாளையங்களாக' பிரிக்கப்பட்டு, பாளையப்பட்டு முறை கொண்டுவரப்பட்டது.
தமிழனை வீழ்த்தியதற்கு அடையாளமாய் ஆமையை கொல்லும் நாயக்கர் சிலை (Source: Mr.Orissa Balu)

> ஒவ்வொரு பாளையத்திலும் "இனி தமிழன் எழ கூடாது" என தெலுங்கர்கள் இராணுவத்தை ஆங்காங்கே நிறுத்தி வைத்தனர். தமக்கு உதவிய சில கைக்கூலி தமிழ் சாதிகளுக்கு வறண்ட, புழகத்துக்கு புரோஜனம் இல்லாத பாளையங்கள் சன்மானமாக வழங்கப்பட்டன.
> மண்ணின் மைந்தர்களை இழித்தும் பழித்தும் பேச புது இளைக்கிய வகையான 'பள்ளு இலக்கியம்' போன்றவை உருவாக்கப்பட்டன.
> 'பார்த்தாலே தீட்டு, தொட்டாலே தீட்டு' என்று தமிழ் இனம் சாதி புதை சேற்றில் புதைத்து ஒழிக்கப்பட்டது.

* பின்பு குல்பர்கா அரசின் அரசனான வெங்காசி என்ற மராட்டிய வந்தேறியின் படை எடுப்பைத் தொடர்ந்து சோழர்களின் தலைநகராம் தஞ்சையில் மராத்தியர் ஆட்சி அமைந்தது. இன்று வரை எம் பாட்டன் ராஜ ராஜனின் திரு உருவ சிலை கோவிலுக்கு வெளியில் கேட்பாரற்று கிடக்க முக்கிய காரணமே இன்று தஞ்சை பெரிய கோவிலுக்கு நிர்வாகியாக விளங்கும் மராட்டியரே ஆகும்.

இதில் இருந்து யாம் தெரிந்து கொள்வது:
* தமிழும், தமிழரும் ஆரியப்படை எடுப்பால் கெட்டதாக வரலாறு இல்லை. 'திராவிடராம்' கன்னடர்,தெலுங்கர்,மராத்தியர் ஆகியோரின் படைஎடுப்பாலே தமிழன் வீழ்ந்தான். இது மறுக்க முடியாத கசப்பான உண்மை.
* தமிழக மண்ணில் எந்த காலத்துக்கும் வடுகர்களின்(கன்னடர்,தெலுங்கர்) ஆதிக்கமே நீடிக்க வேண்டும் என்பதற்காக, இல்லாத ஆரிய பூச்சாண்டியை காட்டியதே திராவிடர்களின் உக்தி என்பதும் தெளிவாகிறது.

மூவேந்தர்கள் யோக்கியர்களா? 

    மூவேந்தர்களை பார்ப்பன அடி வருடி என்றும், இன்றும் தமிழன் தாழ்ந்ததற்க்கு அவர்கள் தான் காரணம் என்று திட்டமிட்டு பரப்புரை செய்து வரும் திராவிட இயக்கத்தினரின் போக்கிற்கு ஒரு உதாரணத்தையும், அவர்களின் பார்வையில் இருக்கும் ஓட்டைகளையும் இங்கே பார்க்கலாம். இதன் மூலம் தங்களது 'ஆரிய திராவிட' கருத்தியலை நிலை நிறுத்த மட்டுமே திராவிடர்கள் மூவேந்தர்களை அணுகி உள்ளார்கள் என்றும், அவர்களின் நோக்கம் தமிழன் தாழ்வுற்ற பழியை அனைத்தையும் பார்ப்பனர்களின் மீதும், மூவேந்தர்களின் மீதும் திணிப்பது மட்டுமே என்பதும் தெளிவாக விளங்கும்.

திராவிட பார்வையில் ராஜ ராஜன்
ராஜ ராஜ சோழன் நான்…. -- பாமரன்

மார்க்சிய பார்வையில் ராஜ ராஜன்
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–1  -- ஜெயமோகன்
ராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா?–2  -- ஜெயமோகன்

இருப்பினும் மூவேந்தர்கள் தொட்டு தமிழ் மன்னர்களின் வாழ்வியலை உலக கண்ணோட்டத்தில் முதலில் அலசுவோம்.

* பல்லவர்களின் காலத்துக்கு முன்பு பிராமணர்கள் என்ற ஒருங்கிணைப்பு இந்தியாவில் எங்கும் கிடையாது. அந்த அந்த கோவிலில் பூசாரிகள், அந்த அந்த பகுதி கோவிலை பராமரித்தனர். திராவிட இயக்கத்தினர்கள் சொல்வது போல பிராமணர்கள் ஆரியர்களோ, வெளியில் இருந்து வந்தவர்களோ அல்ல. அவர்கள் இந்த மண்ணிலேயே இருந்து வாழ்ந்து, பின்னர் 'ஆரிய கருத்தியலால்' தங்களின் நலம் பேண தங்களை தாங்களே ஆரியர்கள் என்று சொல்லி கொண்டனர். அவர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் அல்ல என்பதற்கும், அவர்கள் இந்த மண்ணிலேயே இருந்து உதித்தவர்கள் என்பதற்கும் இந்த மரபணு ஆய்வு ஒரு உதாரணம்.



ஆதாரம்: 
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf

* சாதிகள் என்பது (உண்மையில் சாதி என்ற வார்த்தை தமிழில் இல்லை. சாதி என்பதற்கு பதிலாக இனக்குழு என்றே பயன்படுத்த வேண்டும்) ஆரிய பார்ப்பனர்களால் தமிழ் சமூகத்தில் புகுந்தது இல்லை. அது கைபர்,போலன் கணவாய் மூலம் அவர்கள் இங்கே வந்ததாக திராவிடர்கள் கூறும் சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே தமிழரிடம் இன்னும் சொல்லப்போனால் இந்தியா முழுவதும் இருந்து வந்துள்ளது. எனவே சாதி கட்டமைப்பை உருவாக்கினது தமிழனே. ஆரியன் அல்ல.
உதாரணம்: சிந்து சமவெளி நாகரிகம் என்ற திராவிட நாகரிகத்தில் மக்கள் பிரிவுகள் (சாதிகள்) இருந்துள்ளன.
"Both civilizations, India and China, utilized a feudalistic political system"
"The Indus Valley had a strong centralized government led by a priest king"
Source: 
http://www.studymode.com/essays/Early-Civilizations-Comparison-China-And-The-428024.html
* "The Rise and Spread of Civilization in India and China

* எல்லாவற்றிக்கும் மேலாக நால்வர்ண பிரிவுகள் (fuedal system) என்ற சமூக கட்டமைப்பு உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து நாகரிகங்களிலும் உள்ளது குறிப்பிடத் தக்கது. இதில் இருந்து ஆரிய பிராமணர்கள் தான் தமிழனிடம் சாதியை,நால்வர்ணத்தை விதைத்தார்கள் என்னும் திராவிடர் இயக்கங்களின் கட்டுக்கதை பொய் என்று நிரூபணம் ஆகிறது.

உதாரணங்கள்:



எனவே ஆரியர்கள் வந்தார்கள், அவர்கள் தான் சாதியை கண்டு பிடித்தார்கள், மூவேந்தர்களை கையில் போட்டு கொண்டு தமிழரை அடிமை படுத்தினார்கள் என்ற திராவிடர்களின் கட்டு கதைகள் பொய்யாகி விட்டன. 

அப்படியானால் இந்த நால்வர்ண பிரிவுகள் சரியா என்று நீங்கள் கேட்கலாம். அது அந்த காலத்துக்கு பொருந்தி இருக்கலாம். ஆனால் இந்த காலத்துக்கு அது ஒத்து வராது. இன்னும் சொல்லப்போனால் அந்த நால்வர்ணத்தை யார் உருவாக்கினார்களோ அவர்கள் தான் அதை சரிசெய்யவோ, தூக்கி எறியவோ, அதில் திருத்தம் செய்யவோ வேண்டும். ஆனால், தமிழனை வீழ்த்திய திராவிடர்களிடம்(தெளுங்கர்களிடம்) இந்த பொறுப்பை ஒப்படைப்பது, சொந்த செலவில் சூனியம் வைத்து கொள்வதற்கு சமம். இத்தனை காலம் சாதி ஒழிப்பு,கலப்பு திருமணம், சாதி மறுப்பு திருமணம் என்ற போர்வையில் திராவிடர்கள் இங்கே செய்து கொண்டிருப்பது தமிழனை ஒட்டு மொத்தமாக அழித்து ஒழிக்க கையாண்டு கொண்டிருக்கும் தந்திரம் ஆகும்.

எனவே தமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, திராவிடனே....திராவிடனே....திராவிடனே....!!!

-- இவண் --
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

08 July 2013

இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கியதனமும்

கேள்வி: தமிழனுக்கு சட்டை போட சொல்லி கொடுத்ததே பெரியார் தான். மண்ணுக்குள் கிடந்தவனை தூசி தட்டி எடுத்து மனிதன் ஆக்கினதே பெரியார் தான். அவர் தான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து, தமிழனை வளர்த்து விட்டது. அவரை விமர்சிப்பவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள். சரி தானே?

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:
இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்பு, பெரியாரின் விடாப்பிடியான பொல்லாத திராவிட கொள்கையால் 'தமிழன்' என்ற ஒரு தேசிய இனம் எவ்வாறு உருவாகாமல் தடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்பு, கன்னடர்கள்,மலையாளிகள்,தெலுங்கர்கள் போன்ற திராவிடர்கள் தமிழரின் கண் முன்னேயே தமிழ் பிரதேசங்களை பறித்து சென்றனர். பெங்களூர்,கோலார்,மூணார்,சித்தூர்,திருப்பதி,தேவி குளம்,பீர் மேடு என்று தமிழன் இழந்த நிலம் ஏராளம் ஏராளம். இவை எல்லாம் பெரியார் இருக்கும் போது தான் நடந்தது.இன்னும் சொல்லப்போனால், அவரின் ஆசியுடன் ஜோராக நடந்தது. அப்படி மொழி வாரி மாநிலங்கள் பிரிந்து சென்ற பின்பு, அவர்கள் தங்களை திராவிட இனமாக அறிவிக்கவில்லை. தனி தனி தேசிய இனங்களாகவே அறிவித்து கொண்டு, ஆட்சி அமைத்து கொண்டனர். அன்று முதல் இன்று வரை, எந்த தமிழனுக்கும் மேலே சொன்ன எந்த மாநிலத்திலும் எந்த வகையிலும் பிரதிநிதி துவமோ, அந்தஸ்தோ கிடையாது. அவ்வளவு இறுக்கமாகவும், தீவிரமாகவும் அவர்கள் தங்கள் மேலாண்மையை அந்த அந்த பிரதேசங்களில் செய்து வருகின்றனர். இருந்தாலும் மற்றவர்கள் போல, 'தமிழர்' என்ற தேசிய இனம் உருவாவதை பெரியார் ஒருக்காலும் விரும்பியது இல்லை. மீண்டும் மீண்டும் தமிழன் என்பதற்கு பதிலாக திராவிடன் என்றும், தமிழ் நாடு என்பதற்கு பதிலாக திராவிட நாடு என்றே சொல்லியும், செயலாற்றியும் வந்தார்.



"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை" --- குடியரசு இதழில் பெரியார்.

மொழி வாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்பு இருந்த 'சென்னை மாகாணத்தில்' இன்றைய ஆந்திர,கேரளா,கன்னடம் போன்றவற்றின் ஒரு சில பிரதேசங்கள் இருந்தன. அப்படி ஒன்றாக இருந்த போது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது தான் அன்றைய BC / SC சாதி பட்டியல்கள். அப்போது MBC கிடையாது. அந்த சாதி பட்டியல்களில் மராட்டியர்,கன்னடர்,தெலுங்கர்,மலையாளி என சகல திராவிட சாதிகளும் இருந்தன.

அப்படி இருந்த அந்த சாதி பட்டியல், மொழி வாரி மாநிலங்கள் உருவான பின்பு தமிழ் நாட்டில் (மற்ற மாநிலங்களை போல) திருத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால், இன்று வரை அந்த பழைய பட்டியலின் அடிப்படையில் தான் இங்கே BC / SC பட்டியலில் இட ஒதுக்கீடு தமிழ் நாட்டில் வழங்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்ற மிக அயோக்கியத் தனமான உண்மை எத்தனை தமிழர்களில் பேருக்கு தெரியும்? எந்த திராவிட அரசாவது திருத்த முயற்சித்தது உண்டா? குறைந்த பட்சம் வெளியில் தெரிவித்ததாவது உண்டா? இது தமிழ் சாதிகளுக்கு திராவிடர்கள் இழைக்கும் வரலாற்று துரோகத்தின் எச்சம் தானே?

இந்த அயோக்கியத் தனமான சாதி பட்டியலினால் ஒரு குஜராத்தியர் (உம்: சவுராஷ்டிரா) ென்னையில் குடியேறி, அங்கேயே படித்து, தமிழக BC பட்டியலில் வழங்கப்படும் 27 சதேவீத இட ஒதுக்கீட்டால், தனக்கு மருத்துவம்,பொறியியல் என இட ஒதுக்கீட்டை அனுபவித்து கொழிக்க முடியும். எந்த தமிழனாவது இதை குஜராத் மண்ணில் செய்ய முடியுமா? அதற்க்கு குஜராத் சட்டம் இடம் கொடுக்குமா? என்ன அநியாயம் அய்யா இது?

Referrence: 
தமிழக அரசின் இன்றைய சாதி பட்டியல்
http://www.tnpsc.gov.in/communities-list.html

குஜராத் அரசின் இன்றைய சாதி பட்டியல்
http://www.ncbc.nic.in/pdf/gujarat.pdf

* தமிழர் அல்லாத சாதிகள் அந்த அயோக்கிய தனமான சென்னை மாகாண சாதி பட்டியலில் சுமார் 20 சதவீதத்துக்கும் மேல். அவர்களுக்கு இன்றும் தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு BC / SC பட்டியலில் இருந்து கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம். யார் வீட்டு சலுகையை யார் அனுபவிப்பது?

* இன்றைய ஆந்திர கர்னாடக கேரளாவில் யாராவது இது மாதிரி தமிழனுக்கு ஒதுக்கீடு தருகிறார்களா...? மாநிலம் பிரிச்ச உடனே அவரவர் தங்களுக்கு சாதகமாக  சாதி பட்டியலை தயாரிச்சி, அவனுக்கு மட்டுமே பயன்படும் படி இட ஒதுக்கீடு அமைத்து கொண்டனர். ஒரு உதாணத்திற்கு:
"1957 க்கு முன்பு இருந்து வசிப்பவர்களுக்கு மட்டும் தான் இனி கேரளாவில்  இட ஒதுக்கீடு". அங்கு வாழும் தமிழன் எப்படி 1957 இல் கேரளாவில் வாழ்ந்தான் என்று நிரூபிக்க முடியும்? கேரளாவின் பல பகுதிகள் 1957இல் கிடையாதே? இதில் இருந்து என்ன தெரிகிறது. மலையாளிகளை தவிர வேற எவருக்கும் எந்த சலுகையும் தர கூடாது என்பதற்கு திட்டமிட்டு மலையாளிகள் செயலாற்றுகிறார்கள் என்பது தானே உண்மை?

"400 வருடங்களுக்கு மேலாக அவர்கள் இங்கேயே வாழ்ந்து விட்டார்கள், அதனால் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு தர வேண்டும்" என்று சொல்லும் திராவிட சிகாமணிகளே, இதே போல மற்ற மாநிலங்களில் தமிழனுக்கு அங்கே சலுகையும்,ஒதுக்கீடும் வாங்கி தர உங்களுக்கு துப்பு இருக்கா? அவர்களும் திராவிடர்கள் தானே? முடியுமா உங்களால்? ..... அடி சக்கை....அடிச்சான் பாரு பல்டி......ஆக, தமிழன் மட்டும் ஏமாந்த சோனகிரியா இருக்கணும்.....!!!

மக்களே, வெறும் 20 சதவீதம் மட்டுமே உள்ள தமிழர் அல்லாத சாதிகளால் என்ன நிகழ்ந்துவிட போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். அதை சில தரவுகளின் மூலம் அலசுவோம்.

* ஒரு கோடிக்கும் மேல் வன்னியர்கள் உண்டு. ஆனால் அரசு பணியாளர்களில் அவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் கூட இல்லை. ஆக BC இட ஒதுக்கீட்டால் வன்னியருக்கு பிரயோஜனம் இல்லை.
* MBBS சீட்டில் 180 இல் கோனாருக்கு வெறும் 5 தான். அப்போ மீதியை யார் ஆட்டையை போடுறா...?
* முக்குலத்தோர் தொடங்கி கவுண்டர் என அனைத்து தமிழ் சாதிகளின் நிலையும் இது தான்.
* BC யில் இப்படி என்றால், SC பிரிவில் எந்த அடிப்படையில் அருந்ததியினருக்கு 3% சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொடுத்தீங்க...?

அப்போ யார் தான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறா...?
* தமிழக அரசு செகரட்டியெட்டில் தெலுங்கர்கள் மட்டும் சுமார் 40%க்கும் மேல். இது எப்படி சாத்தியமானது? இன்னும் மராட்டியர்,கன்னடர்,மலையாளி என்று கணக்கெடுத்தால் தலை சுற்றும்.
* இருக்கும் அனைத்து திராவிட கட்சிகளின் தலைவர்களும், பெரும்பான்மை அமைச்சர்களும் தெலுங்கர்களே.
* கோவை உள்ளிட்ட பல மாநகரங்களில் பெரு வணிகர்களும், ஆலை முதலாளிகளும் தெலுங்கர்களே.
* PSG உட்பட பெரும்பாலான ஆங்கில வழி கல்வி நிறுவனங்களின் முதாளிகளும் தெலுங்கர்களே. இவர்களே 'சமச்சீர் கல்வி, மற்றும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியையும்' எதிர்த்து கடுமையாக தடுக்கின்றனர்.

ஆக, தமிழர் அல்லாதோரின் விகிதாச்சாரத்துக்கு அதிகமாகவே அவர்கள் இட ஒதுக்கீட்டால் இங்கே பயன் அடைத்துள்ளனர் என்பதும், தமிழ் சாதிகள் திருவோடு ஏந்தி கொண்டு தான் உள்ளனர் என்பதற்கும் இவை சில உதாரணங்கள் மட்டுமே.

இப்படி பெரும்பான்மை தமிழ் சமூகத்துக்கு வர வேண்டிய சலுகை எல்லாத்தையும் கமுக்கமாக,அயோக்கியமா நீங்க அனுபவிச்சுக்கிட்டு இருக்குறதும் இல்லாம, 'கவுண்டரோட இட ஒதுக்கீட்டை ஒரு பறையர் தான் பறித்துக் கொண்டார்' என்று எங்களுக்குள்ளையே சண்டையை மூட்டி விட்டுகிட்டு இருக்கீங்களே.....எவ்ளோ பெரிய அயோக்கியர்கள் நீங்கள்...? இனியும் உங்களை எம் சமூகம் மன்னிக்காது. எனவே வேண்டும் 'சாதி வாரி இட ஒதுக்கீடு'.

(குறிப்பு: 'தமிழர் வரலாறு ஆய்வு நடுவம்' சார்பில் அனைத்து தமிழ் சாதிகளையும் ஒருங்கிணைத்து இந்த இட ஒதுக்கீடு என்ற அயோக்கிய தனத்தை எதிர்த்தும், 'சாதி' வாரி இட ஒதுக்கீடு வழங்க கோரியும் ஒரு மாநாடு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டில் தெரிவிப்பதற்காக 'சுதந்திரம் வாங்கிய நாள் முதல் இன்று வரை சாதி வாரியான இட ஒதுக்கீடு தமிழகத்தில் யார் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது' என்று RTI மூலம் தமிழகத்துக்கு கேள்வி அனுப்பப்பட்டு உள்ளது. பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்)

ஆக தமிழக அரசு பதில் கொடுத்தாலும் சிக்கல், கொடுக்காவிட்டாலும் திராவிட யோக்கிய சிகாமணிகளுக்கு சிக்கல் தான். அந்த புள்ளி விவரம் வெளியில் தெரியும் போது 'பெரியாரும், திராவிடமும் இட ஒதுக்கீடு மூலம் தமிழனை கைக்கி விட்டாங்க்ற பொய் பிம்பம் சுக்கு நூறாக உடையும்.

-- இவண் --
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்