முந்தைய பதிவு:
சாதி ஒழிப்பு சாத்தியமா? - அடிப்படை புரிதல்
தாழ்த்தப்பட்ட சிவன்
சாதி ஒழிப்பு: இயற்கை வழி (முதல் படி)
----------------------------------------------------------------
தினமலர் வெளியிடும் 'ஆன்மீக மலரில்' வரும், தமிழகத்தின் கோவில்கள் என்ற தலைப்பில் 'கோவை பேரூர் பட்டீஸ்வரம்' பற்றிய குறிப்புகள் இவை.
Ref: http://temple.dinamalar.com/New.php?id=460
சுமார் 1000-2000 ஆண்டுகள் பழைமையான, சிதம்பரத்தின் தொடர்ச்சியாக 'மேலை சிதம்பரம்' என்று அழைக்கப்படும் கோவில் கோவை பேரூர் பட்டீஸ்வரர் நடராஜர் கோவில். இந்த கோவில் கரிகால சோழனால் கட்டப்பட்டதாம்.
இதெல்லாம் சரி. ஆனால், இந்த வரிகளை கவனியுங்கள்.
"இறைவன் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்து திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால் நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம்"
இதை எழுதும் போது எழுதப்படிக்க தெரிந்த ஒரு சாமானியனுக்கு எழும் கேள்விகள் கூட தினமலருக்கு எழவில்லையா என்று தோன்றுகிறது.
இவை தான் பாமரனுக்கும் வரும் கேள்விகள்.
1. தாழ்த்தப்பட்ட சாதி என்ற பட்டியலில் இந்தியாவில் 1000க்கும் மேலே சாதிகள் உள்ளதாம். இதில் எந்த சாதியை தினமலர் சொல்கிறது?
2. சிவன் தாழ்த்தப்பட்டவர் என்று சொல்ல தினமலர் சொல்கிறது. அப்படி என்றால், அவரை வழிபடுபவர்கள் மற்ற அனைவரும் யார்? மிக மிக தாழ்த்தப்பட்டவர்களா....?
3. அதெப்படி ஒரு சாதி 2000 வருசமா தாழ்த்தப்பட்டு இருக்கும்?
4. எதுக்கு வேலை மெனக்கெட்டு கரிகால சோழன் ஒரு தாழ்த்தப்பட்டவருக்காக கோவில் கட்டி வச்சான்...? இன்றைக்கும் அந்த கோவில் உரிமை, தேர் இழுக்கும் உரிமை, அறங்காவலர் பதவி என சகலத்தையும் ஏன் அந்த தாழ்த்தப்பட்ட சாதிக்கே விட்டு இருக்கு....?
5. இப்படி 2000 வருசமா சோழன் தொடங்கி இன்று வரை அந்த கோவிலுக்கு முழு உரிமையும் உள்ளவர்கள் 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்றால், உயர்த்தப்பட்டவர்கள் யார் யார்....?
இந்த மாதிரியான கேள்விகளை கேட்டுக்கொண்டே போகலாம். இவை எல்லாம் 'தாழ்த்தப்பட்டவர்' என்ற ஒற்றை சொல்லில் இருந்து தோன்றும் குழப்பங்கள். மாறாக நேரிடயாக அது எந்த சாதி என்று, உள்ளது உள்ளபடியே கோவிலின் தல புராணத்தில் இருந்து கூறி இருந்தாலே இத்தனை குழப்பத்தையும் தவிர்த்து இருக்கலாம்.
நிற்க.
தினமலர் ஒரு உதாரணம் தான். இங்கு நம்மில் பலரும், சாதி என்ற இத்யாதியின் இருப்பை குறைக்கும்படி செயலாற்றாமல், நம்மை அறியாமலேயே அதன் இருப்பை மிக பிரம்மாண்டமாக வைத்திருக்கவே செயலாற்றி கொண்டு இருக்கிறோம். இதில் முன்னணி வகிப்பது சாதி பற்றாளர்களை விட, சாதி ஒழிப்பு கனவான்களே....!!!அதிலும் குறிப்பாக இன்றைய போலி சாதி ஒழிப்பு போராளிகள் தான் சாதியை பன்மடங்கு தக்க வைக்கும் செயலை செய்து வருகின்றனர். இதே பாணியில் தான் தினமலர் யார் அந்த சாதி என்று சொல்லி சாதிக்கான தேவையை மட்டுப்படுத்தாமல், 'தாழ்த்தப்பட்ட சாதி' என்று அதை 1000 மடங்காக ஆக்கி விட்டு இருக்கிறது.
தினமலர் போல நாம் இங்கே நம்மை அறியாமலேயே செய்யும் தவறுகளை சிலவற்றை பார்ப்போம்.
1. ஆதிக்க சாதி - தலித் சண்டை என்று எழுதுவது. அதாவது இரண்டு சாதிக்கு இடையே உள்ள சண்டை என்பதை (200 - 75) சாதிகளுக்கு இடையே உள்ள சண்டை என்பது போல எழுதுவது.
2. தாழ்த்தப்பட்ட மாணவன் தாக்கப்பட்டான். அதாவது ஒரு சாதியை சேர்ந்த மாணவன் தாக்கப்பட்டான் என்று கூறாமல், ஏதோ 75 சாதியை சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று ஊதி பெருக்குவது.
3. குடும்ப சண்டையில் திவ்யா - இளவரசன் காதல் பிரிவு. இப்படி எழுதாமல், வன்னியர் - பறையர் என ஒரு குடும்ப சண்டையை தெருவுக்கு கொண்டு வந்து, அதை சாதி சண்டையாக்கியது. உண்மையில், வெளியிலேயே தெரியாத அளவுக்கு அமுங்கி போய் இருக்க வேண்டிய ஒரு விஷயத்தை, அரசியல் செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஊதி பெருக்கி சாதி சண்டை இங்கே ஆக்கப்பட்டது. முற்போக்கு சிந்தனையாளர் என்ற போர்வையில் அதில் ஜோராக எண்ணை ஊற்றினார் பலர்.
பொதுவாக இப்படி பொதுமை படுத்தி பேசுபவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.
1. இதை பற்றி எதுவமே தெரியாமல் எல்லாரும் சொல்கிறார்கள் என்று அதன் தாக்கம் தெரியாமல் பேசும் நபர்கள்.
2. தெரிந்தும், எதற்கு வம்பு (உம்: PCR வழக்கு) என்று நாமளும் 'தலித்' என்றே சொல்வோம் என்று பேசும் நபர்கள்.
3. எல்லாம் தெரிந்தும் வேண்டுமென்றே பேசும் எழுதும் நபர்கள். (உம்: அ.மார்க்ஸ், தினமலர் போன்றவை)
இதெல்லாம் தவறு என்றால், எது தான் சரி?
"சாதியின் இருப்பை மட்டும்படுத்தும் நோக்கில், சாதியை சொல்ல வேண்டிய கட்டாயம் இருப்பின் அதை தயவு செய்து சொல்லுங்கள்".
மேலே உள்ள முதல் இரண்டு (1&2) நபர்கள், 'சாதியின் இருப்பை குறைக்கும் பொருட்டும், தவிர்க்க முடியாத காரணத்தாலும், நல்ல நோக்கத்துடனும் சாதியை பயன்படுத்தும் போது, அதன் மூலம் உங்களுக்கு ஏதாவது அரசியல், சட்ட சிக்கல்,அச்சுறுத்தல் ஏதும் வந்தால், உங்களை காக்கும் பொறுப்பு 'நடுவம்' போன்ற அமைப்புகளுக்கு உண்டு. கவலை வேண்டாம். கை கொடுக்கிறோம். இதன் மூலம், மூன்றாம் வகை (3) நபர்களை இனம் காண வழி வகுக்கப்படும்.
சுருக்கமாக,
> சாதியை குறிப்பிட வேண்டிய இடத்தில் சாதியை குறிப்பிடவும்.
> அது கேலி,கிண்டல்,குரூரம் என்ற கெட்ட விசயத்துக்காக இல்லாமல், நேர்மையான நோக்கத்துக்காக இருக்கட்டும்.
இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்
+91 98403 77767