10 January 2014

சாதி ஒழிப்பு சாத்தியமா? - அடிப்படை புரிதல்

கேள்வி: சாதிகள் இங்கே 2000 ஆண்டுகளாக உள்ளன. திராவிட இயக்கங்கள் சாதி ஒழிப்பு தான் சமூக நீதி என்றும் கூறுகின்றனர். மேலும் அதை சுமார் 100 வருடங்களாக பறைசாற்றியும் வருகின்றனர். இருப்பினும் தமிழகத்தில் சாதி மோதல்கள் அதிகரித்து கொண்டு தான் வருகின்றதே ஒழிய, குறைந்தபாடில்லை. இதை பற்றிய தமிழர் வராற்று ஆய்வு நடுவத்தின் கருத்து....?

எமது பதில்:
சாதி ஒழிப்பு என்ற தலைப்புக்குள் செல்லும் முன்பு நாம் சில அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும். அதை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

1. சாதி என்றால் என்ன?
2. அதன் தோற்றம், அதற்க்கான தேவை,பயன்பாடு என்ன?
3. அரசு நிர்வாக அமைப்பு என்றால் என்ன, யார் உருவாக்கியது அதன் தேவை என்ன?
4. fuedal system பற்றிய ஒரு மேற்பார்வை.
5. சாதி என்பதற்கான இன்றைய தேவைகள் என்ன?
6. சாதியம் என்பது அடுத்து எந்த வடிவில் மாறும்? அதன் சாதக பாதகங்கள் என்ன?
7. சாதி ஒழிப்பு சாத்தியமா?

இத்துடன் சேர்ந்து நாம்
> போலி தமிழ் தேசியம் என்பதையும்,
> போலி சாதி ஒழிப்பு என்பதையும்,
> அதற்க்கான தேவை யாருக்கு உண்டு,
> ஏன் என்பதையும் சம காலத்தில் நாம் ஒப்பீடு செய்து பார்த்தால்,

பல உண்மைகள் நமக்கு விளங்கும். மேலே கூறியவற்றை ஒவ்வொன்றாக பார்ப்போம்.

மருத நில வாழ்வும், குடும்பம் என்ற அமைப்பும்
சாதி என்ற வார்த்தை தமிழில் இல்லை. எனவே சாதி என்பதற்கு பதிலாக நாம் அதை 'இன குழு' என்றே பொருள் கொள்வோம்.

சாதி/இன குழு என்றால் என்ன?

மனிதன் காட்டுமிராண்டியாக திரிந்த காலத்தில் பொருள் உற்பத்தியை பற்றியோ, அந்த உற்பத்தியை கட்டிக்காக்க குடும்பம் போன்ற அமைப்பையோ உருவாக்க வில்லை. இன்னாருக்கு இன்னார் இன்ன உறவு என்ற உறவு முறையும் உருவாகவில்லை. அதற்க்கான தேவையும் எழவில்லை. கிடைத்ததை தின்று, ஒரு நிலை இல்லாமல் நாடோடி வாழ்க்கையையே வாழ்ந்தனர். இந்த நிலைமையானது முல்லை நிலத்தில் சற்று ஏற்றம் பெறுகிறது. உதாரணமாக ஆநிரைகளை மையமாக கொண்டு, குழு வாழ்க்கை வாழத் தொடங்குகின்றனர். இருப்பினும் இது நிலையற்ற வாழ்வாக இல்லை. நிற்க.

அதுவரை ஆநிரைகள்,தானியங்கள் என்று உற்பத்தி பொருள், மருத நிலத்தில் நெல் போன்ற தானியமே உற்பத்தி பொருள் என்று ஏற்றம் பெறுகிறது. பண்டமாற்றம் முழுவதும் நெல்லையும், நிலத்தையும் அடிப்படையாக கொண்டே நடக்க தொடங்குகின்றன. அப்படி உருவான நெல்லை சொத்தாக கொண்டு அதை, தன் பரம்பரை, வாரிசுகள் என அடுத்த அடுத்த தலைமுறையும் அனுபவித்து ஆள வேண்டும் என்ற அடிபப்டை நோக்கத்துடன், இது தான் என் இருப்பிடம் (மனை) என்றும், இன்னாள் தான் என் மனைவி (மனை + வி) என்றும், இவை எனக்கு மட்டுமே சொந்தம் என்றும், தங்களுக்கு பிறக்கும் வாரிசுகள் இன்னார் என்றும், இவர்களுக்குள் இது தான் உறவு என்றும் ஒரு கட்டுக்கோப்பான அமைப்பை உருவாக்குகின்றான். நாகரிக வாழ்வின் இந்த அடிப்படை கட்டமைப்பே 'குடும்பம்' என்று அழைக்கப்படுகிறது. என்று மனிதன் மருத (வேளாண் சார் நாகரிகம்) நிலத்தில், விவசாயம் செய்து, நிலையான வாழ்வு வாழத் தொடங்கினானோ அன்றில் இருந்து தான் குடும்பம் என்ற அமைப்பு உருவாகிறது. இந்த குடும்பம் என்ற கட்டமைப்பே பின்னாளில், பல குடும்பங்கள் சேர்ந்து தெரு, ஊர்,நகரம்,சிற்றூர்,பேரூர் என பல்கி பெருக அடிப்படை ஆகும்.



வேளாண்மைக்கு உதவிடும் வகையில் தொழில் சார் மக்கள் உருவாகின்றனர்.
இன்றும் நமது சிறு ஊர்களில் சென்று பார்த்தாலும், வேளாண்மையை மையமாய் வைத்து, கொல்லர், தச்சார், வண்ணார், நாவிதர்,பறை அறைவோர், ஊர் காவலர், நாட்டாண்மை என ஒவ்வொரு ஊரும் ஒரு குட்டி நாடு,நகரம் போல செயல்படுவதை காணலாம். பெரும்பாலானோர் அந்த எல்லைக்குள்ளேயே பிறந்து,இறந்து மடிவதையும் காணலாம். அந்த எல்லைக்கு வெளியே அவர்கள் வருவதற்கான தேவை அன்று இருக்கவில்லை.
(குறிப்பு: இங்கு சுட்டப்பட்டுள்ள மருத நிலம் மற்றும் அதில் வாழ்ந்த அத்தனை இன குழுக்களையும் 'மள்ளர்' என்று தமிழின் அகராதியான பிங்கல நிகண்டு கூறுகிறது.

"அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்" —- திவாகர நிகண்டு.

"செருமலை வீரரும் திண்ணியோரும்
மருத நில மக்களும் மள்ளர் என்ப" —- பிங்கல நிகண்டு)

Ref: நிகண்டு

சாதி என்றால் என்ன?
குடும்பம்,சிற்றூர்,பேரூர் என விரியும் போது, அவற்றை எல்லாம் மேலாண்மை செய்ய தொழில் சார் மக்களை வகைப்படுத்தும் தேவை எழுகிறது. உதாரணமாக, ஒரு தலைவனின் நிர்வாகத்துக்குள், 100 சிறு ஊர்கள் வருகின்றன என்றால், ஒவ்வொரு ஊரிலும் வாழும் இரும்பு அடிப்பவர், மர வேலை செய்பவர், வேளாண்மை செய்பவர், அவர்களின் தலைவர் என அவர்களுக்குள்ளேயே இருந்தவர்களை நிர்வாகம் செய்யும் பொருட்டு, 100 ஊரிலும் இருக்கும் மர வேலை செய்பவரையும், 100 ஊரிலும் இருக்கும் வேளாண் மக்களையும், 100 ஊரிலும் இருக்கும் இன்ன பிற தொழில் சார் மக்களையும் ஒருங்கிணைக்க அவர்களை குழுவாக வகைப்படுத்துகின்றனர். இந்த ஒவ்வொரு குழு/தொழில் சார் மக்கள் தொகுதியையும் தான் நாம் 'இனக் குழு' அல்லது சாதி என்று சொல்கிறோம்.

ஆக, இனக்குழு என்பது தன்னிச்சையாக தொழில் சார் இயலாபாக தாமாகவே உருவான ஒரு சமூக கட்டமைப்பு. இதை யாரும் செயற்கையாக உருவாக்கவில்லை. மேலும், இந்த இனக் குழுக்கள் என்பது மருத நிலத்தில் தான் உருவாகின என்பதும், மருத நிலத்தில் தான் அதற்க்கான தேவை இருந்ததும் இதன் மூலம் அறியலாம்.

அரசு தோற்றம்
சிற்றூர்,பேரூர் தொடங்கி பல நகரங்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் பொருட்டும், நிர்வாக வசதிக்காகவும் மேலே கூறப்பட்ட இனக்குழுக்களை நான்கு நிலைகளில் பிரிக்கின்றனர். அவை முறையே 'அரசன்,அந்தணன்,வணிகன்,வேளாளன்'. இத்தகைய பிரிவுகள் உருவாக்கப்படும் போது, மக்களிடையே நிலைவிய நிர்வாக குழப்பங்கள் தீர்ந்ததோடு மட்டும் இன்றி, செம்மையாகவும் வாழ்ந்துள்ளனர். காரணம், மேலே கூறப்பட்ட நான்கு பிரிவுகளில் உள்ள மக்கள் அனைவரும் மருத நில மக்கள் மட்டுமே.....!!!

இத்தகைய மக்கள் பிரிவுகளையே ஆங்கிலத்தில் fuedal system என்கிறோம். உலகில் நாகரிகம் தோன்றிய அனைத்து இடங்களிலும் இந்த fuedal system வெவ்வேறு வடிவத்தில் இருப்பதை காணலாம்.

இவ்வாறு உருவான அரசு அமைப்பு, ஊர், நகரம் என விரிவடைகிறது. மிக மிக சமீபத்தில் மட்டுமே சிற்றரசு,பேரரசு என்று விரிவடைந்துள்ளது. ஒரு மொழி பல மொழிகளாகவும், அவர்களின் இனக்குழுக்கள் அடிப்படையிலும், வெவ்வேறு தேசிய இனங்கள் (தெலுங்கர்,கன்னடர்,மலையாளி,தமிழர்,குஜராத்தியர்,மராட்டியர் etc ...) உருவாகின்றன. இவ்வாறு உருவாகும் ஒவ்வொரு தேசிய இனமும் மேலே கூறியபடியே fuedal system பின்பற்றி எழுகின்றன.

தமிழர் மீது அன்னியர் படையெடுப்புகளும் நிகழ்கின்றன. விஜயநகர பேரரசு என்ற நாயக்கர் காலத்திய படை எடுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. "ஒரு அரசு இன்னொரு அரசை வீழ்த்தினால், அது வரை உள்ள அரசு கட்டமைப்பை தகர்த்துவிட்டு, கலைத்து அடுக்கி, தனக்கு தோதானபடி அதை மாற்றிக்கொள்ளும்" என்பது உலக நியதி. இதையே விஜயநகர பேரரசு செய்தது. ஊர் குடும்பு ஆட்சி முறை என்ற மூவேந்தர்களின் ஆட்சிக்கு பதில், பாளையப்பட்டு ஆட்சி முறை நாயக்கர்களால் அமல் படுத்தப்படுகிறது.

PalaiyakkararPoligarPalegaaduPolygarPalegar, or Polegar was the feudal title for a class of territorial administrative and military governors appointed by the Nayaka rulers of South India (notably Vijayanagar EmpireMadurai Nayakas and the Kakatiya dynasty) during 16th – 18th centuries.
Ref: http://en.wikipedia.org/wiki/Palaiyakkarar

தமிழகம் பல்வேறு பாளையங்களாக நாயக்கர்களின் இராணுவ,நிர்வாக தளமாக பிரிக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டு வந்துள்ளது. பின்பு மராட்டியர்,முகலாயர்,ஆங்கிலேயர் என மாற்றி மாற்றி இங்கே பல்வேறு படை எடுப்பும், ஆட்சி முறை மாற்றமும் நடந்தாலும், அவர்களை எல்லாம் சரி கட்டியோ, சமரசம் செய்தோ தெலுங்கர்கள் தங்கள் மேலாண்மையை தமிழக மண்ணில் தக்க வைத்தே வந்துள்ளனர். உண்மையில் ஆங்கிலேயருக்கும், கெட்டி பொம்மு நாயக்கர் போன்ற பாளையக்காரருக்கும் இடையே நடந்தது 'கொள்ளை அடித்த பணத்தை பங்கு படுவது பற்றியே'.....!!! இதையே சுதந்திர போராட்டம் என்று பின்னாளில் அதே தெலுங்கர்களால் திரிக்கப்பட்டது வரலாறு. இதே பாளையங்கள் பின்னாளில் ஜமீனாகவும், ஆண்டான் அடிமை சமூகமாவும் மாற்றம் பெறுகிறது. ஆங்கிலேயரின் ஆட்சி முடிந்ததும் உலக அளவில் போர்களும், பல்வேறு மாற்றங்களும் நடைபெற்று இந்தியா என்ற நாடும், ஜனநாயகம் இத்தியாதிகள் உருவாகி மன்னராட்சிக்கு முடிவு கட்டப்படுகிறது. ஜனநாயக வழியில் தம்மையும், தமது ஆதிக்கத்தையும் தக்க வைக்க தெலுங்கர்களால் இங்கே 'திராவிடம்' என்ற கொள்கை முன்வைக்கப்பட்டு, இன்று வரை மீளா துயரில் தமிழ் இனத்தை ஆழ்த்திக் கொண்டு இருக்கிறது.இன்று காணப்படும் அனைத்து சாதிய மோதல்களின் ஊற்றுக்கண் இந்த நாயக்கரின் ஆட்சியே என்பது மறுக்க முடியாத உண்மை.

சாதி என்பதற்கான இன்றைய தேவை
ஒருவர் என்ன இனம் என்பதை அவர் சார்ந்த அவரின் தாய்மொழி & இனக்குழுவே (சாதியே) தீர்மானிக்கும். வெறுமனே மொழி மட்டுமோ, அல்லது பூகோள ரீதி மட்டுமோ அதை தீர்மானிக்காது. எனவே தமிழர் என்ற இனத்தில் உள்ளவர்கள் யார் என்பதை அறிய சாதியே கருவி...சாதி ஒன்றே கருவி.....!!! இப்படி கூறுவதால் ஏதோ சாதிக்கு வால் பிடிப்பதாவோ, தூக்கி சுமப்பதாகவோ என்ன வேண்டாம். மேற்கொண்டு வாசிக்கவும்.

சாதி என்பதற்கான நாளைய தேவை
தமிழர் யார் என்று அறிந்து ஆட்சி அதிகாரத்தில் தமிழர் அமரும் போது, சாதி அடிப்படையிலேயே மக்களின் வாழ்வாதாரத்தை பூர்த்தி செய்யும் பணிகள் நடைபெறும். இது போன்ற இதியாதிகளுக்கு நாளை சாதி தேவை.

இன்றும், நாளையும் சாதி தேவை. நாளை மறு நாள்....??????? தேவை இல்லை. எப்படி?

சாதி ஒழிப்பு என்றால் என்ன?
எந்த ஒரு கருத்தியலும் தேவையின் பொருட்டே உருவாகின்றன. அது பல்வேறு வழிகளில் அழியும்.
> தேவை பூர்த்தி செய்யப்படும் போது.
> அதவிட வேறு ஒரு சிறப்பான கருத்தியல் உருவாகும் போது.
> இருப்பு குறையும் போது
> இருப்பே கேள்விக்குறியாகும் போது.

தன்னெழுச்சியாக உருவாகிய சாதியும் மேலே சொன்ன ஏதோ ஒரு வகையில் தன்னாலே மறையும். நாம் செய்ய வேண்டியது எல்லாம் அதற்க்கான ஆவனவற்றை செய்ய வேண்டியது தான். என்ன செய்ய வேண்டும்?

சாதி ஒழிப்பு - முதல் படி...!!!
திராவிடத்தை விமர்சிக்கும் போது அவர்கள் முன்வைக்கும் வாதம் "இந்தியா முழுவதும் சாதி இருக்கிறது. தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்கள் தான் சாதி சண்டையை தூண்டும் அபத்தமான குற்றச்சாட்டுகளை கூறினால், மற்ற மாநிலங்களில் நடக்கும் சாதி சண்டைகளுக்கும் திராவிட இயக்கங்களா காரணம்?"

இப்படி கேட்க்கும் எந்த திராவிட அறிவு ஜீவியும் நம்மிடம் தந்திரமாக ஒரு விஷயத்தை மறைக்கிறார்கள். இந்தியாவில் தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் அந்த அந்த மண்ணின் மைந்தர்களும், அந்த அந்த இனத்தை சார்ந்தவர்களும் தான் ஆள்கிறார்கள். மற்ற மாநிலகளில் இருப்பது ஒரு இனத்துக்கு உள்ளே உள்ள முரண்பாடுகள். ஆனால் தமிழகத்தில் இருப்பது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தெலுங்கர், மற்றும் ஆட்சியை இழந்த தமிழர் என்ற இருவேறு இனங்களுக்கு இடையே உள்ள முரண்பாடு.



காரல் மார்க்ஸ் அவர்களின் கூற்றுப்படி,
1. இருவேறு இனங்களுக்கு இடையே உள்ள முரண்பாடு.
2. ஒரு இனத்துக்கு உள்ளயே உள்ள முரண்பாடு.

இதில் மார்க்ஸ் அவர்கள் முதலாவது முரண்பாட்டுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து அதை தீர்க்க சொல்கிறார். உதாரணமாக, ஈழத்தமிழர்களிடம் சாதிகள் உள்ளன. இது ஒரு இனத்துக்கு உள்ளே உள்ள முரண்பாடுகள். ஆனால் ஈழத்தமிழருக்கும், சிங்களருக்கும் இடையே உள்ளது இருவேறு இனங்களுக்கு இடையே உள்ள முரண்பாடு. இதில் முதலில் தமிழர் - சிங்களர் பிரச்னையை தான் முதலில் தீர்க்க வேண்டும்.

எனவே தமிழகத்தை பொருத்தவரை சாதி மோதல்கள் என்ற ஒரு இனத்துக்கு உள்ளே உள்ள முரபாட்டை விட, தெலுங்கர் - தமிழர் என்ற இருவேறு இனங்களுக்கு இடையே உள்ள முரண்பாட்டையே முதலில் களைய வேண்டும். அதற்க்கு தற்போது ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் தெலுங்கர் அப்புறப்படுத்தப்பட்டு, தமிழர் ஆட்சிக்கு வர வேண்டும்.

வந்தால்....? எல்லா பிரச்சனையும் சரி ஆய்டுமா...?தேனாறும்,பாலாரும் ஓடுமா...?  பார்ப்போம்.

சாதி ஒழிப்பு  - இரண்டாம் படி
சாதி என்ற இத்யாதிக்கான இருப்பை குறைக்க வேண்டும்.

> முதலில் சாதிகளுக்கு இடையே உயர்வு,தாழ்வு மேல்,கீழ் என்ற அடிப்படை கோளாறு சரி செய்யப்பட வேண்டும். ஒரு உதாரணத்துக்கு, SC / BC / MBC / OC போன்ற பிரிவுகள் நீக்கப்பட்டு, சாதி அடிப்படையில் மட்டுமே ஆட்சி,அதிகார,வாழ்வாதார பகிர்வு அளிக்கப்பட வேண்டும். இதன் மூலம், இரண்டு தலைமுறைக்கு பின்பு வருபவர்கள் தான் எந்த பிரிவில் (SC / BC / MBC / OC) இருந்தோம் என்று தெரியாமல் போய்விடும்.

> திரைபிரபலங்கள் ஐஸ்வர்யா - தனுஷ், சேரன் மகள் திருமணம் போன்ற நிகழ்வுகளில் உற்று கவனித்தால், அங்கே சாதி என்ற ஒன்றுக்கே தேவை இல்லை,அது முன்னிலைபடுத்தப்பட வில்லை என்று புரியும். இந்த அளவில் மட்டுமே  பறையர் இளவரசன் - வன்னியர் திவ்யா விவகாரம் பார்க்கப்படும். அதிக பட்சம் போனால் அது இரு குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்சனையாகத் தான் இருக்குமே ஒழிய, ஊர் சண்டையாகவோ, சாதி சண்டையாகவோ, வர்க்க சண்டையாகவோ இன்று ஊதி பெருக்கப்படுவது போல செய்யப்படாது.

இந்த புள்ளி வரை நமக்கு சாதி தேவைப்படும்.

சாதி ஒழிப்பு - மூன்றாம் படி
குறைந்த பட்ச வாழ்வாதாரம் அனைத்து சாதிக்கும் உறுதிப்படுத்த பட்டதாலும், சாதியின் இருப்பானது தமிழர் ஆட்சியில் மட்டுப்படுத்தப் பட்டதாலும், சாதி என்ற ஒரு இத்யாதியின் தேவை மிக மிக சிறிய அளவுக்கு சுருங்கி விடும். அச்சமயம் தமிழரிடையே வர்க்க முரண்பாடுகள் தோன்ற ஆரம்பிக்கும். இன்று இருக்கும் அனைத்து சாதி நபர்களும், சாதி என்ற ஒன்றை கிட்டத்தட்ட அடியோடு மறந்து, முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கம், படிச்சவன் படிக்காதவன், ஏழை பணக்காரன் என்று இருவேறு பிரிவுகளாக பிரிந்து முரண்பாடுகள் தொடரும். சாதி கண்ணுக்கு எட்டாத தூரம் வரை காணாமல் போய்விடும்.

துணை கேள்வி: தெலுங்கர்கள் ஆண்டாலும் நமக்குள் சண்டை, நாளை தமிழர்கள் ஆண்டாலும் சண்டை என்றால் சமத்துவ, பொதுவுடைமை சமூகம் அமைய வாய்ப்பில்லையா....? எதற்கு தமிழ் தேசியம் அமைய வேண்டும் என்கிறீர்கள்...?

பதில்: 
என்று மனிதன் நிலையான வாழ்வு வாழத் தொடங்கி, உற்பத்தி சமூகமாக மாரிவிட்டானோ, அன்றே உயர்வு தாழ்வு, ஏழை பணக்காரன் என்று ஏற்றத்தாழ்வு தொடங்கிவிட்டது. ஏற்றத்தாழ்வே இல்லாமல் மனிதன் வாழ வேண்டும் என்றால், அவன் பழைய படி காட்டுமிராண்டி வாழ்வுக்கே செல்ல வேண்டும். மற்றபடி, 'பொதுவுடைமை சமத்துவம்' என்பது வெறும் ஏட்டு அளவுக்கே சாத்தியம்....!!!

தமிழ் நாட்டில் தமிழர் ஆளும் போது வர்க்க முரண்பாடுகள் அதிகம் இருக்கும். இருப்பினும், இருவேறு இனங்களுக்கு இடையே உள்ள சிக்கல் (உம்: காவிரி பிரச்சனை, முல்லை பெரியாறு பிரச்சனை) என்று வரும் போது, எப்படி பொதூடைமை பேசுகிற கன்னடரும், இந்துத்துவம் பேசுகிற கன்னடரும் ஒன்றாய் ஒரே குடையில் வர்க்க பேதம் மறந்து ஒன்றாய் ஒரே இனமாய் நின்று 'தமிழனுக்கு தண்ணீர் கொடுக்காதே' என்று சொல்கிறார்களோ, அதே போலவே இங்கு தமிழரும் வர்க்க முரண்பாடுகளை மறந்து ஒன்றாய் ஒரே இனமாய் திரள்வார்கள் (அ) திரள வைக்க படுவார்கள். மாறாக, கடிதம் எழுதுவது, தொண்டை தண்ணீர் வற்றுவது போல அடுக்கு மொழியில் பேசுவது, பிணத்தின் மீது அரசியல் செய்வது போன்ற மக்களை ஏமாற்றும் வேளையில் தமிழர் தலைமை இருக்காது. அதற்க்கான தேவை அவர்களுக்கு இல்லை.

சுருக்கமாக,
* சாதி ஒழிப்பு என்பது இயல்பாய் தோன்றி மறையும் ஒரு விஷயம்.
* நாம்  செய்ய வேண்டியது எல்லாம், அதன் இருப்பை குறைக்கும் வகையில் செயல்படுவது மட்டுமே.
* அதற்க்கு முதலில் செய்ய வேண்டியது தெலுங்கர் - தமிழர் இன வரலாற்று அதிகார பிரச்சனை முடிந்து, தமிழ் நாட்டில் தமிழர் ஆள வேண்டும்.
* தமிழர் யார், தெலுங்கர் யார் என அடையாளம் காண சாதி என்ற கருவி வேண்டும்.

போலி சாதி ஒழிப்பு
இன்றைய முற்போக்கு இயக்கங்கள்,அமைப்புகள்,திராவிட இயக்கங்கள் என பாலும் 'சாதி ஒழிப்பு' பற்றி பேசியும் இயங்கியும் வருகின்றனர். இது உண்மையிலேயே 'சாதி ஒழிக்கும்' நோக்கத்தில் தான் செய்கிறார்களா,இல்லை வேறு ஏதும் உள் நோக்கமா என்பதை விரிவாக காண்போம்.

1. இந்து மதம் மனிதனை மேலும் கீழுமாய் நான்காக பிரிந்து வைத்து இருக்கிறது என்று கூறிக் கொண்டே இவர்களும் அதையே தான் பின்பற்றுகின்றனர். எப்படி? உதாணத்துக்கு இன்றைய மக்கள் பிரிவினை பார்ப்போம்.
> பொது பிரிவு
> பிற்படுத்தப்பட்டோர்
> மிகவும் பி.ப
> தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர்

சாதி என்ற ஒன்றின் இருப்பை மிக மிக ஆழமாக தக்க வைக்கும் அடிப்படை கட்டமைப்பு இது தான். ஆனால் இதை தான் 'சாதியை ஒழிக்கும்' முற்போக்கு சிந்தனை என்கிறார்கள் இவர்கள். உண்மையில் மேலே சொன்ன கட்டமைப்பினால் யாருக்கு லாபம் என்பதை இங்கே காணலாம்.
இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கியதனமும்

2. சாதி இருப்பை குறைக்க வேண்டும். அதை கேள்விக்கு உள்ளாக்க வேண்டும். அதை இதுவரை எந்த முற்போக்கு இயக்கமும் செய்வதில்லை. மாறாக, சாதி முரண்பாடுகள் என்ற தீக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு பதிலாக எண்ணை ஊற்றி வளர்க்கின்றனர். எப்படி?

ஒரு உதாரணம்:
பக்கத்து வீட்டுக்காரன் சண்டை போட்டால் அதை தெரு சண்டை என்று சொல்வது அபத்தம். ஊர் சண்டை என்று சொல்வது மிக அபத்தம். சாதி சண்டை என்று சொல்வது மிக மிக அபத்தம். இந்த முற்போக்கு இயக்கங்கள் இவற்றை எல்லாம் தான் ஆதிக்க சாதி - தலித் சண்டை என்று எழுதுகின்றார், பேசுகின்றனர். அதாவது, சாதியின் இருப்பை குறைப்பதற்கு பதிலாக, இவர்கள் விசுவரூபமாக வளர்த்து எடுக்கின்றனர். அதை எப்போதும் எண்ணை ஊற்றி வளர்த்து வருகின்றனர். இப்படி சாதியின் இருப்பை தக்க வைப்பதன் மூலம் திராவிடருக்கு என்ன பலன்? இளவரசன் திவ்யா வையத்தை பூதாகரமாக்கி அரசியல் செய்யும் எவரும் சேரன் மகள் விஷயத்தை அந்த கண்ணோட்டத்தில் பார்ப்பது கூட இல்லை. எனவே எது அரசியலாக்கப்பட வேண்டும் என்று திட்டமிட்டே இந்த திராவிட முற்போக்கு தலித்திய இயக்கங்கள் செயல்படுகின்றனர் என்பது வெளிப்படை.



பலன் இல்லாமல் இல்லை. இதற்க்கு ஈழ அரசியலையே ஒரு உதாரணமாய் கொள்வோம். இன்று ஈழத்தமிழர்கள் வீழ்த்தபப்ட்டதும் ஜனநாயகம் என்ற போர்வையில் ஒரு தமிழர் வடக்கு மாகாண முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். இவர் தமிழர் என்ற ஒரே இனத்தை சேர்ந்தவராக இருப்பதால், மீதம் இருக்கும் தமிழர்களை பாதுக்காக்க நினைப்பார். ஒன்றும் முடியவில்லை என்றால் சும்மாவாவது இருப்பார். ஆனால் அங்கு சாதி சண்டையை மூட்டி விடுவாரா என்றால் செய்ய மாட்டார். அவருக்கு அதற்க்கான எந்த தேவையும் இல்லை. ஆனால், ராஜபக்ஷேவின் தம்பியான பசில் ராஜபக்ஷே என்ற வேற்று இன நபர் வடக்கு மாகாண முதல்வராக ஒருவேளை இருந்தால், அவர் கண்டிப்பாக மீதம் இருக்கும் தமிழரிடம் எப்போதுமே ஒரு பதட்டமான ஒரு சூழல் இருக்கும்படி பார்த்துகொள்வார். அதன் மூலம் தனது இருப்பை தக்க வைத்துகொள்வார். அதற்க்கு அவர் சாதி,மத சண்டையை கூட தூண்டி விடுவார். இதன் மூலம் அங்கிருக்கும் தமிழர்கள் தங்களுக்குள் மோதி அழிவதுடன், அவர்கள் எந்த காலத்திலும் ஒன்றாக ஒருங்கிணைவதை தடுக்க முடியும். இதே பணியை தான் இங்கே திராவிட ,தலித்திய இயக்கங்கள் செய்து கொண்டு இருக்கின்றன.

மேற்ச்சொன்ன இயக்கங்கள் சாதி ஒழிப்பு என்ற பெயரில் மென்மேலும் தமிழ் சமூகத்தை ஒரு பதட்டமான சூழலிலே வைத்துகொள்ள விரும்புகின்றனர். எப்போதெல்லாம் இங்கே தன்னெழுச்சியாக தமிழர் ஒருங்கிணைப்பு நடக்கிறதோ அப்போதெல்லாம், இங்கே சாதி சண்டைகள் தூண்டி விடப்படும். இதற்க்கு ஒரு சிறந்த உதாரணம் 'மாணவர்கள் ஈழத்துக்காக போராடிய போது, மதுரையில் அம்பேத்கார் சிலையோ, இம்மானுவேல் சேகரனார் சிலையோ, முத்துராமலிங்க தேவர் சிலையோ' மர்ம நபர்களால் உடைக்கப்படும்.

இதே பாணியிலேயே இவர்கள் கலப்பு திருமணம் என்றும், சாதி மறுப்பு திருமணம் என்றும் பிரச்சாரம் செய்கின்றனர். இன்று போலி சாதி ஒழிப்பு/மறுப்பு என்றும், நாளை மத ஒழிப்பு/மறுப்பு என்றும் இங்கே பதட்டமான சூழலையே எப்போதும் இந்த திராவிட அரசுகள் வைத்து கொண்டே இருப்பார். எனவே தமிழர் முதலில் செய்ய வேண்டியது இந்த புல்லுருவிகளை அப்புறப்படுத்துவோம்....!!!

போலிகளை கண்டு உணர்வோம்....
தமிழர் அரசை அமைப்போம்....!!!

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

07 January 2014

குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கியது தமிழனே...!!!

கேள்வி: தமிழ் மொழியை விடுத்து எல்லோரும் ஆங்கிலம் பேசுங்கள். ஆங்கில அறிவே நமக்கு உதவும். வீட்டில் உள்ள வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்திலேயே உரையாடுங்கள். ஆங்கிலமே அறிவு மொழி என்று பெரியார் முன்மொழிந்தார். இதில் தவறென்ன...?

பதில்: பெரியாருக்கு ஆங்கில மோகத்தை விட, தமிழை இல்லாமல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கி இருந்ததை பல வழிகளில் நிறுவலாம். ஒரு உதாரணத்துக்கு இந்த வீடியோ பதிவை பார்க்கவும்.



மேலும், ஆங்கில மோகத்தால் ஏற்ப்பட்ட இன ரீதியான சீரழிவை கீழே உள்ள பதிவு விளக்குகிறது.

Book name: Chariots of the Gods
Author: Erich von Daniken 


வெள்ளைக்காரன் தான் எல்லாத்துலையும் கில்லாடி என்றும், அவனுக்கு தான் அறிவு இருக்கு தமிழன் வெள்ளைக்காரனை பாத்து கத்துக்கணும் என்று ராமசாமி நாயக்கர் போன்ற திராவிட வாதிகள் முன்மொழிந்த, குப்பைக்கு கூட புரோஜனம் இல்லாத மெக்காலே கல்வித் திட்டத்தால் நம்மில் பெரும்பாலோர் மேற்கத்திய மாயையில் இருந்திருப்போம். இன்றும் அதே தி.க நபர்கள் இந்த 'Chariots of Gods ' என்ற புத்தகத்தை ஒருவேளை வாசித்தால், அதில் சுவிஸ் ஆய்வாளர் சொல்லியதை அப்படியே நம்மிடம் வந்து வாந்தி எடுப்பார்கள். அப்படி என்ன தான் கூறுகிறார் எரிக் வான் டனிகென்?
மனிதன் காட்டுமிராண்டியாக உலகம் முழுவதும் சுற்றிக்கொண்டு இருந்த காலத்தில்,

> விவசாயத்தை கற்றுக் கொடுத்தது.
> அதனை ஒட்டி குடும்பம் என்ற அமைப்பை உருவாக்கியது.
> தொழில் நுட்ப அறிவை கொடுத்தது.

இதையே திராவிட தலித்தியவாதிகள் இப்படி நம்மிடம் வந்து சொல்வார்கள்.
> குடும்பம் என்ற அமைப்பின் உருவாக்கத்துக்கும் தமிழனுக்கும் சம்பந்தமே கிடையாது.
> விவசாயத்தை கண்டு பிடிச்சி நாகரிகம் சொல்லித் தந்தது ஆரியன் கூட இல்ல....ஏலியன்.....!!!
> கோவில், அணைக்கட்டு என எல்லாத்தையும் கட்டுனது ஏலியன் தான்....பாரு வெள்ளைக்காரனே ஆராய்ஞ்சு சொல்லிட்டான்....!!!

உண்மையிலேயே இந்த வெள்ளைக்கார ஆராய்ச்சி வெங்காயங்கள் ஆராய்ச்சி தான் பண்ணுதா.....இல்ல, மோசடியான ஆரிய கொள்கை மாதிரி, இதுங்களா ஒன்னு சேர்ந்து மறுபடியும் வேற ஒரு மோசடியான இருட்டடிப்பு வேளையில் இறங்குதா....? இவனுங்களுக்கெல்லாம் சரியான பதிலடி கொடுக்கணும்னா குறைஞ்ச பட்சம் தமிழ் நாட்டை தமிழர் ஆளனும். வெள்ளைக்காரனுக்கு சொம்படிக்கிற எந்த திராவிட ஈர வெங்காயமும் இதை செய்யும் என்று எதிர் பார்க்க முடியாது.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

இது தான் தமிழகத்தின் அரசியல் சிக்கல்

உலக தமிழர்களின் கவனத்துக்கு

இந்த பதிவு தமிழகத்தில் இது நாள் வரை உள்ள அரசியல் குழப்பம் பற்றி போதிய புரிதலை உங்களுக்கு தரும் என்று நம்புகிறோம். இந்த பதிவு அதற்க்கான ஆரம்பமாய் இருக்கும் என்று நினைக்கிறோம். 6 கோடிக்கும் அதிகமான தமிழர்கள் இருந்தும், ஈழமே என் மூச்சு என்று தொடை தட்டிய திராவிட இயக்கங்கள்,தலைவர்கள் உட்பட பலர் இருந்தும், அவர்கள் கையில் அதிகாரம் இருந்தும் எப்படி ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை தமிழக தமிழர்களான நாங்கள் இறக்க விட்டோம் என்று இது நாள் வரை நீங்கள் குழம்பி இருந்து இருப்பீர்கள். இது போன்ற கேள்விகளுக்கும் இந்த பதிவில் விடை கிடைக்கும் என்று நம்புகிறோம்.

நாயக்க மற்றும் நாயுடு நண்பர்களிடம் உரையாடிய போதும், தமிழ் நண்பர்கள் வழங்கிய முக்கிய புள்ளிவிவரங்கள் அடிப்படையிலும் தமிழகத்தில் ஊடகம், அரசியல், கல்வி, தொழில் துறை என அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருவது தெலுங்கர்கள் என்ற உண்மையை ஒப்புக்கொண்டு விட்டனர். தாங்களே தமிழகத்தில் பெரும்பான்மையானவர்கள், தாங்கள் இல்லை எனில் தமிழகத்தில் ஒரு புல் பூண்டு கூட அசைய முடியாது என்று பெருமை பொங்க தெரிவித்தனர். மகிழ்ச்சி. அந்த தெலுங்கு நண்பர்களிடம் சில கேள்விகளை முன்வைக்கிறோம். அதற்க்கு முன்பு சில விசயங்களை தெளிவாக கூறிவிடுகிறோம்.

என்ன தான் வரலாற்று ரீதியாக தமிழர்களை, தெலுங்கர்கள் வீழ்த்தி இருந்தாலும், அவற்றை மறந்து இங்கிருக்கும் நாயக்கர் உள்ளிட்ட தெலுங்கு மக்களை வேற்றுமை பாராட்ட தமிழர்கள் விரும்பவில்லை. நீங்கள் மற்ற மாநிலங்களில் தமிழர்களை கேவலமாக நடத்துவது போல, நாங்கள் உங்களை இங்கே அப்படி நடத்த ஒருகாலும் எண்ணியது இல்லை, எண்ணப் போவதும் இல்லை. நாங்கள் எதிர்ப்பது உங்களை அல்ல. எங்கள் மீதான உங்களின் ஆதிக்கத்தையே......!!!

கண்ணோட்டம் 1
--------------------------
தமிழகத்தில் நாயக்கர்களே பெரும்பான்மை மக்கள் (சுமார் 3 கோடி) என்று நீங்கள் சொல்வது உண்மை எனில், கீழ்க்கண்ட, உலக தமிழர்களின் கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க கடமை பட்டு உள்ளீர்கள்.
1) தமிழனை வீழ்த்தியது ஆரியன் அல்ல, தெலுங்கர்களான திராவிடன் தான் என்ற உண்மையை ஈ.வே.ராமசாமி நாயக்கர்,கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன், மு.கருணாநிதி,வைகோ, விஜயகாந்த் உட்பட தெலுங்கர்கள் அனைவரும் மறைத்தது ஏன்? என்ன காரணம்?

2) சிங்களன் ஈழத்தமிழனை அகதியாக உலவவிட்டது போல, நாயக்கர்கள் மறவர்,பள்ளர் உள்ளிட்ட தமிழ் சாதிகளை பர்மா போன்ற நாடுகளுக்கு அகதியாய் விரட்டி விட்டது ஏன்? மூவேந்தர் காலத்தில் வராத பஞ்சம், உங்கள் காலத்தில் எப்படி வந்தது? வந்ததா , வரவழைக்கப்பட்டதா? நிலம்,உடமைகள் பிடுங்கப்பட்டும், அவை பாழ் படுத்தப்பட்டும் ஆன பிறகு,பிழைக்க சென்ற தமிழர்கள் பர்மாவை செழிப்பாக்கியது சாத்தியம் என்றால், இங்கு அவர்களை பஞ்சத்தில் தள்ளியது யார்? இந்த வரலாற்று பதிவை எந்த திராவிட சிகாமணியும் பதிவு செய்யவில்லையே. ஏன்?

3) உங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆட்சி அதிகாரம் அனைத்தும் தெலுங்கர்களான உங்களிடம் தான் இன்றும் உள்ளது என்று நீங்கள் நியாயம் கற்பித்தால், மணல் கொள்ளை, அறிவியல் பூர்வமான ஊழல், இயற்க்கை வளங்களை சுரண்டுதல், விவசாய நிலங்களை நாசமாக்கியது, சுருக்கமாக தமிழ் நாட்டில் ஜனநாயக போவையில் கொள்ளை மட்டுமே அடிப்பது தெலுங்கர்களான நீங்கள் தான் என்ற உண்மையை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள தயாரா...? அப்படி ஒப்புக் கொண்டால், உண்மையில் இங்கே தமிழகத்தில் என்ன அரசியல் சிக்கல் உள்ளது என்பது ப்லைச்சென்று அனைவருக்கும் தெரியும் அல்லவா?

4) நீங்கள் பெரும்பான்மையான மக்கள் என்றால், 'தெலுங்கர் முன்னேற்ற கழகம்' என்று வெளிப்படையாக நீங்கள் அரசியல் செய்யலாமே? யாரை ஏமாற்ற 'திராவிடர்' என்ற வார்த்தையும், தி.க, தி.மு.க, ம.தி.மு.க, தே.மு.தி.க போன்ற கட்சிகள் இங்கே இருக்கின்றன?

5) சாதியை வைத்து பிழைப்பு நடத்த வேண்டிய அவசியம் இங்கே இருக்கும் எந்த தமிழ் சாதிக்கும் இல்லாத பட்சத்தில், இங்கே நடக்கும் அனைத்து சாதி மோதல்களுக்கும் அடிப்படை காரண கர்த்தாக்கள் தெலுங்கர்களான உங்களின் பிரித்தாளும் தந்திரம் தான் என்பதை ஒப்புக் கொள்ள தயாரா...? நீங்கள் தான் 3 கோடி பேர் இருக்கிறீர்களே....? நேரடியாகவே ஆதிக்கம் செய்ய முடியுமே....? எதற்கு எங்களுக்குள் சாதி சண்டையை மூட்டிவிட்டு அய்யம்பேட்டை வேலை செய்கிறீர்கள்...? எதற்கு அவற்றுக்கு 'கலப்பு திருமணம், சாதி ஒழிப்பு' என்று முற்போக்கு முகமூடி வேறு போட்டு கொள்கிறீர்கள்....?இது எதிரியை களத்தில் நேருக்கு நேர் சந்தித்த நாயக்க மன்னர்களின் புகழுக்கு களங்கம் கற்பிப்பது போல இல்லையா....?

6) 'இது தான் நிலைமை, இதை எல்லாம் மாற்ற முடியாது. தமிழர்கள் நீங்கள் அப்படியே இங்கு இருந்துவிட்டு போங்கள்' என்பது தான் கோபால்சாமி நாயுடு (என்கிற) வைகோ உள்ளிட்டோரின் கூற்று என்றால், அதை பகிரங்கமாக பொது ஊடகத்தில் சொல்ல தயாரா...? இந்த கூற்று சரி என்றால், சிங்களனும், ஈழத்தமிழனும் இலங்கையில் ஒன்றிணைந்து வாழ முடியுமே....? அதை ஏன் திராவிட சிகாமணிகள் எதிர்க்கிறீர்கள் (அல்லது நடிக்கிறீர்கள்?). கடலுக்கு இந்த பக்கம் ஒரு நியாயம், அந்த பக்கம் ஒரு நியாயம் என இரட்டை நியாயம் கடை பிடிப்பது ஆதிக்கம் செலுத்தும் தெலுங்கர்களுக்கு அழகா? பதில்களை எதிர் பார்க்கிறோம்.

கண்ணோட்டம் 2
--------------------------
1. நீங்கள் சொல்வது போல தமிழகத்தில் நீங்கள் பெரும்பான்மை இல்லை எனில், திரும்பிய பக்கம் எல்லாம் உங்களின் ஆதிக்கம் உங்களின் எண்ணிக்கைக்கும், விகிதாசாரத்துக்கும் விட மிக அதிகமாக இருப்பது தவறு இல்லையா? இதற்க்கு நீங்கள் என்ன நியாயம் வைத்து இருக்கிறீர்கள்?
Ref: http://namvaralaaru.blogspot.in/2014/01/blog-post.html

2. வெறும் 10000 பேர் கூட இல்லாத தெலுங்கு சின்ன மேளம் சாதியை சேர்ந்த மு.கருணாநிதி அவர்கள், பல கோடி தமிழருக்கு தலைவராக ஆதிக்கம் செய்வது நியாயமா?

3. நீங்கள் தமிழர்களுக்கு நன்மை செய்யும் நோக்கில் ஆதிக்கத்தை வைத்து இருப்பதே நியாயமற்ற செயல் என்று கூறுகிறோம். ஆனால், வரலாறை ஒழித்து, வாழ்வாதாரத்தை நசுக்கி, தமிழர்களை ஓட்டாண்டி ஆக்குவதற்கு தான் அந்த அதிகாரத்தை இன்று வரை பயன்படுத்தி கொண்டு இருக்கிறீர்கள் என்பது தெரிந்தும், எங்கள் மீதான உங்கள் ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டுமா?

சொல்லுங்க பாஸ்....சொல்லுங்க.....!!!

06 January 2014

இந்துத்துவாவின் இரண்டு தூண்கள்: திராவிடம் & தலித்தியம்

கேள்வி: தலித்தியமும், திராவிடமும் ஒடுக்கப்பட்டவருக்கு ஆதரவாகவும், பார்ப்பனியத்துக்கு எதிராகவும் செயல்படுகிறது. அதில் ஏதேனும் விமர்சனம் உண்டா?

பதில்:
இது கொஞ்சம் பெரிய மேட்டர். அதை எளியவடிவில் கதை போல விளக்கிவிட்டு விசயத்துக்குள் செல்வோம்.

திருட்டு கூட்டாளிகள்
தமிழரசனுக்கு ஒரு தங்கநிற சட்டையும், வீடும், அஞ்சு ஏக்கர் நிலமும், அந்த நிலத்தின் நடுவில் குலதெய்வ கோவிலும் உள்ளது.

ஆரியா என்பவன் தமிழரசனை வீழ்த்த நினைத்து அதை தந்திரமாக செய்கிறான். எப்படி? தமிழரசனுக்கு சொந்தமான அத்தனையும் தன்னுடையது என்கிறான்.
திவாகர் என்பவன் 'கவலைப்படாதே தமிழரசா, நான் இருக்கிறேன் உனக்கு' என்று ஆறுதல் சொல்வது போல களம் இறங்குகிறான். பின்பு திவாகர் 'உண்மை தான் தமிழரசா, ஆரியா சொல்வது தான் உண்மை. இதெல்லாம் உன்னுடையது அல்ல, அவனுடையது' என்கிறான். அதாவது தமிழரசனுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று திவாகர் ஆர்யாவுக்கு தான் துணை நிற்கிறான். 
தலிக்கா என்ற இன்னொரு நாட்டாண்மை வருகிறான். 'கவலைப்படாதே தமிழரசா. நான் இருக்கிறேன் உனக்கு' என்று களம் இறங்குகிறான். இறுதியில் அந்த தலிக்கா போட்டானே ஒரு போடு.... "அடேய் தமிழரசா......நீ தமிழரசனே கிடையாதப்பா......உனக்கும் இந்த உடமைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதப்பா.....எல்லாமே ஆரியாவோடது தான்" என்கிறான். திவாகராவது தமிழரசனின் உடமைகளை ஆரியாவோடது என்று கூறினான். ஆனால் தலிக்கா ஒரு படி மேலே போய், தமிழரசனுக்கும் அவனது உடமைக்கும் 'எந்த சம்பந்தமுமே இல்லை' என்று கூறிவிட்டான். 
கொடுத்த காரியத்தை கண கச்சிதமாக முடித்து விட்டீர்கள் என்று ஆர்யாவுடன், திவாகரும், தலிக்காவும் இருட்டறைக்குள் கை குலுக்குகிறார்கள்.
====================

இப்போ விசயத்துக்கு வருவோம்.

உண்மையில் தமிழரசனை காக்க நினைத்து இருந்தால் திவாகர் , தமிழரசனின் உடமைகள் அவனுடையது தான் என்பதை ஆய்ந்து அறிந்து சொல்லி இருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.

தலிக்கா தமிழரசனை காக்க நினைத்து இருந்தால், தமிழரசனே இந்த உடமைகளுக்கு உரியவன் என்று கூறி இருக்க வேண்டும். ஆனால் ஒரு படி மேலே சென்று , தமிழரசனுக்கும் உடமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அடி ஆதாரத்தையே குலைக்கும் வேலையை செய்து இருக்கிறார்.

மேலே தமிழரசன் என்ற இடத்தில் 'தமிழர்' என்றும்,
ஆரியா என்ற இடத்தில் 'பார்ப்பனிய இந்துத்துவா' என்றும்,
திவாகர் என்ற இடத்தில் 'திராவிடம்' என்றும்,
தலிக்கா என்ற இடத்தில் 'தலித்தியம்' என்றும் போட்டு மீண்டும் படியுங்கள். உங்களுக்கு ஒரு உண்மை புரியும்.

> இந்திரன் ஆரியக்கடவுள் என்பது போன்ற திராவிடர்களின் உளறலின் உள் அர்த்தம் இப்போது புரிந்திருக்கும்.
> ஒரு உதாரணத்துக்கு, தமிழ் குடியான பள்ளர்களை/பறையர்களை ஏன் தலித்தியவாதிகள் 'நீங்களெல்லாம் தமிழர்களே அல்ல, பூர்வீக பவுத்தர்கள்' என்று பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

ஆம்,
ஆரியம் - திராவிடம் - தலித்தியம் ===> இந்த மூன்றுமே 'மண்ணின் மைந்தர்கள்' என்ற கருத்தியலுக்கு எதிரானது என்று புரியும். 'தமிழர்' என்ற கருத்தியலுக்கு எதிரானவை என்று புரியும். அந்த அடிப்படையில் இவை மூன்றையுமே நாம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும், புறம்தள்ள வேண்டும் என்றும் புரியும்.

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்