மனித பரிணாமம்: சுருக்கம்
இயற்கையே பெருமளவில் மனிதனை அச்சமூட்டியது. குகைகளில் வாழ்ந்த காலம் தொட்டு அந்த இயற்கையிடம் இருந்து தம்மை பாதுக்காக்க அவன் அந்த இயற்கையையே வழிபட தொடங்கினான். காட்டு மிராண்டியாக மனிதன் சுற்றிக் கொண்டு இருந்த காலத்தை அடுத்து, மனிதன் முல்லை நிலத்தில் கூட்டு வாழ்வும், அவர்களுக்குள் தலைவரும், இயற்க்கைய ஒட்டிய வழிபாடும் தெய்வங்களும் உருவாகி விட்டன. அந்த
தெய்வங்களுக்கு பூசை செய்தல் என்பதை ஒட்டி பூசாரிகளும் நியமிக்கப்பட்டனர். இந்த பூசாரிகள் 'தலைவருக்கு' அடுத்தப்படியாக இருந்துள்ளனர். சில சமயங்களில் தலைவரையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வலிமையாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும் இருந்து உள்ளனர். எல்லாவற்றுக்கும் காரணம்
கடவுளின் மீது மனிதன் கொண்டு இருந்த அபரிமிதமான பக்தி தான். எனவே பூசாரிகளை கடவுளுக்கு அடுத்தபடியாக பார்க்க வைத்தது கடவுள் மீதான பயமும், மரியாதையுமே...!!! இப்படி தலைவர்,பூசாரி,மக்கள் என்ற பிரிவுகளே அரசாங்கம் என்று சொல்லப்படும் மக்கள் நிர்வாக கட்டமைப்புக்கு அடிப்படையானதாகும். மேற்ப்படி அரசு தோற்றம் மற்றும் கூட்டு வாழ்க்கை, முல்லை நிலத்தில் தோற்றம் பெற்று இருந்தாலும், முல்லை நில வாழ்வு என்பது நிலையற்ற வாழ்வு என்பதால், அங்கு குடும்பம் என்ற சமூக கட்டமைப்பு அடிப்படை தோன்றி இருக்கவில்லை. அதற்க்கான தேவையும் அங்கு இருந்திருக்க வில்லை.
மனிதன் என்று மருத நிலத்தில், ஆற்றம் கரையில் நிலையாக வாழத் தொடங்கினானோ, அன்றில் இருந்தே உற்பத்தி சமூகமாக மாறத்தொடங்குகிறான். இது என் நிலம் என்றும், அந்த நிலத்தை அதில் உருவாகும் உற்பத்தியை ஆண்டு அனுபவிக்க வாரிசுகள் வேண்டும் என்பதால், குடும்பம் என்ற சமூக கட்டமைப்பை உருவாக்குகிறான். இவள் மனைவி, இவளை யாரும் தீண்டக்கூடாது, இவளுக்கும் எனக்கும் பிறக்கும் மகவுகள் என் வாரிசுகள் என அந்த அமைப்பு உருவாகிறது. பல குடும்பங்கள் இணைந்து தெரு,ஊர்,சிறு ஊர், பேரூர், நகரம்,நாடு என்று வளர்க்கிறது. வேளாண் விலை பொருட்களும், வேளாண்மையும், அதில் முக்கியமாக நெல்லுமே அதுவரை இருந்து வந்த பண்டமாற்று பொருள்களான ஆடு,மாடுகளை விடுத்து, முக்கிய பண்டமாற்று பொருளாக மாறுகிறது. வேளாண்மையே உச்சபட்ச நாகரிக கண்டுபிடிப்பு என்பதை உலகறியும். இவ்வாறு இருவானா வேளாண்மையில், அந்த வேலால்ன்மைக்கு உதவும் பொருட்டு, அவர்களிடமே தொழில் சார்ந்த பிரிவுகள் உருவாகின்றன.
கலப்பைகள் செய்பவர், நெல் விதைப்பவர், பண்ணையை கவனிப்பவர், ஆறு ஏறி குளங்களை கவனிப்பவர், ஊர் தலைவர், கோவில் பூசாரி, நாவிதர், வண்ணார் என உருவாகிய அந்த பதினென் குடிகளும், அவர்களின் பிரிவுகளுமே நாம் மருத நில மகள் அல்லது மள்ளர் என்கிறோம். ஒரு சிறு ஊரில் வாழும் மனிதர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை பக்கத்து ஊருக்கு கூட அன்று செல்ல வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. காரணம் ஒவ்வொரு ஊரும் நிர்வாக அமைப்பை பொருத்தவரை ஒரு நாடு போலவே செயல்பட்டது. மருத நிலக்கடவுள் இந்திரனாக இருந்ப்பினும், பல திணை மக்களையும் அரவணைக்கும் பொருட்டு, புதிய கடவுள்களாக சிவன்,திருமால்,பிள்ளையார்,இவர்களுக்குள் உள்ள குடும்ப உறவுகள் போன்றவை உருவாக்கப்படுகின்றன.
சாதி எப்படி உருவாகியது?
மேற்ப்படி தொழில் செய்வோர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருந்தாலும் அவர்களுக்குள் (ஒரு ஊர் பூசாரிக்கு இன்னொரு ஊர் பூசாரியை தெரியாது) எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. இருப்பினும் பல ஊர்கள் சேர்ந்து ஒரு பேரூர் என்ற அடுத்த கட்ட நிர்வாக ஆட்சிமுறைகள் உருவாகும் போது, அதை நிர்வாகிப்பவர் மேற்ப்படி ஊர்களை நிர்வாகிக்க தொழில் சார் மக்களை ஒருங்கிணைக்க நினைத்தனர். அதன் மூலம் நிர்வாகம் ஒழுங்கான நடக்கும் என்றும், பொதுமனெ மக்கள் என்று இல்லாமல், இவ்வாறு
தொழில் சார் வகைப்படுத்துதல் மூலம் அவர்களின் நிறைகுறைகளை தீர்த்து வைக்க முடியும் (உம்: வாரியம் அமைத்தல், சங்கம் அமைத்தல் போல) என்று செயல்ப்பட்டனர்.
இவ்வாறு உருவான தொழில் சார் பிரிவுகளே இன குழுக்கள் அல்லது சாதி என்பதாகும். எனவே சாதி என்பது தேசிய இனங்களுக்கு இடையே இயல்பாகவே உருவாகிய ஒரு இத்யாதி. இதை எந்த ஆரிய பார்ப்பானும் நம்மிடம் வந்து திணிக்கவில்லை. ஆரிய கதைகளை அவிழ்த்து விடும் திராவிட புளுகர்கள், ஏன் ஒரு ஆடு மாய்க்கும் ஆரிய கூட்டம் மக்களை ஒருங்கிணைக்க இப்படி மக்களை தொழில் சார் பிரிக்க வேண்டும் என்று ஒருக்காலும் கேட்டதில்லை. வேளாண்மை செய்பவர்களுக்கு இவ்வாறு தொழில் பிரிவுகள் உருவாக தேவை உண்டு. ஆடு மாடு மேய்க்கும் கூட்டத்துக்கு என்ன தேவை என்று எந்த திராவிட புளுகர்களும் இதுவரை சொன்னது இல்லை.
சமூக கட்டமைப்பில் பூசாரிகளின் பலம்
பூசாரிகள் அல்லது பார்ப்பனர் என்போர் எல்லா தேசிய இனத்திலும் இறை பணிக்காக பணிக்கப்பட்டனர். ஆளும் வர்கத்துக்கு அடுத்த கட்டத்தில் இருப்பவர்கள் இவர்கள். இவர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் தான் தலைவர்/அரசனின் புத்திசாலித் தனமே உண்டு. அரசு நிர்வாக கட்டமைப்பு என்பது ஒரு ஊர் என்கிற வகையில் (அதாவது பார்ப்பனர்களின் ஒருங்கிணைப்பு என்று ஏற்ப்படாத போதே) இருக்கும் போதே பூசாரிகளின் பலம் என்பது அபரிமிதமானது. 'சுடலை மாட சாமி வந்திருக்கான், இந்த தலைவனை கொன்னு பலி கொடுங்கடா' என்றால், அந்த தலைவன் காலி.....!!!
ராஜ ராஜன் பல நேரங்களில் பார்ப்பனர்களை அனைத்து இருக்கிறான். பல நேரங்களில் இராஜ தந்திரமாய் அவர்களை வீழ்த்தியும் இருக்கிறான். ஆகவே தனித்து இயங்கிய காலத்திலேயே பூசாரிகளின் பலம் பெரியது என்றால், இனக்குழுக்கள் ஒருங்கிணைந்த பின்பு (அதாவது பல ஊர் பூசாரிகளின் ஒருங்கிணைப்பு) என்ற ஒன்று உருவாகிய பின்பு அவர்களின் பலத்தை கேட்கவா வேண்டும்...?
இது ஏதோ தமிழ் சமூகத்தில் மட்டும் தான் அப்படி என்று என்ன வேண்டாம்...? உலகில் நாகரிகம் இருக்கும் அனைத்து இடங்களிலும் பூசாரிகள் நிலை இப்படி தான்.
* உதாரணம்: கிரேக்க நாகரிகத்தில் ராஜகுருக்களை அந்த நாட்டு மன்னர்கள் கொன்று இருக்கின்றனர். ஆனால், இன்று அந்த ஒட்டு மொத்த கிரேக்கத்துக்கும் தலைவர் 'போப்' என்னும் preist தானே..?
fuedal system என்பதில் பூசாரிகளின் பங்கு
மேற்ப்படி ஊர்கள் சேர்ந்து பேரூர் என்றும், அந்த பேரூர்கள் சேர்ந்து நாடு என்றும் உருவாகும் போது, எவ்வாறு நிர்வாகம் செய்ய சாதி என்ற ஒன்று உருவாகியதோ, அதோ போல பலர் பேரூர்,நாடுகளை நிர்வாகம் செய்ய உருவாகியதே நால்வர்ணம் (fuedal system ) என்பதாகும். மனித வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக வரலாற்று அறிஞர்களால் நோக்கப்படும் இந்த (feudal system ) என்பது, மருத நிலத்திலேயே தோன்றி ஏற்றம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்ப்படி பார்ப்பனர்களின் ஒருங்கிணைப்பு என்பது தற்போது வேறு ஒரு வடிவத்தை எட்டுகிறது. ஒட்டு மொத்த நாடு என்கிற அமைப்பில், பூசாரிகளின் பலம் இன்னும் அதிகமாகிறது.
எகிப்திய feudal system த்தில் பூசாரியின் நிலை.
மேற்ப்படி பதிவுகளில் இருந்து நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளலாம். நிர்வாக கட்டமைப்பு என்பது வளர, வளர பார்ப்பனர்களின் ஒருங்கிணைப்பும், பலமும் அதிகம் ஆகி கொண்டே செல்கிறது. மேலும் எந்த ஒரு ஆட்சியாக இருந்தாலும், யார் ஆட்சி செய்தாலும் பூசாரிகள் தங்களது நிலையை அண்டி பிழைத்தோ, அதிகாரம் செலுத்தியோ தக்க வைத்தே வந்துள்ளனர் என்பது உண்மை.இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாகரிகங்களிலும் இதுவே நிதர்சனம்.
சம்ஸ்கிருத மொழி ஏற்ப்படுத்திய தாக்கம்
சமஸ்கிருதத்தின் தாய் மொழி என்பது தமிழ் என்பது அறிஞர் பெருமக்களால் நிறுவப்பட்ட ஒன்று. மிக சமீபத்தில் அதாவது கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே சமஸ்கிருதம் என்கிற மொழி ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்படுகிறது. இந்த மொழி உருவாக்கப்பட்டதர்க்கான காரணங்கள்.
> அரசனுக்கும், பார்ப்பனருக்கும் மட்டுமே அறிவு சார் விஷயங்கள் இருக்க வேண்டும், போதிக்கப்பட வேண்டும் என்கிற ஒரு நெருக்கடி.
> மேற்ப்படி மற்ற தொழில் செய்பவர்களுக்கு அறிவு சார் விஷயங்கள் (வானியல் சாஸ்த்திரம் உட்பட) தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவர்களின் தொழில் அவர்கள் கவனம் செலுத்துவதே போதுமானது என்ற முடிவு.
> வாரிசு அரசியல் போன்ற பல விசயங்களுக்கு இப்படி ஒரு மொழி பயன்பாடு என்பது மிகவும் பயன்படும் என்பதால் அனைத்து அரசர்களும்,மன்னர்களும் அதை ஏற்றுக் கொள்கின்றனர்.
என்ன தான் சமஸ்கிருத மொழியை தமிழன் உருவாக்கி இருந்தாலும், அவன் அதை ஊறுகாய் போல பயன்படுத்திநானே ஒழிய, தமிழே ஆட்சி மொழி என்ற நிலையில் அவன் தெளிவாகவே இருந்தான்.
என்ன தான் பல தமிழ் மன்னர்களின் பெயர்கள் சமஸ்கிருத மொழியில் இருப்பினும், நாயக்கரின் காலம் வரை தமிழே ஆட்சி மொழி என்பதை அறிக.
இவ்வாறு உருவான 'சமஸ்கிருத மொழி என்பது அறிவு மொழி,அது ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே' என்கிற பரப்புரையை இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து ஆளும் வர்க்கமும் ஏற்றுக் கொள்கின்றனர். இருப்பினும், தமிழகத்தில் அதற்க்கு எதிர்ப்பு கிளம்புகிறது. காரணம், மற்ற தொழில் செய்பவர்கள் 'அறிவு ஜீவி'களாக ஆக முடியாது என்பதே.....!!!
தமிழ் மண்ணில் சைவமும்,வைணவமும்
மேற்ப்படி 'இன்னாருக்கே அறிவு சார் மொழி' என்பதை தமிழ் சமூகத்தில் வாழ்ந்த, பின்னால் வந்த மக்கள் ஏற்க்கவில்லை. இதை எதித்து கலகம் பிறக்கிறது. புதிதாக
சைவம்,வைணவ நெறிகள் உருவாகின்றன. இதுவே
இன்றைய ஒடுக்கப்பட்ட சாதியாக சொல்லப்படும் பறையர் சமூகம், அன்று அறிவு ஜீவியாக (சாக்கியர்,வள்ளுவர்) இருந்ததன் பின்னணி.
ஆனால், இதே போன்ற ஒரு நிலையை (அதாவது ஒடுக்கப்பட்ட ஒரு சாதி அறிவு ஜீவியாக வணங்கப்படுவது) , சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்ட மற்ற தேசிய இனங்களில் நீங்கள் பார்ப்பது கடினம். இந்த சமஸ்கிருத எதிர்ப்பு நிலை என்பதே இன்று வரை தமிழ் நாட்டுக்கும், ஏனைய மற்ற தேசிய இனங்களுக்கும் இடையே காழ்ப்புணர்வு இருந்து வர அடிப்படை காரணம்.
தமிழன் வீழ்ந்த கதை
தமிழனை வீழ்த்தியது விஜயநகர பேரரசான நாயக்கர்களே. இது எப்படி என்பதை சுருக்கமாக பார்ப்போம். மேற்ப்படி விஜயநகர பேரரசு நாயக்கர்கள், முல்லை நிலத்தில் ஆடு மாடு மேய்த்து கொண்டு இருந்த அநாகரிக குடிகள். மேற்ப்படி தமிழ் மன்னர்கள், பார்ப்பனர்களை அவ்வப்போது அடக்கி ஆள்வதும், அவர்களை மதிக்காமல் நடப்பதும், அவர்களுக்கு கடுமையான எரிச்சலை ஏற்ப்படுத்தி உள்ளது இயல்பே. இதை சரியாக பயன்படுத்திய தெலுங்கு பார்ப்பனர்கள், மேற்ப்படி நாயக்கர்களை கூர் தீட்டி, தமிழ் மன்னர்களுடன் மோத விட்டு, தமிழனை வீழ்த்தி உள்ளனர். அவ்வாறு தமிழன் வீழ்த்தப்பட்டுடன் நாயக்கர் செய்த முதல் காரியமே '
ஆட்சி மொழியாக இருந்த தமிழை தூக்கி எறிந்து,சமஸ்கிருதத்தை உள்ளே கொண்டு வந்தது தான்'.
கோவிலில் தமிழ் தூக்கி எறியப்பட்டது,சமஸ்கிருதம் உள் நுழைந்தது நாயக்கர் காலத்திலேயே.....!!! அதுவரை இருந்து வந்த குடும்பு ஆட்சி முறையை ஒழித்து விட்டு, தமிழ் மண்ணில் தனது இராணுவத்தை நிறுத்தினர். அப்படி நிலையாக நிறுத்தப்பட்ட இராணுவ பிரிவுக்கு பாளையங்கள் என்று பெயர். தமிழ் நாட்டில் இருக்கும் பாளையம் (பாளையம் என்பது தெலுங்கு பெயர்) அனைத்தும், தமிழன் வீழ்ந்ததன் நினைவாக இன்றும் நிற்கும் எச்சமே....!!! தொழில் ரீதியாக இங்கே இருந்த தமிழ் பார்ப்பனர்களும், தானாகவோ அல்லது மிரட்டப்பட்டோ மேற்ப்படி தெலுங்கு பார்ப்பனர்களுடன் கரம் சேர்க்க வர்ப்புருத்தப்பட்டனர். பல தமிழ் அய்யர்களும் இன்று தமிழனுக்கு எதிராக இருக்க இதுவே அடிப்படை காரணம். இருப்பினும் சில தமிழ் பார்ப்பனர்கள், மேற்ப்படி தெலுங்கு பார்ப்பனர்களின் போக்கை ஏற்க்கவில்லை. அது நாள் வரை இருந்து வந்த 'அரசன், அந்தணன், வணிகன், வேளாளன்' என்கிற தமிழனின் நிர்வாக பிரிவானது, 'பிராமணன், சத்ரியன்,வைசியன்,சூத்திரன்' என்று நாயக்கர் காலத்தில் மாற்றம் கொள்கிறது. மண்ணின் மைந்தர்களும், மன்னரின் வாரிசுகளும் வீழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டனர்.கால ஓட்டத்தில் பல பேரரசுகள், தோன்றினாலும், வீழ்ந்தாலும் பிராமணர்கள் தங்களது மேலாண்மையை தக்கவைத்தே வந்துள்ளனர்.
இந்து மதம் என்ற மத நிறுவனம் துவக்கம்
"
இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றைச் சொல்கிறோமே, இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ஹிந்து என்றால் அன்பு என்று அர்த்தம். ஹிம்சையை தூஷிப்பவன் ஹிந்தூ என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும், ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது.
ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து நதியாக கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருக்கிறதல்லவா. ஆனபடியால் ஸிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை இந்து என்றும் குறிப்பிட்டார்கள்."
முகலாயருக்கு பின்பு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயரே முதன் முதலில் இந்தியா முழுவதையும் நிர்வாகம் செய்யும் பொருட்டு, அதை ஒரே குடையின் கீழ் கொண்டு வர விரும்பினர்.
ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பு, இந்து மதம் என்கிற ஒரு மதம் இருந்திருக்க வில்லை. என்ன தான் சிறிதும், பெரிதுமாக பல்வேறு அரசுகள் இந்தியா முழுக்க பிரிந்து இருப்பினும், அவை அனைத்திலும் பிராமணர்களின் கை ஓங்கி இருப்பதை உணர்ந்து இருந்தனர். எனவே அந்த பிராமணர்களுடன் கை கோர்த்து, எல்லா காலத்துக்கும் இந்தியாவை நிர்வாகம் செய்ய 'ஆங்கிலேயர்' உருவாக்கிய பிராமணர்களுக்கான ஒருங்கிணைப்பே 'இந்து' மதம் என்பதாகும்.
மாக்ஸ் முல்லர் என்ற தில்லு முல்லர்
ஆங்கிலேயர் பிராமணருடன் கை குலுக்க அவர்கள் உருவாக்கியதே 'ஆரிய தியரி' ஆகும். மாக்ஸ் முல்லர் என்கிற தில்லு முல்லர் இதை செய்து முடித்தார். இதன் அடிப்படையில், அதுவரை இருந்து வந்த அனைத்து தேசிய இனங்களின் (குறிப்பாக, தமிழர்கள்) அடையாளமும் 'இந்து' மதத்தின் அடையாளமாக மாக்ஸ் முல்லர் சித்தரித்தார். (உம்: ஆரிய கடவுள், ஆரிய இனம், ஆரிய பண்பாடு etc ). இது இந்தியா முழுவதும் இருக்கும் பிராமணர்கள் ஒருங்கிணைய மட்டும் இன்றி, ஆங்கிலேயருக்கும் அது நலம் பயக்கும் நோக்கில் திட்டமிட்டே உருவாக்கப்பட்ட நிறுவனம் ஆகும். இது தான் இந்து மதம் உருவான கதை.
இன்றைய இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 'இந்து' என்பதற்கு கூறும் வரையறை '
எவன் கிருத்துவன் இல்லையோ, எவன் இசுலாமியன் இல்லையோ, எவன் பவுத்தன் இல்லையோ, எவன் சீக்கியன் இல்லையோ, அவன் எல்லாம் இந்து' என்பதாகும். இதில் இருந்து, 'இந்து' என்பவன் துல்லியமாக வரையறை செய்யமுடியாதவர்கள் என்பதை எளிதில் உணரலாம். மேலும், 'இந்து' என்பதற்கு, '
பிராமணிய ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டவன்' என்பதும் அரசியல் சட்டம் சொல்லும் விளக்கத்தில் ஒன்றாகும். ஏற்றுக் கொள்ளாதவர்களை இந்து மதம் சண்டாளர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் ஒதுக்கி வைப்பது அனைவரும் அறிந்ததே....!!!
மாக்ஸ் முல்லர் அவிழ்த்த ஆரிய கதைகளில் முக்கியமானவை இவை.
* ஆரியர்கள் கைபர்,போலன் கணவாய் வழியாக வந்தனர்.
* பிராமணர்களும் ஆங்கிலேயரும் ஆரியர்கள்.
* ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள்.
* ஆரியர்களே நால்வர்ணத்தை உருவாக்கினர்.
* ஆரியர்களே சாதியை கண்டு பிடித்தனர்.
* பிராமணர்களின் நிறமும், ஆங்கிலேயரின் நிறமும் ஒன்று.
இவற்றை கொஞ்சமும் ஆராய்ச்சி செய்யாமல், அப்படியே ஏற்றுக் கொண்டு நம்மிடம் கும்மி அடிப்பவர்கள் தான் 'திராவிட பகுத்தறிவு வாதிகள்'. பெரியார் உட்பட....!!!
கால்டுவெல் என்கிற பொய்யர்
சரி. இந்தியா முழுவதும் இருந்த பிராமணர்களை ஒருங்கினைத்தாகி விட்டது. மீதி இருப்பவர்களை எப்படி ஒருங்கிணைப்பது? அப்படி ஒருங்கிணைத்தால் தானே, இவர் ஆதிக்க வர்க்கம், இவர் மீதி உள்ளவர்கள் என்று தெரியும். அதன் படி பிரித்தாண்டு, நிர்வாகமும் செய்ய முடியும். அதற்காக உருவாக்கப்பட்டது தான் கால்டுவெல் என்கிற ஆங்கிலேயர் உருவாக்கிய 'திராவிடம்' என்கிற கருத்தியல். ஆக, பிராமணர்கள் அனைவரும் ஆரியர்கள், மற்றவர்கள் திராவிடர்கள். வேலை முடிந்தது.
மக்களை எப்போதும் பிரித்தே வைத்து இருந்து, சாதியத்தை காத்து, தந்து சுயநலனை நிலை நாட்ட, பிராமணர்கள் இன்று வரை காத்து வரும் நிறுவனமே 'இந்து மதம்'. பிராமணர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒருங்கிணைந்தே இருப்பார்கள். எந்த தேசிய இனத்துடனும் கலக்காமல் இருப்பார்கள். எப்படி எல்லாம் மக்களை (தங்களை தவிர),கூறு போட முடியுமோ, அப்படி எல்லாம் கூறு போடுவார்கள். கூறு போட ஊக்குவிப்பார்கள். தேசிய இனங்களின் விடுதலையை ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள்.
அம்பேத்கார் முன்வைத்த பல விசயங்களை உதாசீனம் செய்த பிராமணியம், அவர் முன் மொழிந்த 'வகுப்புவாதம்' என்கிற விஷயத்தை ஏற்றது. இதன் மூலம் 'பிராமணர் அல்லாதோர்' என்பவர்களை SC / BC / ST என்று வகையாக பிரித்து, காலம் முழுவதும் அவர்களின் ஒருங்கிணைப்பை தடுக்க எதுவாக இருக்கும் என்பதே ஆகும்.
பிராமணியம்: இந்தியாவின் அடிப்படை நிர்வாக கருத்தியல்
"
பிராமணர்களின் ஆதிக்கத்தை தக்க வைத்து, அதற்க்கு வலு சேர்க்கும் வகையில், நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவும் ,தேசிய இனங்களின் அடையாளத்தை அழித்து, மக்களை கூறும் போடும் அனைத்து செயல்களையும்,நிகழ்வுகளையும் ஒன்றாக குறிப்பதே 'பிராமணியம்' என்பதாகும்". இந்நாளில்,
> பிராமணியம் என்ற கருத்தியலுக்கு வருவதற்கு நீங்கள் பிறப்பால் பிராமணராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. (உம்: ராமசாமி நாயுடு என்று அழைக்கப்படும் பெரியார் அவர்கள், எதிர் தரப்பில் இருந்து பிராமணியத்துக்கு முட்டு கொடுத்தார், எனவே இவர் ஒரு பிராமணிய அடிமை)
> தமிழுக்காக இன்னுயிர் ஈத்த உ.வே.சா அவர்கள் பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும், சமஸ்கிருத மேலாதிக்கம் என்பதை தாண்டி, தேசிய இனமான தமிழ் மொழிக்காக பாடு பட்டதால் அவர் பிராமணிவாதி அல்ல.
> மக்களை ஒருங்கிணைய விடாமல் சதா சர்வ காலமும் சாதிய தில்லுமுல்லுகளை திட்டமிட்டு அரங்கேற்றும் தமிழக திராவிட அரசியல் சார்ந்த அனைத்து கட்சிகளும்,அமைப்புகளும் 'பிராமணிய அடிமைகள்' ஆவர்.
இந்த பிராமணியமே இன்று இந்தியாவை ஆளும் கருத்தியல். இதில் எந்த கட்சி பாகுபாடும் இல்லை. தேசிய கட்சிகளும், திராவிட கட்சிகளும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் பிராமணியத்தை ஆதரிக்கும் கட்சிகளே.....!!! திராவிட கட்சிகள் பிராமணியத்தை எதிர்ப்பதாக பம்மாத்து செய்கின்றனர். ஆனால், பிராமணியம் என்பதை ஒழியும் பட்சத்தில் இவர்களுக்கு வேலை இல்லை, அரசியல் செய்ய முடியாது, எனவே பிராமணியம் அழிவதில் அவர்களை விட இவர்களுக்கே பாதிப்பு அதிகம் என்பதை தமிழர்கள் உணர வேண்டும்.
திராவிடமும், இந்து மத எதிர்ப்பும்
உண்மையில் பெரியார் உள்ளிட்டோர் இந்து மதத்தை எதிர்க்கவில்லை. அதை நோக்கி ஒரு சுண்டு விரலை கூட நகர்த்தியது இல்லை. அந்த சாக்கில் அவர் செய்தது இவைகளை தான்.
> ஒருக்காலத்தில் மேற்ப்படி நாயக்கர் ஆட்சி காலத்தில் பிராமணர்கள் நன்கு கவனிக்கப்பட்டு இருந்தனர்.
> பல ஆட்சி மாற்றங்கள் நடந்தாலும், பிராமணர்கள் இன்று வரை தங்கள் ஆதிக்கத்தை தக்க வைத்தே வந்துள்ளனர். ஆனால், நாயக்கர் ஆட்சி உட்பட பல ஆட்சிகள் இருந்த இடமே தெரியவில்லை.
> இந்த காழ்ப்புணர்வின் வெளிப்பாடே 'பெரியாரின் பிராமன் எதிர்ப்பும், இந்து மத எதிர்ப்பும்'.
பெரியாரின் திராவிட அரசியல் என்பது தனது வடுக நாயக்கரின் ஆதிக்கத்தை மீண்டும் பிராமணரிடம் மீட்டு எடுக்க வேண்டி நடந்த ஒரு இராஜதந்திர காய் நகர்த்தல் ஆகும். இதனால் தமிழனுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. காரணம், திராவிட அரசியல் முழுக்க முழுக்க , தெளுங்கரிகளின் ஆதிக்கத்தை மீண்டும் தமிழ் மண்ணில் நிலை நாட்டவே இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.
பெரியார் செய்த முக்கிய சதி செயல்
தனது வடுக ஆதிக்கத்தை தக்க வைத்து கொண்டே, தமிழனை மேலும் தாழ்த்த தனது முன்னோர்களை போலவே பல காரியங்களை நிகழ்த்தினார்.
> பிராமணர்களின் ஒருங்கிணைப்பை உடைக்க பெரியார் எதையும் செய்யவில்லை. மாறாக, அதை வலுப்படுத்த அவர்கள் கூறியவற்றை அப்படியே மீண்டும் கூறி இந்து மதத்தை வலு படுத்தினார். உண்மையில், அவர் இந்து மதம் என்கிற மத உருவாக்கத்தின் பின்பு உள்ள அரசியலை சுட்டிக் காட்டி, அது திருடி சென்ற தமிழரின் அடையாளங்களை தமிழருக்கு மீட்டு கொண்டு வந்து இருக்க வேண்டும். ஆனால்,அதை அவர் தலைகீழாகவே செய்தார். அதாவது இந்து மதத்தை காத்தார்.
> தெலுங்கு உட்பட பல தேசிய இனங்களில் உள்ள அநாகரிக செயல்களை (உடன் கட்டை ஏறுதல், வீட்டில் மலம் கழித்து அதை அல்ல ஒரு சாதியை உருவாக்குதல், கோவிலுக்கு பெண்களை நேர்ந்து விடுதல்) போன்ற செயல்களை திராவிட அநாகரிக செயல்கள் என்று கூறி, இறுதியில் அதை தமிழரின் மீதே திணித்து 'தமிழன் ஒரு அநாகரிகன்' என்கிற ரீதியில் பரப்புரை செய்தார்.
> அப்படிப்பட்ட தமிழனை மீட்டெடுக்கும் மீட்பராக திராவிடத்தையே காட்டி வந்தார்.
தலித்தியம் என்ற சாத்தான்
தலித்தியம் என்பது 90 களில் இந்திய அரசால் திட்டமிடப்பட்டே உருவாக்கப்பட்டு போற்றி வளர்க்கப்பட்ட ஒரு கருத்தியல் ஆகும். ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையே இதன் அடிப்படை நோக்கம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதை நன்கு உள்வாங்கியவர்கள் 'SC / BC ' என்ற வகுப்பு வாத அடிப்படையில் மக்கள் பிரிவினைகளை ஊக்குவித்த பிராமணியம், மேற்ப்படி வகுப்ப்வாத மக்களிடையே அடுத்தக்கட்டமாக குழப்பத்தையும், பதட்டத்தையும், ஒற்றுமை இன்மையையும் உருவாக்கவே தயாரிக்கப்பட்டது என்றும் எளிதில் விளங்கும். சுருக்கமாக, தலித்தியம் என்பது பிராமணியத்தின் இன்னொரு குழந்தை.
அம்பேத்காரை ஏற்காத பிராமணியம், திட்டமிட்டே
அம்பேத்கார் தான் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதி என்று பரப்புரை செய்யும் நோக்கம், அந்த அந்த தேசிய இனங்களில் உள்ள ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளை ஓரம் கட்டி விட்டு, அம்பேத்காரை அவர்களின் அடையாளமாக மாற்றுவதே ஆகும். இதன் மூலம் தலித்தியம், அதன் அடையாளம் என அனைத்தையும் தனது பிடியில் வைத்திருந்து ஆட்டுவிப்பதே பிராமணியத்தின் நோக்கம்.
தமிழர்கள் நாம் செய்ய வேண்டியது என்ன..?
* தலித்தியம் முதலில் தமிழ் நாட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும்.
* திராவிடம் தமிழர்களுக்கு ஒரு துரோகி என்பதை உணர வேண்டும். அது முழுக்க முழுக்க பிராமண அடிமை கருத்தியல் என்பதை உள்வாங்க வேண்டும். திராவிடத்தை அரசியலை வேரோடும் மண்ணோடும் பிடுங்கி ஏறிய வேண்டும்.
* பிராமணர்களுக்கு உதவ ஆரியம், தெலுங்கருக்கு உதவ திராவிடம் என்பது போல, தமிழருக்கு என்று ஒரு கருத்தியல் உருவாக்கப்பட வேண்டும்.
* தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி அமைய தமிழர்கள் ஒருங்கிணைய வேண்டும். இதுவே தமிழன் என்ற தேசிய இனத்துக்கான விடுதலை.
* மேற்ப்படி இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து தேசிய இனங்களின் விடுதலைக்கும், ஆரிய கதையின் பிடியில் இருந்து அவர்களை விடுவிக்க எதிர்காலத்தில், பாடுபட வேண்டும். இதன் மூலம் ஆதிக்கம் என்பது அந்த அந்த தேசிய இனத்தின் பிடியில் வருவதால், தனித்து ஆதிக்கம் செய்யும் பிராமணர்கள் அந்த அந்த தேசிய இனத்துடன் கலக்கவோ, பிரியவோ வர்புருத்தப்படுவார்கள். இது பிராமணியம் என்ற கருத்தியல் அழியவும், அவர்களுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பை உடைக்கவும் வழி செய்யும்.
இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்