Showing posts with label தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம். Show all posts
Showing posts with label தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம். Show all posts

19 May 2014

சாதியம்: தலைமை உரை

தோழர்களே!...
சில ஆண்டுகளுக்கு முன்பு அப்போது நான் "மீண்டெழும் தமிழர் வரலாறு " பாகம் -2, தயாரிப்பு வேலைகளில் இருந்த சமயம்!...பாண்டியர்களை பற்றி, குறிப்பாக விஜய நகர படைகளிடம் தோற்ற பாண்டிய படை பிரிவுகள்,தமிழ்நாட்டில் எங்கெங்கு உள்ளது என்று தேடிக் கொண்டிருந்த நேரம்!!! மதுரையை இழந்த பாண்டிய படையின் ஒரு பகுதி தெற்கிலும், ஒரு பகுதி மேற்கே கொங்கு பகுதிக்கும் பின் வாங்கி விட்ட தகவல் கிடைக்க,அப்படி கொங்கு பகுதியில் சென்ற படைகள் இன்று பாண்டிய பண்ணாடி என்றும்,மண்ணாடி என்றும்,இருளர் என்றும்,பல பெயரில் வாழ்ந்து வருவதை கண்டுபிடித்தவுடன்,அவர்களை பற்றிய ஆய்வுகளையும் தீவிர படுத்தினேன்!!!



இவர்களில் கோவை மாநகரை உருவாக்கியதாக சொல்லப்படும் "இருளர் " பற்றிய ஆய்வுகளை நான் தீவிரப்படுத்திய போது,அவர்கள் இருள பள்ளர் என்ற பிரிவை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது!!!உடனே நான் இவர்கள் அதிகமாக வாழும் இன்றைய கேரளாவின் பாலக்காடு மாவட்ட மலை கிராமங்களுக்கு சென்ற போது, அவர்கள் சொன்ன பல தகவல்கள் என்னை ஆச்சர்யப்படுத்தியது மட்டுமல்ல, சாதி என்றால் என்ன என்றும்?,தமிழ்ச் சாதிகளை இந்த திருட்டு திராவிட கூட்டம் எப்படியெல்லாம் சிதறடித்துள்ளது என்பதையும்,எனக்கு புரிய வைத்தது தோழர்களே!!! இந்த இருள பள்ளர்கள் தாங்கள் போரில் தோற்றதால்,கிழக்கே கடல் பகுதியில் இருந்து கொங்கு பகுதிக்கு வந்ததாகவும்,அப்போது வெறும் காடுகளாய் இருந்த அப்பகுதியை
" கோவன் " என்ற தங்கள் தலைவனே, காடு திருத்தி நாடாக்கியதால், "கோவன்புத்தூர் " என்று அழைக்கப்பட்டு,இன்று அது கோயம்புத்தூர் என்று மறுவி விட்டதாகவும் கூறுகின்றனர்!!! இன்று கோவையின் ஆதி கடவுளாக வணங்கப்படும் ஆதி கோனியம்மன்,இவர்ளுக்கு அரசியாக இருந்தவளே என்பதுடன்,அக் கோவிலில் வருடா வருடம் அம்மன் திருமன விழாவில்,இந்திரனாக (அரசனாக) பாவித்து அம்மனுக்கு தாலி கட்டும் சடங்கு,அப்பகுதி பள்ளர்கள் தலைமையிலேயே நடக்கிறது!!! 


பின்பு கொங்கு பகுதியிலும் தொடர்ந்த போரினால், தங்கள் படையின் ஒரு பிரிவு மலைகளில் தஞ்சம் புகுந்து பின்பு அங்கேயே தங்கி விட்டதாக சொல்கின்றனர், அப்பகுதீயில் வாழும் இருளப் பள்ளர்கள்!!!மலைகளிலேயே அவர்கள் தங்கியதற்கு அவர்கள் சொன்ன காரணம் சுவாரஸ்யமானது மட்டுமல்ல,நான் மேலே சொன்ன சாதிகளை பற்றிய பல விசயங்களை எனக்கு புரிய வைத்தது தோழர்களே ??? இந்த இருளர்கள் தங்கள் ஊர் தலைவனை மூப்பன் என்றே அழைக்கின்றனர்!!! மேலும், அவர்களின் ஊர் மூப்பனை " மல்லர் " என்றே அழைக்கின்றனர்!!!


அட்டப்பாடியில் மள்ளர்களுடன் செல்வா பாண்டியர்

அப்படி அந்த காலத்தில் இவர்களின் மூப்பன்(அரசன்) ஒருவன்,இவர்கள் பதுங்கிய மலைப்பகுதியில் வாழ்ந்த மலைவாழ் முடுகர் இன பெண் ஒருத்தியை விரும்பியிருக்கிறான்!!! ஆனால் இவனுக்கு பெண் கொடுக்க அம் மலைவாழ் முடுகர்கள் மறுத்திருக்கின்றனர்!!! நீ எவ்வளவு பெரிய அரசனாய் இருந்தாலும்,எங்கள் குலப் பெண்னை வேறு குலத்தை சேர்ந்த உனக்கு கொடுக்க மாட்டோம் என்று கூறியிருக்கின்றனர் அம் முடுகர்கள், அப்படியே திருமணம் நடந்தாலும், நீ எங்கள் பெண்னை விட்டுவிட்டு உன் நாட்டுக்கு செல்லமாட்டாய் என்பதற்கு என்ன உத்திரவாதம் என்று கேட்டுள்ளனர்??? அப் பெண் மேல் இருந்த மோகத்தில், நீங்கள் பெண் கொடுத்தால் தான் இங்கயே தங்கி விடுவதாக வாக்குறுதி கொடுத்தும் அம் முடுகர்கள் மசியாததால்,அப் பெண்னை கந்தர்வ முறைப்படி திருமணம் செய்திருக்கிறான் நம்ம மூப்பன் மல்லன்!!! 

தங்கள் மூப்பன் (அரசன்) முடிவுக்கு கட்டுப்பட்டு, அவனது படைகளும் அங்கயே தங்கியதால் உருவான ஊர்களே இன்றைய அட்டப்பாடியும் அதனை சுற்றியுள்ள கிராமங்களும்!!! இன்றும் அட்டப்பாடியில் உள்ள புகழ் பொற்ற "மல்லீஸ்வரன் " கோவில், நான் சொன்ன அவர்களின் மூப்பன் (அரசன்) நினைவாக கட்டப்பட்ட நினைவிடமே!!! தங்கள் குல வழக்கப்படி தங்கள் வேந்தர் வழிபாடான முன்னோர் வழிப்பாட்டை இன்று வரை கடைபீடித்து வருகின்றனர், பள்ளர்களின் ஒரு பிரிவான இருளப் பள்ளர்கள்!!!

இவர்கள் பள்ளர்கள் தான் என்பதை நிருபிக்கும் விதமாக, மலைகளில் கூட ஆற்றங்கரைகளிலேயே வசிக்கும் இவர்கள், அங்கும் வேளான்மையே செய்கின்றனர்!!! தங்களில் பெரும்பாலோருக்கு மருதன், மருதையன் என்று பெயர்வைக்கும் இவர்கள், இன்றும் இவர்களின் மூப்பர்களை "மல்லன் " என்றே அழைக்கின்றனர்!!! இவர்களை சந்திக்க சென்ற போதே, இவர்கள் மல்லீஸ்வரியாக (அரசி) வணங்கும் அம் முடுகர் இன கிழவி ஒருத்தியிடம் நான் பேசிய போது, அவர்களை மட்டுமல்ல, அவர்களை பற்றி பேசிய என்னையும் திட்டி தீர்த்து விட்டார் தோழர்களே!!! எங்கிருந்தோ வந்த இவர்கள், எங்கள் பெண்ணை ஏமாற்றி அபகரித்துக் கொண்டனர் என்பதே அக் கிழவியின் குற்றச்சாட்டு தோழர்களே!!! அந்த சம்பவம் நடந்து பல நூறு ஆண்டுகள் ஆகி விட்டன!, காட்டுவாசி வாழ்நிலையை இன்றும் தாண்டாத அம் முடுகர்களை விட, அவ் இருளர்கள் வளமையாகவே வாழ்கின்றனர்!, அவ்வளவு ஏன், அவ் இருள மல்லனை திருமணம் செய்ததால்,  அவர்கள் பெண் இன்று எல்லோரும் வணங்கும் "மல்லீஸ்வரி " கடவுளாகவே மாறிவிட்டால்!, இருந்தும் அம் முடுகர்களால் இத்துனை நூற்றாண்டுக்கு பிறகும் அத் திருமணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை தோழர்களே!!! இது, தங்களது குலத்தை காப்பாற்றும் அம் முடுகர்களின் பழங்குடி தன்மையையே காட்டுகிறது... தோழர்களே!!!

இப்படி தான் தமிழ் இனக்குழக்கள் ஒவ்வொன்றும் தன் குலத்தை கட்டிக்காக்க,
தன் குலத்தை தவிர வேறு யாருக்கும் பெண் கொடுப்பதில்லை!!! இன்னும் தன் பழங்குடி தன்மையில் இருந்து அவை மாறாததையே காட்டுகிறதேயன்றி,இந்த திராவிட  திருடர்கள் சொல்வது போல், சாதி வெறியும் இல்லை ஒரு மண்ணும் இல்லை தோழர்களே!!! பழங்குடி தன்மைகளை புரிந்து கொள்ளாமல், மேலோட்டமான சாதி ஒழிப்பு அரசியலும் கலப்பு திருமண கோஷங்களும், தேவையற்ற குழப்பங்களையும், பதட்டங்களையுமே சமுகத்தில் உருவாக்கும் தோழர்கள்!!! அப்படியான சமுக பதட்டம் எப்போதும் தமிழர்களிடையே இருக்க வேண்டும் என்பதே, வடுகர்களின் விருப்பம் தோழர்களே!.. நாம் அடித்துக் கொண்டால் தானே,  இந்த வடுகர்களூக்கு கொண்டாட்டம்... இந்த திருட்டு வடுகர்கள் தங்கள் சொந்த மக்களிடம் பேசாத சாதி ஒழிப்பும், கலப்பு திருமண திட்டத்தையும், தமிழர்களிடம் மட்டும் பரப்புரை செய்யும் உண்மையான நோக்கம் இப்போது புரிகிறதா???

இந்த திராவிட இனவெறியர்களின் சதி திட்டம் புரியாமல்,  தமிழ் இனக்குழுக்களில் ஒரு சிலரை(குறிப்பாக வன்னியர்களை),  சாதி வெறியர்களாக சித்தரிக்கும் மூடர்களே? உங்களுக்கு தைரியம் இருந்தால், எதாவது மலைவாழ் பழங்குடிகளிடம் சென்று உங்கள் அடையாளங்களை இன்றே விட்டுவிட சொல்லுங்கள் பார்ப்போம்??? அவ்வளவு ஏன், நாங்க பெரிய உயர்சாதி என்று சொல்லி ஒரு பழங்குடி பெண்ணை திருமணம் செய்திடுங்கள் பார்ப்போம்??? சாதியத்தின் பின் பழங்குடி தன்மைகள் உள்ளது தோழர்களே!!! அது புரியாமல் இந்த போலி சாதி ஒழிப்பு புரட்சியாளர்களின் வெற்று புலம்பலான சாதி ஒழிப்பிற்கு பிறகே தமிழ்த்தேசிய அரசியலே பேச வேண்டும் என்றால், நாமெல்லாம் அடித்துக் கொண்டு செத்த பிறகே, அது சாத்தியம் தோழர்களே!!!

இப்படி நாம் முட்டாள்தனமாக அடித்துக்கொண்டு செத்தால் தானே, இந்த வடுகன் இங்கே நிம்மதியாய் வாழ முடியும்??? ஆகவே தான் அவர்கள் அவர்களின் சாதியை ஒழிக்காமல், நம்மிடம் மட்டுமே பம்மாத்து காட்டுகின்றனர்!!! இந்த சூழ்ச்சி நமக்கு புரியாதவரை, கடவுளே வந்தாலும் நம்மை காக்க முடியாது தோழர்களே!!! ஆகவே?, ஆதிக்க சாதி, தாழ்த்தப்பட்ட சாதி என்பதெல்லாம், வடுக திராவிடத்தின் சூழ்ச்சி அரசியல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள்!!!

செல்வா பாண்டியர்
தலைவர்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

13 May 2014

உலகின் முதல் வலிமையான அரசை உருவாக்கியவன் தமிழனே

தமிழர்களே உலகில் முதன்முதலில் வலிமையான அரசை கட்டமைத்தனர் என்பதற்கும்? தமிழர்களே உலகம் முழுவதும் பரவி பல ஆற்றங்கறை நாகரிகத்தை உருவாக்கினர் என்பதற்கும்? நமக்கு மற்ற ஆதாரங்கள் ஆயிரம் இருந்தாலும், 
அவற்றையெல்லாம் விட மிகப்பெரிய ஆதாரம்!, கடற்படையை குறிக்கும் " NAVY "
என்ற சொற்பதமே!!!



தமிழில் சிறிய படகுளை கட்டுமரம் என்பர். அதையே ஆங்கிலத்தில் "Catamaran " என்கின்றனர். தமிழில் பெருங் கப்பல்களை நாவாய் என்பர். அதையே ஆங்கிலத்தில் "Navy " என்கின்றனர். இது மட்டுமல்ல, உலகின் அனைத்து நாகரிகங்களிலும், தாங்கள் நாடு கடலில் மூழ்கிய போது Nova என்ற கடவுள், தங்களை கப்பல்களில் காப்பாற்றி அப்பகுதிக்கு கொண்டுவந்து சேர்த்ததாக,பழங்கதை ஒன்று புழக்கத்தில் உண்டு!!!




கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் பரதவர் உபயோகித்த கலம். நான்கு பாய்மரங்களைக் கொண்டது





திருநெல்வேலி தொல்பொருட்காட்சிச் சாலையில் வைக்கப்பட்டடுள்ள, பூம்புகார் கடற்கடையிலிருந்து 19 மைல் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட சிதைந்த கப்பலின் அடிபப்டையில் இந்தியத் தொல்லியல் ஆய்வகம் உருவாக்கிய சோழர் கால கப்பலின் உடற்பகுதியின் மாதிரி



இலக்கியங்களில் நாவாய்


நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களி இநல் யானைக் கரிகால் வளவ (புறம் 66)



களிறே முந்நீர் வழங்கும் நாவாய் போல (மதம் கொண்டு ஓடிற்று - புறம் 13)

வெளில் இளக்கும் களிறு போல,
தீம் புகார்த் திரை முன்துறை,
தூங்கு நாவாய், துவன்று இருக்கை,
மிசைக் கூம்பின் நசைக் கொடியும்; (பட்டினப்பாலை 172-175)

கடலோடி தமிழனை பற்றி கிரேக்க அறிஞர் பிளினி

There is another more serviceable port, belonging to the Neacyndi tribe, called Porakad; this is where king Pandion reigned, his capital being a town in the interior a long way from the port, called Madura;


நாவாய்களை செலுத்தியவனே, பல ஆயிரம் ஆண்டுகளின் மொழி திரிபில் Nova என்று அழைக்கபடுகிறான் தோழர்களே....!!! குமரிகண்டம் எனும் பழம் பாண்டிய நாடு,
கொடும் கடல் கோள்களால் மூழ்கி விட? அங்கிருந்து தப்பிய பாண்டியர்கள்,
உலகம் முழுவதும் தப்பி சென்றுள்ளனர் என்பதற்கு இந்த Nova கதையும், Navy என்ற வார்த்தையுமே மிகச்சிறந்த சான்றுகள் தோழர்களே!!!


பாண்டியர்கள் மாபெரும் கடலோடிகள், அதனால் தான் தங்கள் அடையாலங்கள் அனைத்திலும் கடலை சம்பந்தபடுத்துவர்!!! குமரிகண்டமே பல தீவு கூட்டங்களின் தொகுப்பு என்கின்றனர் ஆய்வாளர்களில் பலர்!!! Navy என்ற சொல் மட்டுமல்ல,
பாண்டியர்களின் ஒப்பற்ற வேந்தர்களான சிவனும், முருகனும், அவர்களின் இன்ன பிற அடையாளங்களும், உலகம் முழுவதும் விரவி கிடப்பதின் காரணம் இது தான் தோழர்களே!!!

அவ்வளவு ஏன்?


பாண்டியர்களின் குல சின்னமான இரட்டை மீனின் ஆதிக்கம் இல்லாத,
உலகின் பழம் பெரும் அரசுகள் எதுவுமில்லை!!! 



உயர்ந்த தொழிற்நுட்ப அறிவு பெற்ற பெரும் நாகரிகம் படைத்தவர்களால் மட்டுமே, இன்றைக்கு கூட பெரும் கப்பற்படையை கட்ட முடியும். 
எம் பாண்டியர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பெரும் கடற்படை கட்டி, இவ்வுளகையே கட்டி ஆண்டிருக்கிறார்கள் என்றால்! எவ்வளவு நாகரிகத்தின் உச்சத்தில் இருந்திருப்பர்...? தமிழர்கள் மட்டுமல்லாமல் உலகமே இந்திரனையும், சிவனையும் இன்றும் கொண்டாடுகின்றனர் என்பது இப்போது புரிகிறதா தோழர்களே!!! கிரேக்கர்களே தங்களை பாண்டியர்கள் ஆண்டதை ஒப்புக் கொள்கையில்,ஆரியர் என்ற ஆடுமாடு மேய்ப்பவனின் புரட்டு கதைகளை எம்மிடம் பரப்பும் திராவிட வடுகர்களே? நான் தெரியாமல் தான் கேட்கிறேன்? ஆடு மாடு மேய்பவனுக்கு கப்பல் கட்ட தெரியுமா??? இல்லை கப்பல் ஏறி கடலில் செலுத்ததான் தெரியுமா??? கப்பல் என்பதை படத்தில் கூட பார்த்திராத ஆரியனால், உலக வல்லரசு படைத்த எங்களை அடக்கியிருக்க தான் முடியுமா??? இந்த கேள்வியெல்லாம் கேட்க தெரியாத? இதைபற்றி எல்லாம் அனா ஆவனா கூட தெரியாத வடுகன் சொல்கிறான்!
தமிழர்களுக்கு எதுவும் தெரியாது என்று!!! பும்பூம் மாடு மேய்த்த பரம்பரையில் வந்த கெட்டிபொம்மு நாயக்கனெல்லாம், வீரபாண்டியனாகி விட்ட காலக்கொடுமையை?,
எம் முன்னோர்களான சிவனும், முருகனும் ரத்தக்கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருப்பர், அவர்களின் பிள்ளைகளாகிய நம் இயாலாமையை நினைத்து வேதனைகளுடன்!!!

ஆரியத்தை விட ஆயிரமடங்கு எம் குலத்தை அழித்த திராவிட வடுகர்களே? தமிழர்கள் யாரும் முன் வரதாலேயே தான், பெரியார் தமிழர்களை காகக்கும் பெரும்பனியை ஏற்றுக்கொண்டார் என்பது உண்மையென்றால், பச்சை தமிழர்கள் இதோ நாங்கள் வந்துவிட்டோம்! 



தயவு செய்து எம் வழியில் குறுக்கே நிற்காதீர்!!!
வாழ்வோ வளமோ, எங்கள் தலையெழுத்தை நாங்களே முடிவுசெய்கிறேம்! இல்லையென்றால், உங்கள் தலையெழுத்தை நாங்கள் முடிவு செய்ய வேண்டியது வரும்!!! தோற்றவனின் ரத்த வெறி எப்படி இருக்கும் என்பதை,
அவன் மீண்டெழுந்த உலக வரலாறுகளில் கொஞ்சம் படித்து பாருங்கள், உங்களுக்கே புரியும்???

Ref: மரக்கலம் வகைகள்

இவண்

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

04 May 2014

இந்து மதம் --- ஒரு மார்க்சிய பார்வை

மனித பரிணாமம்: சுருக்கம்

     இயற்கையே பெருமளவில் மனிதனை அச்சமூட்டியது. குகைகளில் வாழ்ந்த  காலம் தொட்டு அந்த இயற்கையிடம் இருந்து தம்மை பாதுக்காக்க அவன் அந்த இயற்கையையே வழிபட தொடங்கினான். காட்டு மிராண்டியாக மனிதன் சுற்றிக் கொண்டு இருந்த காலத்தை அடுத்து, மனிதன் முல்லை நிலத்தில் கூட்டு வாழ்வும், அவர்களுக்குள் தலைவரும், இயற்க்கைய ஒட்டிய வழிபாடும் தெய்வங்களும் உருவாகி விட்டன. அந்த தெய்வங்களுக்கு பூசை செய்தல் என்பதை ஒட்டி பூசாரிகளும் நியமிக்கப்பட்டனர். இந்த பூசாரிகள் 'தலைவருக்கு' அடுத்தப்படியாக இருந்துள்ளனர். சில சமயங்களில் தலைவரையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு வலிமையாகவும், ஆற்றல் மிக்கவர்களாகவும் இருந்து உள்ளனர். எல்லாவற்றுக்கும் காரணம் கடவுளின் மீது மனிதன் கொண்டு இருந்த அபரிமிதமான பக்தி தான். எனவே பூசாரிகளை கடவுளுக்கு அடுத்தபடியாக பார்க்க வைத்தது கடவுள் மீதான பயமும், மரியாதையுமே...!!! இப்படி தலைவர்,பூசாரி,மக்கள் என்ற பிரிவுகளே அரசாங்கம் என்று சொல்லப்படும் மக்கள் நிர்வாக கட்டமைப்புக்கு அடிப்படையானதாகும். மேற்ப்படி அரசு தோற்றம் மற்றும் கூட்டு வாழ்க்கை, முல்லை நிலத்தில் தோற்றம் பெற்று இருந்தாலும், முல்லை நில வாழ்வு என்பது நிலையற்ற வாழ்வு என்பதால், அங்கு குடும்பம் என்ற சமூக கட்டமைப்பு அடிப்படை தோன்றி இருக்கவில்லை. அதற்க்கான தேவையும் அங்கு இருந்திருக்க வில்லை.

மனிதன் என்று மருத நிலத்தில், ஆற்றம் கரையில் நிலையாக வாழத் தொடங்கினானோ, அன்றில் இருந்தே உற்பத்தி சமூகமாக மாறத்தொடங்குகிறான். இது என் நிலம் என்றும், அந்த நிலத்தை அதில் உருவாகும் உற்பத்தியை ஆண்டு அனுபவிக்க வாரிசுகள் வேண்டும் என்பதால், குடும்பம் என்ற சமூக கட்டமைப்பை உருவாக்குகிறான். இவள் மனைவி, இவளை யாரும் தீண்டக்கூடாது, இவளுக்கும் எனக்கும் பிறக்கும் மகவுகள் என் வாரிசுகள் என அந்த அமைப்பு உருவாகிறது. பல குடும்பங்கள் இணைந்து தெரு,ஊர்,சிறு ஊர், பேரூர், நகரம்,நாடு என்று வளர்க்கிறது. வேளாண் விலை பொருட்களும், வேளாண்மையும், அதில் முக்கியமாக நெல்லுமே அதுவரை இருந்து வந்த பண்டமாற்று பொருள்களான ஆடு,மாடுகளை விடுத்து, முக்கிய பண்டமாற்று பொருளாக மாறுகிறது. வேளாண்மையே உச்சபட்ச நாகரிக கண்டுபிடிப்பு என்பதை உலகறியும். இவ்வாறு இருவானா வேளாண்மையில், அந்த வேலால்ன்மைக்கு உதவும் பொருட்டு, அவர்களிடமே தொழில் சார்ந்த பிரிவுகள் உருவாகின்றன.

கலப்பைகள் செய்பவர், நெல் விதைப்பவர், பண்ணையை கவனிப்பவர், ஆறு ஏறி குளங்களை கவனிப்பவர், ஊர் தலைவர், கோவில் பூசாரி, நாவிதர், வண்ணார் என உருவாகிய அந்த பதினென் குடிகளும், அவர்களின் பிரிவுகளுமே நாம் மருத நில மகள் அல்லது மள்ளர் என்கிறோம். ஒரு சிறு ஊரில் வாழும் மனிதர்கள் பிறப்பு முதல் இறப்பு வரை பக்கத்து ஊருக்கு கூட அன்று செல்ல வேண்டிய தேவை இருந்திருக்கவில்லை. காரணம் ஒவ்வொரு ஊரும் நிர்வாக அமைப்பை பொருத்தவரை ஒரு நாடு போலவே செயல்பட்டது. மருத நிலக்கடவுள் இந்திரனாக இருந்ப்பினும், பல திணை மக்களையும் அரவணைக்கும் பொருட்டு, புதிய கடவுள்களாக சிவன்,திருமால்,பிள்ளையார்,இவர்களுக்குள் உள்ள குடும்ப உறவுகள் போன்றவை உருவாக்கப்படுகின்றன.

சாதி எப்படி உருவாகியது?
    மேற்ப்படி தொழில் செய்வோர்கள் ஒவ்வொரு ஊரிலும் இருந்தாலும் அவர்களுக்குள் (ஒரு ஊர் பூசாரிக்கு இன்னொரு ஊர் பூசாரியை தெரியாது) எந்த ஒருங்கிணைப்பும் இல்லை. இருப்பினும் பல ஊர்கள் சேர்ந்து ஒரு பேரூர் என்ற அடுத்த கட்ட நிர்வாக ஆட்சிமுறைகள் உருவாகும் போது, அதை நிர்வாகிப்பவர் மேற்ப்படி ஊர்களை நிர்வாகிக்க தொழில் சார் மக்களை ஒருங்கிணைக்க நினைத்தனர். அதன் மூலம் நிர்வாகம் ஒழுங்கான நடக்கும் என்றும், பொதுமனெ மக்கள் என்று இல்லாமல், இவ்வாறு தொழில் சார் வகைப்படுத்துதல் மூலம் அவர்களின் நிறைகுறைகளை தீர்த்து வைக்க முடியும் (உம்: வாரியம் அமைத்தல், சங்கம் அமைத்தல் போல) என்று செயல்ப்பட்டனர். இவ்வாறு உருவான தொழில் சார் பிரிவுகளே இன குழுக்கள் அல்லது சாதி என்பதாகும். எனவே சாதி என்பது தேசிய இனங்களுக்கு இடையே இயல்பாகவே உருவாகிய ஒரு இத்யாதி. இதை எந்த ஆரிய பார்ப்பானும் நம்மிடம் வந்து திணிக்கவில்லை. ஆரிய கதைகளை அவிழ்த்து விடும் திராவிட புளுகர்கள், ஏன் ஒரு ஆடு மாய்க்கும் ஆரிய கூட்டம் மக்களை ஒருங்கிணைக்க இப்படி மக்களை தொழில் சார் பிரிக்க வேண்டும் என்று ஒருக்காலும் கேட்டதில்லை. வேளாண்மை செய்பவர்களுக்கு இவ்வாறு தொழில் பிரிவுகள் உருவாக தேவை உண்டு. ஆடு மாடு மேய்க்கும் கூட்டத்துக்கு என்ன தேவை என்று எந்த திராவிட புளுகர்களும் இதுவரை சொன்னது இல்லை.

சமூக கட்டமைப்பில் பூசாரிகளின் பலம்
      பூசாரிகள் அல்லது பார்ப்பனர் என்போர் எல்லா தேசிய இனத்திலும் இறை பணிக்காக பணிக்கப்பட்டனர். ஆளும் வர்கத்துக்கு அடுத்த கட்டத்தில் இருப்பவர்கள் இவர்கள். இவர்களை எப்படி கையாள வேண்டும் என்பதில் தான் தலைவர்/அரசனின் புத்திசாலித் தனமே உண்டு. அரசு நிர்வாக கட்டமைப்பு என்பது ஒரு ஊர் என்கிற வகையில் (அதாவது பார்ப்பனர்களின் ஒருங்கிணைப்பு என்று ஏற்ப்படாத போதே) இருக்கும் போதே பூசாரிகளின் பலம் என்பது அபரிமிதமானது. 'சுடலை மாட சாமி வந்திருக்கான், இந்த தலைவனை கொன்னு பலி கொடுங்கடா' என்றால், அந்த தலைவன் காலி.....!!!

ராஜ ராஜன் பல நேரங்களில் பார்ப்பனர்களை அனைத்து இருக்கிறான். பல நேரங்களில் இராஜ தந்திரமாய் அவர்களை வீழ்த்தியும் இருக்கிறான். ஆகவே தனித்து இயங்கிய காலத்திலேயே பூசாரிகளின் பலம் பெரியது என்றால், இனக்குழுக்கள் ஒருங்கிணைந்த பின்பு (அதாவது பல ஊர் பூசாரிகளின் ஒருங்கிணைப்பு) என்ற ஒன்று உருவாகிய பின்பு அவர்களின் பலத்தை கேட்கவா வேண்டும்...?

இது ஏதோ தமிழ் சமூகத்தில் மட்டும் தான் அப்படி என்று என்ன வேண்டாம்...? உலகில் நாகரிகம் இருக்கும் அனைத்து இடங்களிலும் பூசாரிகள் நிலை இப்படி தான்.
* உதாரணம்: கிரேக்க நாகரிகத்தில் ராஜகுருக்களை அந்த நாட்டு மன்னர்கள் கொன்று இருக்கின்றனர். ஆனால், இன்று அந்த ஒட்டு மொத்த கிரேக்கத்துக்கும் தலைவர் 'போப்' என்னும் preist தானே..?

fuedal system என்பதில் பூசாரிகளின் பங்கு
மேற்ப்படி ஊர்கள் சேர்ந்து பேரூர் என்றும், அந்த பேரூர்கள் சேர்ந்து நாடு என்றும் உருவாகும் போது, எவ்வாறு நிர்வாகம் செய்ய சாதி என்ற ஒன்று உருவாகியதோ, அதோ போல பலர் பேரூர்,நாடுகளை நிர்வாகம் செய்ய உருவாகியதே நால்வர்ணம் (fuedal system ) என்பதாகும். மனித வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வாக வரலாற்று அறிஞர்களால் நோக்கப்படும் இந்த (feudal system ) என்பது, மருத நிலத்திலேயே தோன்றி ஏற்றம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்ப்படி பார்ப்பனர்களின் ஒருங்கிணைப்பு என்பது தற்போது வேறு ஒரு வடிவத்தை எட்டுகிறது. ஒட்டு மொத்த நாடு என்கிற அமைப்பில், பூசாரிகளின் பலம் இன்னும் அதிகமாகிறது.

எகிப்திய feudal system த்தில் பூசாரியின் நிலை.

மேற்ப்படி பதிவுகளில் இருந்து நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ளலாம். நிர்வாக கட்டமைப்பு என்பது வளர, வளர பார்ப்பனர்களின் ஒருங்கிணைப்பும், பலமும் அதிகம் ஆகி கொண்டே செல்கிறது. மேலும் எந்த ஒரு ஆட்சியாக இருந்தாலும், யார் ஆட்சி செய்தாலும் பூசாரிகள் தங்களது நிலையை அண்டி பிழைத்தோ, அதிகாரம் செலுத்தியோ தக்க வைத்தே வந்துள்ளனர் என்பது உண்மை.இந்தியா மட்டும் அல்ல, உலகம் முழுவதும் உள்ள அனைத்து நாகரிகங்களிலும் இதுவே நிதர்சனம்.


சம்ஸ்கிருத மொழி ஏற்ப்படுத்திய தாக்கம்
     சமஸ்கிருதத்தின் தாய் மொழி என்பது தமிழ் என்பது அறிஞர் பெருமக்களால் நிறுவப்பட்ட ஒன்று. மிக சமீபத்தில் அதாவது கி.பி. 2 ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே சமஸ்கிருதம் என்கிற மொழி ஆளும் வர்க்கத்தால் உருவாக்கப்படுகிறது. இந்த மொழி உருவாக்கப்பட்டதர்க்கான காரணங்கள்.

> அரசனுக்கும், பார்ப்பனருக்கும் மட்டுமே அறிவு சார் விஷயங்கள் இருக்க வேண்டும், போதிக்கப்பட வேண்டும் என்கிற ஒரு நெருக்கடி.
> மேற்ப்படி மற்ற தொழில் செய்பவர்களுக்கு அறிவு சார் விஷயங்கள் (வானியல் சாஸ்த்திரம் உட்பட) தெரிந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. அவர்களின் தொழில் அவர்கள் கவனம் செலுத்துவதே போதுமானது என்ற முடிவு.
> வாரிசு அரசியல் போன்ற பல விசயங்களுக்கு இப்படி ஒரு மொழி பயன்பாடு என்பது மிகவும் பயன்படும் என்பதால் அனைத்து அரசர்களும்,மன்னர்களும் அதை ஏற்றுக் கொள்கின்றனர்.

என்ன தான் சமஸ்கிருத மொழியை தமிழன் உருவாக்கி இருந்தாலும், அவன் அதை ஊறுகாய் போல பயன்படுத்திநானே ஒழிய, தமிழே ஆட்சி மொழி என்ற நிலையில் அவன் தெளிவாகவே இருந்தான். என்ன தான் பல தமிழ் மன்னர்களின் பெயர்கள் சமஸ்கிருத மொழியில் இருப்பினும், நாயக்கரின் காலம் வரை தமிழே ஆட்சி மொழி என்பதை அறிக.

இவ்வாறு உருவான 'சமஸ்கிருத மொழி என்பது அறிவு மொழி,அது ஆளும் வர்க்கத்துக்கு மட்டுமே' என்கிற பரப்புரையை இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து ஆளும் வர்க்கமும் ஏற்றுக் கொள்கின்றனர். இருப்பினும், தமிழகத்தில் அதற்க்கு எதிர்ப்பு கிளம்புகிறது. காரணம், மற்ற தொழில் செய்பவர்கள் 'அறிவு ஜீவி'களாக ஆக முடியாது என்பதே.....!!!

தமிழ் மண்ணில் சைவமும்,வைணவமும்
     மேற்ப்படி 'இன்னாருக்கே அறிவு சார் மொழி' என்பதை தமிழ் சமூகத்தில் வாழ்ந்த, பின்னால் வந்த மக்கள் ஏற்க்கவில்லை. இதை எதித்து கலகம் பிறக்கிறது. புதிதாக சைவம்,வைணவ நெறிகள் உருவாகின்றன. இதுவே இன்றைய ஒடுக்கப்பட்ட சாதியாக சொல்லப்படும் பறையர் சமூகம், அன்று  அறிவு ஜீவியாக (சாக்கியர்,வள்ளுவர்) இருந்ததன் பின்னணி.

ஆனால், இதே போன்ற ஒரு நிலையை (அதாவது ஒடுக்கப்பட்ட ஒரு சாதி அறிவு ஜீவியாக வணங்கப்படுவது) , சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்ட மற்ற தேசிய இனங்களில் நீங்கள் பார்ப்பது கடினம். இந்த சமஸ்கிருத எதிர்ப்பு நிலை என்பதே இன்று வரை தமிழ் நாட்டுக்கும், ஏனைய மற்ற தேசிய இனங்களுக்கும் இடையே காழ்ப்புணர்வு இருந்து வர அடிப்படை காரணம்.

தமிழன் வீழ்ந்த கதை
    தமிழனை வீழ்த்தியது விஜயநகர பேரரசான நாயக்கர்களே. இது எப்படி என்பதை சுருக்கமாக பார்ப்போம். மேற்ப்படி விஜயநகர பேரரசு நாயக்கர்கள், முல்லை நிலத்தில் ஆடு மாடு மேய்த்து கொண்டு இருந்த அநாகரிக குடிகள். மேற்ப்படி தமிழ் மன்னர்கள், பார்ப்பனர்களை அவ்வப்போது அடக்கி ஆள்வதும், அவர்களை மதிக்காமல் நடப்பதும், அவர்களுக்கு கடுமையான எரிச்சலை ஏற்ப்படுத்தி உள்ளது இயல்பே. இதை சரியாக பயன்படுத்திய தெலுங்கு பார்ப்பனர்கள், மேற்ப்படி நாயக்கர்களை கூர் தீட்டி, தமிழ் மன்னர்களுடன் மோத விட்டு, தமிழனை வீழ்த்தி உள்ளனர். அவ்வாறு தமிழன் வீழ்த்தப்பட்டுடன் நாயக்கர் செய்த முதல் காரியமே 'ஆட்சி மொழியாக இருந்த தமிழை தூக்கி எறிந்து,சமஸ்கிருதத்தை உள்ளே கொண்டு வந்தது தான்'. கோவிலில் தமிழ் தூக்கி எறியப்பட்டது,சமஸ்கிருதம் உள் நுழைந்தது  நாயக்கர் காலத்திலேயே.....!!! அதுவரை இருந்து வந்த குடும்பு ஆட்சி முறையை ஒழித்து விட்டு, தமிழ் மண்ணில் தனது இராணுவத்தை நிறுத்தினர். அப்படி நிலையாக நிறுத்தப்பட்ட இராணுவ பிரிவுக்கு பாளையங்கள் என்று பெயர். தமிழ் நாட்டில் இருக்கும் பாளையம் (பாளையம் என்பது தெலுங்கு பெயர்) அனைத்தும், தமிழன் வீழ்ந்ததன் நினைவாக இன்றும் நிற்கும் எச்சமே....!!! தொழில் ரீதியாக இங்கே இருந்த தமிழ் பார்ப்பனர்களும், தானாகவோ அல்லது மிரட்டப்பட்டோ மேற்ப்படி தெலுங்கு பார்ப்பனர்களுடன் கரம் சேர்க்க வர்ப்புருத்தப்பட்டனர். பல தமிழ் அய்யர்களும் இன்று தமிழனுக்கு எதிராக இருக்க இதுவே அடிப்படை காரணம். இருப்பினும் சில தமிழ் பார்ப்பனர்கள், மேற்ப்படி தெலுங்கு பார்ப்பனர்களின் போக்கை ஏற்க்கவில்லை. அது நாள் வரை இருந்து வந்த 'அரசன், அந்தணன், வணிகன், வேளாளன்' என்கிற தமிழனின் நிர்வாக பிரிவானது, 'பிராமணன், சத்ரியன்,வைசியன்,சூத்திரன்' என்று நாயக்கர் காலத்தில் மாற்றம் கொள்கிறது. மண்ணின் மைந்தர்களும், மன்னரின் வாரிசுகளும் வீழ்த்தப்பட்டு, ஒடுக்கப்பட்டனர்.கால ஓட்டத்தில் பல பேரரசுகள், தோன்றினாலும், வீழ்ந்தாலும் பிராமணர்கள் தங்களது மேலாண்மையை தக்கவைத்தே வந்துள்ளனர்.


இந்து மதம் என்ற மத நிறுவனம் துவக்கம்

"இப்போது ஹிந்து மதம் என்று ஒன்றைச் சொல்கிறோமே, இதற்கு உண்மையில் இந்தப் பெயர் கிடையாது. ஹிந்து என்றால் அன்பு என்று அர்த்தம். ஹிம்சையை தூஷிப்பவன் ஹிந்தூ என்று சிலர் சொல்கிறார்கள். இது சமத்காரமாகச் சொல்வதேயாகும். நம்முடைய பழைய சாஸ்திரம் எதிலும், ஹிந்து மதம் என்கிற வார்த்தையே கிடையாது.
ஹிந்துக்கள் என்பது அந்நிய நாட்டினர் நமக்கு வைத்த பெயர்தான். மேல்நாட்டுக்காரர்கள் ஸிந்து நதியாக கடந்தே நம் பாரத நாட்டுக்கு வரவேண்டியிருக்கிறதல்லவா. ஆனபடியால் ஸிந்துவை இந்து என்றும், அதை அடுத்த நாட்டை இந்தியா என்றும், அதன் மதத்தை இந்து என்றும் குறிப்பிட்டார்கள்."

முகலாயருக்கு பின்பு வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயரே முதன் முதலில் இந்தியா முழுவதையும் நிர்வாகம் செய்யும் பொருட்டு, அதை ஒரே குடையின் கீழ் கொண்டு வர விரும்பினர். ஆங்கிலேயரின் வருகைக்கு முன்பு, இந்து மதம் என்கிற ஒரு மதம் இருந்திருக்க வில்லை. என்ன தான் சிறிதும், பெரிதுமாக பல்வேறு அரசுகள் இந்தியா முழுக்க பிரிந்து இருப்பினும், அவை அனைத்திலும் பிராமணர்களின் கை ஓங்கி இருப்பதை உணர்ந்து இருந்தனர். எனவே அந்த பிராமணர்களுடன் கை கோர்த்து, எல்லா காலத்துக்கும் இந்தியாவை நிர்வாகம் செய்ய 'ஆங்கிலேயர்' உருவாக்கிய பிராமணர்களுக்கான ஒருங்கிணைப்பே 'இந்து' மதம் என்பதாகும்.

மாக்ஸ் முல்லர் என்ற தில்லு முல்லர்
     ஆங்கிலேயர் பிராமணருடன் கை குலுக்க அவர்கள் உருவாக்கியதே 'ஆரிய தியரி' ஆகும். மாக்ஸ் முல்லர் என்கிற தில்லு முல்லர் இதை செய்து முடித்தார். இதன் அடிப்படையில், அதுவரை இருந்து வந்த அனைத்து தேசிய இனங்களின் (குறிப்பாக, தமிழர்கள்) அடையாளமும் 'இந்து' மதத்தின் அடையாளமாக மாக்ஸ் முல்லர் சித்தரித்தார். (உம்: ஆரிய கடவுள், ஆரிய இனம், ஆரிய பண்பாடு etc ). இது இந்தியா முழுவதும் இருக்கும் பிராமணர்கள் ஒருங்கிணைய மட்டும் இன்றி, ஆங்கிலேயருக்கும் அது நலம் பயக்கும் நோக்கில் திட்டமிட்டே உருவாக்கப்பட்ட நிறுவனம் ஆகும். இது தான் இந்து மதம் உருவான கதை.

இன்றைய இந்திய அரசியல் அமைப்பு சட்டம் 'இந்து' என்பதற்கு கூறும் வரையறை 'எவன் கிருத்துவன் இல்லையோ, எவன் இசுலாமியன் இல்லையோ, எவன் பவுத்தன் இல்லையோ, எவன் சீக்கியன் இல்லையோ, அவன் எல்லாம் இந்து' என்பதாகும். இதில் இருந்து, 'இந்து' என்பவன் துல்லியமாக வரையறை செய்யமுடியாதவர்கள் என்பதை எளிதில் உணரலாம். மேலும், 'இந்து' என்பதற்கு, 'பிராமணிய ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டவன்' என்பதும் அரசியல் சட்டம் சொல்லும் விளக்கத்தில் ஒன்றாகும். ஏற்றுக் கொள்ளாதவர்களை இந்து மதம் சண்டாளர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் ஒதுக்கி வைப்பது அனைவரும் அறிந்ததே....!!!

மாக்ஸ் முல்லர் அவிழ்த்த ஆரிய கதைகளில் முக்கியமானவை இவை.
* ஆரியர்கள் கைபர்,போலன் கணவாய் வழியாக வந்தனர்.
* பிராமணர்களும் ஆங்கிலேயரும் ஆரியர்கள்.
* ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள்.
* ஆரியர்களே நால்வர்ணத்தை உருவாக்கினர்.
* ஆரியர்களே சாதியை கண்டு பிடித்தனர்.
* பிராமணர்களின் நிறமும், ஆங்கிலேயரின் நிறமும் ஒன்று.

இவற்றை கொஞ்சமும் ஆராய்ச்சி செய்யாமல், அப்படியே ஏற்றுக் கொண்டு நம்மிடம் கும்மி அடிப்பவர்கள் தான் 'திராவிட பகுத்தறிவு வாதிகள்'. பெரியார் உட்பட....!!!

கால்டுவெல் என்கிற பொய்யர்
  சரி. இந்தியா முழுவதும் இருந்த பிராமணர்களை ஒருங்கினைத்தாகி விட்டது. மீதி இருப்பவர்களை எப்படி ஒருங்கிணைப்பது? அப்படி ஒருங்கிணைத்தால் தானே, இவர் ஆதிக்க வர்க்கம், இவர் மீதி உள்ளவர்கள் என்று தெரியும். அதன் படி பிரித்தாண்டு, நிர்வாகமும் செய்ய முடியும். அதற்காக உருவாக்கப்பட்டது தான் கால்டுவெல் என்கிற ஆங்கிலேயர் உருவாக்கிய 'திராவிடம்' என்கிற கருத்தியல். ஆக, பிராமணர்கள் அனைவரும் ஆரியர்கள், மற்றவர்கள் திராவிடர்கள். வேலை முடிந்தது.

மக்களை எப்போதும் பிரித்தே வைத்து இருந்து, சாதியத்தை காத்து, தந்து சுயநலனை நிலை நாட்ட, பிராமணர்கள் இன்று வரை காத்து வரும் நிறுவனமே 'இந்து மதம்'. பிராமணர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் ஒருங்கிணைந்தே இருப்பார்கள். எந்த தேசிய இனத்துடனும் கலக்காமல் இருப்பார்கள். எப்படி எல்லாம் மக்களை (தங்களை தவிர),கூறு போட முடியுமோ, அப்படி எல்லாம் கூறு போடுவார்கள். கூறு போட ஊக்குவிப்பார்கள். தேசிய இனங்களின் விடுதலையை ஒரு போதும் ஆதரிக்க மாட்டார்கள்.

அம்பேத்கார் முன்வைத்த பல விசயங்களை உதாசீனம் செய்த பிராமணியம், அவர் முன் மொழிந்த 'வகுப்புவாதம்' என்கிற விஷயத்தை ஏற்றது. இதன் மூலம் 'பிராமணர் அல்லாதோர்' என்பவர்களை SC / BC / ST என்று வகையாக பிரித்து, காலம் முழுவதும் அவர்களின் ஒருங்கிணைப்பை தடுக்க எதுவாக இருக்கும் என்பதே ஆகும்.

பிராமணியம்: இந்தியாவின் அடிப்படை நிர்வாக கருத்தியல் 
    "பிராமணர்களின் ஆதிக்கத்தை தக்க வைத்து, அதற்க்கு வலு சேர்க்கும் வகையில், நேரடியாகவும், மறைமுகமாகவும் உதவும் ,தேசிய இனங்களின் அடையாளத்தை அழித்து, மக்களை கூறும் போடும் அனைத்து செயல்களையும்,நிகழ்வுகளையும் ஒன்றாக குறிப்பதே 'பிராமணியம்' என்பதாகும்". இந்நாளில்,

> பிராமணியம் என்ற கருத்தியலுக்கு வருவதற்கு நீங்கள் பிறப்பால் பிராமணராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. (உம்: ராமசாமி நாயுடு என்று அழைக்கப்படும் பெரியார் அவர்கள், எதிர் தரப்பில் இருந்து பிராமணியத்துக்கு முட்டு கொடுத்தார், எனவே இவர் ஒரு பிராமணிய அடிமை)

> தமிழுக்காக இன்னுயிர் ஈத்த உ.வே.சா அவர்கள் பிறப்பால் பார்ப்பனராக இருந்தாலும், சமஸ்கிருத மேலாதிக்கம் என்பதை தாண்டி, தேசிய இனமான தமிழ்  மொழிக்காக பாடு பட்டதால்  அவர் பிராமணிவாதி அல்ல.

> மக்களை ஒருங்கிணைய விடாமல் சதா சர்வ காலமும் சாதிய தில்லுமுல்லுகளை திட்டமிட்டு அரங்கேற்றும் தமிழக திராவிட அரசியல் சார்ந்த அனைத்து கட்சிகளும்,அமைப்புகளும் 'பிராமணிய அடிமைகள்' ஆவர்.

இந்த பிராமணியமே இன்று இந்தியாவை ஆளும் கருத்தியல். இதில் எந்த கட்சி பாகுபாடும் இல்லை. தேசிய கட்சிகளும், திராவிட கட்சிகளும் நேரடியாகவும்,மறைமுகமாகவும் பிராமணியத்தை ஆதரிக்கும் கட்சிகளே.....!!! திராவிட கட்சிகள் பிராமணியத்தை எதிர்ப்பதாக பம்மாத்து செய்கின்றனர். ஆனால், பிராமணியம் என்பதை ஒழியும் பட்சத்தில் இவர்களுக்கு வேலை இல்லை, அரசியல் செய்ய முடியாது, எனவே பிராமணியம் அழிவதில் அவர்களை விட இவர்களுக்கே பாதிப்பு அதிகம் என்பதை தமிழர்கள் உணர வேண்டும்.

திராவிடமும், இந்து மத எதிர்ப்பும்
உண்மையில் பெரியார் உள்ளிட்டோர் இந்து மதத்தை எதிர்க்கவில்லை. அதை நோக்கி ஒரு சுண்டு விரலை கூட நகர்த்தியது இல்லை. அந்த சாக்கில் அவர் செய்தது இவைகளை தான்.
> ஒருக்காலத்தில் மேற்ப்படி நாயக்கர் ஆட்சி காலத்தில் பிராமணர்கள் நன்கு கவனிக்கப்பட்டு இருந்தனர்.
> பல ஆட்சி மாற்றங்கள் நடந்தாலும், பிராமணர்கள் இன்று வரை தங்கள் ஆதிக்கத்தை தக்க வைத்தே வந்துள்ளனர். ஆனால், நாயக்கர் ஆட்சி உட்பட பல ஆட்சிகள் இருந்த இடமே தெரியவில்லை.
> இந்த காழ்ப்புணர்வின் வெளிப்பாடே 'பெரியாரின் பிராமன் எதிர்ப்பும், இந்து மத எதிர்ப்பும்'.

பெரியாரின் திராவிட அரசியல் என்பது தனது வடுக நாயக்கரின் ஆதிக்கத்தை மீண்டும் பிராமணரிடம் மீட்டு எடுக்க வேண்டி நடந்த ஒரு இராஜதந்திர காய் நகர்த்தல் ஆகும். இதனால் தமிழனுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை. காரணம், திராவிட அரசியல் முழுக்க முழுக்க , தெளுங்கரிகளின் ஆதிக்கத்தை மீண்டும் தமிழ் மண்ணில் நிலை நாட்டவே இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

பெரியார் செய்த முக்கிய சதி செயல்
தனது வடுக ஆதிக்கத்தை தக்க வைத்து கொண்டே, தமிழனை மேலும் தாழ்த்த தனது முன்னோர்களை போலவே பல காரியங்களை நிகழ்த்தினார்.
> பிராமணர்களின் ஒருங்கிணைப்பை உடைக்க பெரியார் எதையும் செய்யவில்லை. மாறாக, அதை வலுப்படுத்த அவர்கள் கூறியவற்றை அப்படியே மீண்டும் கூறி இந்து மதத்தை வலு படுத்தினார். உண்மையில், அவர் இந்து மதம் என்கிற மத உருவாக்கத்தின் பின்பு உள்ள அரசியலை சுட்டிக் காட்டி, அது திருடி சென்ற தமிழரின் அடையாளங்களை தமிழருக்கு மீட்டு கொண்டு வந்து இருக்க வேண்டும். ஆனால்,அதை அவர் தலைகீழாகவே செய்தார். அதாவது இந்து மதத்தை காத்தார்.
> தெலுங்கு உட்பட பல தேசிய இனங்களில் உள்ள அநாகரிக செயல்களை (உடன் கட்டை ஏறுதல், வீட்டில் மலம் கழித்து அதை அல்ல ஒரு சாதியை உருவாக்குதல், கோவிலுக்கு பெண்களை நேர்ந்து விடுதல்) போன்ற செயல்களை திராவிட அநாகரிக செயல்கள் என்று கூறி, இறுதியில் அதை தமிழரின் மீதே திணித்து 'தமிழன் ஒரு அநாகரிகன்' என்கிற ரீதியில் பரப்புரை செய்தார்.
> அப்படிப்பட்ட தமிழனை மீட்டெடுக்கும் மீட்பராக திராவிடத்தையே காட்டி வந்தார்.

தலித்தியம் என்ற சாத்தான்
   தலித்தியம் என்பது 90 களில் இந்திய அரசால் திட்டமிடப்பட்டே உருவாக்கப்பட்டு போற்றி வளர்க்கப்பட்ட ஒரு கருத்தியல் ஆகும். ஒடுக்கப்பட்டோருக்கான விடுதலையே இதன் அடிப்படை நோக்கம் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இதை நன்கு உள்வாங்கியவர்கள் 'SC / BC ' என்ற வகுப்பு வாத அடிப்படையில் மக்கள் பிரிவினைகளை ஊக்குவித்த பிராமணியம், மேற்ப்படி வகுப்ப்வாத மக்களிடையே அடுத்தக்கட்டமாக குழப்பத்தையும், பதட்டத்தையும், ஒற்றுமை இன்மையையும் உருவாக்கவே தயாரிக்கப்பட்டது என்றும் எளிதில் விளங்கும். சுருக்கமாக, தலித்தியம் என்பது பிராமணியத்தின் இன்னொரு குழந்தை.

அம்பேத்காரை ஏற்காத பிராமணியம், திட்டமிட்டே அம்பேத்கார் தான் ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதி என்று பரப்புரை செய்யும் நோக்கம், அந்த அந்த தேசிய இனங்களில் உள்ள ஒடுக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகளை ஓரம் கட்டி விட்டு, அம்பேத்காரை அவர்களின் அடையாளமாக மாற்றுவதே ஆகும். இதன் மூலம் தலித்தியம், அதன் அடையாளம் என அனைத்தையும் தனது பிடியில் வைத்திருந்து ஆட்டுவிப்பதே பிராமணியத்தின் நோக்கம்.

தமிழர்கள் நாம் செய்ய வேண்டியது என்ன..?
* தலித்தியம் முதலில் தமிழ் நாட்டில் இருந்து ஒழிக்கப்பட வேண்டும்.
* திராவிடம் தமிழர்களுக்கு ஒரு துரோகி என்பதை உணர வேண்டும். அது முழுக்க முழுக்க பிராமண அடிமை கருத்தியல் என்பதை உள்வாங்க வேண்டும். திராவிடத்தை அரசியலை வேரோடும் மண்ணோடும் பிடுங்கி ஏறிய வேண்டும்.
* பிராமணர்களுக்கு உதவ ஆரியம், தெலுங்கருக்கு உதவ திராவிடம் என்பது போல, தமிழருக்கு என்று ஒரு கருத்தியல் உருவாக்கப்பட வேண்டும்.
* தமிழ் நாட்டில் தமிழ் ஆட்சி அமைய தமிழர்கள் ஒருங்கிணைய வேண்டும். இதுவே தமிழன் என்ற தேசிய இனத்துக்கான விடுதலை.
* மேற்ப்படி இந்தியா முழுவதும் இருக்கும் அனைத்து தேசிய இனங்களின் விடுதலைக்கும், ஆரிய கதையின் பிடியில் இருந்து அவர்களை விடுவிக்க எதிர்காலத்தில், பாடுபட வேண்டும். இதன் மூலம் ஆதிக்கம் என்பது அந்த அந்த தேசிய இனத்தின் பிடியில் வருவதால், தனித்து ஆதிக்கம் செய்யும் பிராமணர்கள் அந்த அந்த தேசிய இனத்துடன் கலக்கவோ, பிரியவோ வர்புருத்தப்படுவார்கள். இது பிராமணியம் என்ற கருத்தியல் அழியவும், அவர்களுக்கு இடையே உள்ள ஒருங்கிணைப்பை உடைக்கவும் வழி செய்யும்.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

27 January 2014

சாதி ஒழிப்பு சாத்தியமா? - பொதுமைப்படுத்துதலை தவிர்த்தல்(2)

முந்தைய பதிவு:
சாதி ஒழிப்பு சாத்தியமா? - அடிப்படை புரிதல்

தாழ்த்தப்பட்ட சிவன்
சாதி ஒழிப்பு: இயற்கை வழி (முதல் படி)
----------------------------------------------------------------
தினமலர் வெளியிடும் 'ஆன்மீக மலரில்' வரும், தமிழகத்தின் கோவில்கள் என்ற தலைப்பில் 'கோவை பேரூர் பட்டீஸ்வரம்' பற்றிய குறிப்புகள் இவை.
Ref: http://temple.dinamalar.com/New.php?id=460

சுமார் 1000-2000 ஆண்டுகள் பழைமையான, சிதம்பரத்தின் தொடர்ச்சியாக 'மேலை சிதம்பரம்' என்று அழைக்கப்படும் கோவில் கோவை பேரூர் பட்டீஸ்வரர் நடராஜர் கோவில். இந்த கோவில் கரிகால சோழனால் கட்டப்பட்டதாம்.

இதெல்லாம் சரி. ஆனால், இந்த வரிகளை கவனியுங்கள்.
"இறைவன் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்து திருவிளையாடல் புரிந்த தலம் என்பதால் நாற்று நடும் திருவிழா இங்கு விசேஷம்"

இதை எழுதும் போது எழுதப்படிக்க தெரிந்த ஒரு சாமானியனுக்கு எழும் கேள்விகள் கூட தினமலருக்கு எழவில்லையா என்று தோன்றுகிறது.

இவை தான் பாமரனுக்கும் வரும் கேள்விகள்.

1. தாழ்த்தப்பட்ட சாதி என்ற பட்டியலில் இந்தியாவில் 1000க்கும் மேலே சாதிகள் உள்ளதாம். இதில் எந்த சாதியை தினமலர் சொல்கிறது?
2. சிவன் தாழ்த்தப்பட்டவர் என்று சொல்ல தினமலர் சொல்கிறது. அப்படி என்றால், அவரை வழிபடுபவர்கள் மற்ற அனைவரும் யார்? மிக மிக தாழ்த்தப்பட்டவர்களா....?
3. அதெப்படி ஒரு சாதி 2000 வருசமா தாழ்த்தப்பட்டு இருக்கும்?
4. எதுக்கு வேலை மெனக்கெட்டு கரிகால சோழன் ஒரு தாழ்த்தப்பட்டவருக்காக கோவில் கட்டி வச்சான்...? இன்றைக்கும் அந்த கோவில் உரிமை, தேர் இழுக்கும் உரிமை, அறங்காவலர் பதவி என சகலத்தையும் ஏன் அந்த தாழ்த்தப்பட்ட சாதிக்கே விட்டு இருக்கு....?
5. இப்படி 2000 வருசமா சோழன் தொடங்கி இன்று வரை அந்த கோவிலுக்கு முழு உரிமையும் உள்ளவர்கள் 'தாழ்த்தப்பட்டவர்கள்' என்றால், உயர்த்தப்பட்டவர்கள் யார் யார்....?

இந்த மாதிரியான கேள்விகளை கேட்டுக்கொண்டே போகலாம். இவை எல்லாம் 'தாழ்த்தப்பட்டவர்' என்ற ஒற்றை சொல்லில் இருந்து தோன்றும் குழப்பங்கள். மாறாக நேரிடயாக அது எந்த சாதி என்று, உள்ளது உள்ளபடியே கோவிலின் தல புராணத்தில் இருந்து கூறி இருந்தாலே இத்தனை குழப்பத்தையும் தவிர்த்து இருக்கலாம்.

நிற்க.

தினமலர் ஒரு உதாரணம் தான். இங்கு நம்மில் பலரும், சாதி என்ற இத்யாதியின் இருப்பை குறைக்கும்படி செயலாற்றாமல், நம்மை அறியாமலேயே அதன் இருப்பை மிக பிரம்மாண்டமாக வைத்திருக்கவே செயலாற்றி கொண்டு இருக்கிறோம். இதில் முன்னணி வகிப்பது சாதி பற்றாளர்களை விட, சாதி ஒழிப்பு கனவான்களே....!!!அதிலும் குறிப்பாக இன்றைய போலி சாதி ஒழிப்பு போராளிகள் தான் சாதியை பன்மடங்கு தக்க வைக்கும் செயலை செய்து வருகின்றனர். இதே பாணியில் தான் தினமலர் யார் அந்த சாதி என்று சொல்லி சாதிக்கான தேவையை மட்டுப்படுத்தாமல், 'தாழ்த்தப்பட்ட சாதி' என்று அதை 1000 மடங்காக ஆக்கி விட்டு இருக்கிறது.

தினமலர் போல நாம் இங்கே நம்மை அறியாமலேயே செய்யும் தவறுகளை சிலவற்றை பார்ப்போம்.
1. ஆதிக்க சாதி - தலித் சண்டை என்று எழுதுவது. அதாவது இரண்டு சாதிக்கு இடையே உள்ள சண்டை என்பதை (200 - 75) சாதிகளுக்கு இடையே உள்ள சண்டை என்பது போல எழுதுவது.

2. தாழ்த்தப்பட்ட மாணவன் தாக்கப்பட்டான். அதாவது ஒரு சாதியை சேர்ந்த மாணவன் தாக்கப்பட்டான் என்று கூறாமல், ஏதோ 75 சாதியை சேர்ந்த மாணவர்கள் தாக்கப்பட்டார்கள் என்று ஊதி பெருக்குவது.

3. குடும்ப சண்டையில் திவ்யா - இளவரசன் காதல் பிரிவு. இப்படி எழுதாமல், வன்னியர் - பறையர் என ஒரு குடும்ப சண்டையை தெருவுக்கு கொண்டு வந்து, அதை சாதி சண்டையாக்கியது. உண்மையில், வெளியிலேயே தெரியாத அளவுக்கு அமுங்கி போய் இருக்க வேண்டிய ஒரு விஷயத்தை, அரசியல் செய்ய வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக ஊதி பெருக்கி சாதி சண்டை இங்கே ஆக்கப்பட்டது. முற்போக்கு சிந்தனையாளர் என்ற போர்வையில் அதில் ஜோராக எண்ணை ஊற்றினார் பலர். 

பொதுவாக இப்படி பொதுமை படுத்தி பேசுபவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். 
1. இதை பற்றி எதுவமே தெரியாமல் எல்லாரும் சொல்கிறார்கள் என்று அதன் தாக்கம் தெரியாமல் பேசும் நபர்கள்.
2. தெரிந்தும், எதற்கு வம்பு (உம்: PCR வழக்கு) என்று நாமளும் 'தலித்' என்றே சொல்வோம் என்று பேசும் நபர்கள்.
3. எல்லாம் தெரிந்தும் வேண்டுமென்றே பேசும் எழுதும் நபர்கள். (உம்: அ.மார்க்ஸ், தினமலர் போன்றவை)

இதெல்லாம் தவறு என்றால், எது தான் சரி?
"சாதியின் இருப்பை மட்டும்படுத்தும் நோக்கில், சாதியை சொல்ல வேண்டிய கட்டாயம் இருப்பின் அதை தயவு செய்து சொல்லுங்கள்".

மேலே உள்ள முதல் இரண்டு (1&2) நபர்கள், 'சாதியின் இருப்பை குறைக்கும் பொருட்டும், தவிர்க்க முடியாத காரணத்தாலும், நல்ல நோக்கத்துடனும் சாதியை பயன்படுத்தும் போது, அதன் மூலம் உங்களுக்கு ஏதாவது அரசியல், சட்ட சிக்கல்,அச்சுறுத்தல் ஏதும் வந்தால், உங்களை காக்கும் பொறுப்பு 'நடுவம்' போன்ற அமைப்புகளுக்கு உண்டு. கவலை வேண்டாம். கை கொடுக்கிறோம். இதன் மூலம், மூன்றாம் வகை (3) நபர்களை இனம் காண வழி வகுக்கப்படும்.

சுருக்கமாக,
> சாதியை குறிப்பிட வேண்டிய இடத்தில் சாதியை குறிப்பிடவும்.
> அது கேலி,கிண்டல்,குரூரம் என்ற கெட்ட விசயத்துக்காக இல்லாமல், நேர்மையான நோக்கத்துக்காக இருக்கட்டும்.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

+91 98403 77767

20 January 2014

தமிழர் யார் என்பதற்கான வரையறை

கேள்வி: செம்மண்,உவர் மண்,களி மண் உண்டு. மாறாக 'தமிழ் மண்' என்று எங்கும் இருந்தது இல்லையே...? இதே போல தமிழர் தேசம் என்றோ, தமிழர் என்றோ யாரும் எங்கும் இருந்தது இல்லையே...? அப்படி என்றால், தமிழ் தேசியம் பேசும் அமைப்புகள், எந்த அடிப்படையில் 'இன்னார் தான் தமிழர்' என்று வரையறை செய்கிறீர்கள்?

பதில்: தொழில் பிரிவுகளாகவே ஆதியில் சாதி என்கிற இனக் குழுக்கள் உருவாகின என்பதையும், இந்தியா முழுக்க முன்பு 'தமிழ்' என்ற மொழி தான் பேசப்பட்டது என்று அண்ணல் அம்பேத்கார் உள்ளிட்டோர் ஆய்ந்து அறிந்து கூறியதற்கு இணங்க, அப்படி தமிழ் கூறும் மக்கள் அன்று முதல் இன்று வரை பல்வேறு இனக்குழுக்களாகவே வரையறுக்கப்பட்டு உள்ளனர் என்பதும் உண்மை. மாறாக மொழி மட்டுமோ, அல்லது பூகோள இடமோ ஒரு இனத்தை தீர்மானிக்காது. இந்திய அரசியல் சட்டத்தில் ஒருவர் மதம் கூட மாற முடியும். ஆனால், சாதி விட்டு சாதி மாற முடியாது. காரணம், பல ஆயிரம் வருடங்களாக இந்த இனக்குழு (என்கிற) சாதியானது, அத்துணை இறுக்கமான ஒரு இத்யாதி. இவ்வாறு இனக்குழுக்களின் தொகுதியே ஒரு இனத்தை வரையறுக்கிறது. இந்த அடிப்படையில் தமிழர் என்ற இனத்தை 'தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்' இப்படி வரையறை செய்கிறது.

"தாய் மொழியாக தமிழை கொண்ட, தமிழ் சாதியை சேர்ந்தவனே தமிழன் ஆவான்".

இப்படி துல்லியமாக வரையறுக்காவிட்டால், எதிர் காலத்தில் என்ன என்ன கேடுகள் விளையும் என்பதற்கு சமீபத்திய நிகழ்வு தான் 'கேரளாவில் இருந்து தமிழர்களை(?) வெளியேற்ற நினைக்கும் அட்டப்பாடி பிரச்சனை".

இதில் உண்மை நிலவரத்தை முதலில் பார்ப்போம்.
அட்டப்பாடியில் இருளர், முதுவன் உட்பட பல பழங்குடி மக்களின் நிலங்களை அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி பழங்குடி அல்லாத பலர் மோசடி செய்து உள்ளனர். பல ஆண்டுகளாக இந்த அபகரிப்பு பற்றிய சர்ச்சைகள் பல்நிலை நீதிமன்றங்களைத் தாண்டி உச்சநீதிமன்றத்தால் நிலங்களைத் திரும்பப்பெற தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 70 பேரிடம் இருந்து நிலங்களைத் திரும்பப்பெற தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த 70 பேரில் 51 பேர் மலையாளிகள். மீதி 19 பேர் பிறமொழியினர். அந்த 19 பிறமொழியினரில் பெரும்பான்மையினர் கன்னட ஒக்கலிக்க கவுடாக்கள். நில மீட்புக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருபவர்கள் இந்த ஒக்கலிக்க கவுடாக்களே ஆவர். மலையாளிகள் கூட எதிர்க்காத நிலையில் ஒக்கலிக்க கவுடாக்கள் "தமிழரை விரட்ட மலையாளிகள் முயலுவதாக கதைக்கட்டிக்" கொண்டு தமிழர் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள். இதற்க்கு தமிழக கவுண்டர்கள் சிலரை கவுடாக்கள் பயன்படுத்தி வருவதாகவும் தெரிகிறது. கன்னட கவுடாக்களுக்கும் தமிழக கவுண்டர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. கவுடா எனும் பட்டம் கொண்டவர்களில் மூன்று சாதிகள் உண்டு கர்நாடகாவில். அதில் ஒக்கலிக்கா எனும் சாதியை சேர்ந்தவர்தான் முன்னால் பிரதமர் தேவாகவுடாவும் அவரது மகன் முன்னால் கர்நாடக முதல்வர் குமாரசாமியும் ஆவார். தமிழரின் வாழ்வாதாரத்திர்க்காய் குரல் கொடுக்காத தெலுங்கர் கருணாநிதி இதில் கொதிப்பதின் காரணம் இது தான். நடுவம் போன்ற அமைப்புகள் களத்தில் இறங்கி உண்மை நிலையை கூறிய பின்பு தான், அவமானப்பட்ட தமிழ் அமைப்புகள் 'கப் சிப்' என இந்த பிரச்னையை புரிந்து கொண்டு கை கழுவி விட்டனர்.

NOTE: அட்டப்பாடியில் வாழும் இருளப்பள்ளர்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவுகளை காணவும்.

அட்டப்பாடி தமிழர்களுடன் நடுவத்தின் தலைவர் செல்வா பாண்டியர்

இதில் ஒக்கலிகா கவுண்டர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லி கொண்டாலும், அவர்கள் தமிழர்கள் அல்ல என்று உணர்த்துவது அவரின் சாதியே. மேலும், மலையாள பழங்குடியினர் என்று 'இருளப் பள்ளர்களை' கூறினாலும், அவர்கள் மலையாளிகள் அல்ல அவர்களே பூர்வீக தமிழர்கள் என்றும் கூறுவது அவரின் சாதியே.....!!!

ஆனால், எடுப்பார் கைப்பிள்ளை போல, குருட்டாம் போக்கில் தமிழ் தேசியம் பேசி, யார் தமிழர் என்ற வரையறையே தெரியாமல் அரசியல் செய்ய நினைக்கும் அமைப்புகளில் முக்கியமானது 'நாம் தமிழர்' அமைப்பு. இந்த அட்டப்பாடி பிரச்னையை, அதன் உள் அர்த்தம், நோக்கம் என எதுவுமே தெரியாமல், 'தமிழர்களுக்கு எதிராக மலையாளிகளின் அராஜாகம்' என்ற போர்வையில், உண்மை தமிழர்களை, அந்த பழங்குடி மக்களை 'மலையாளி' என்று திரித்து கூறியதோடு அன்றி, 'தமிழர்கள் என்று தங்களை கூறி கொள்ளும், கன்னட/தெலுங்கு கவுடாக்களை' காக்கும் பொருட்டு அவர்களை தமிழர் என்றும், அவர்கள் பக்கமே தாங்கள் நிற்ப்போம் என்று கூறும் 'செந்தமிழன்'(???) சீமான் அவர்களின் மெய் சிலிர்க்கும் உரையை இங்கே காணுங்கள் மக்களே...!!!

Source: https://www.youtube.com/watch?v=krXyrShap7s

நடுவத்தின் சார்ப்பாக தமிழ் அமைப்புகளுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம்.
* நாம் அனைவரும் ஒரே இலக்கை நோக்கி, கருத்தியலில் சில முரண்பாடுகளுடன் களமாடும் அமைப்புகள் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், யாருக்காக போராடுகிறோம் என்ற அடிப்படையையே கேள்விக்குறி ஆக்கும் நோக்கத்தில், எந்தவித கருத்தியல் அடிப்படையும் இல்லாமல் இருக்கும் ஒரு சில தமிழர் அமைப்புகள், இனியாவது தங்கள் தவறை உணர்ந்து, தோழமை அமைப்புகளுடன் களமாட வருமாறு அழைக்கிறோம்.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

தொடர்புக்கு
செல்வா பாண்டியர் : +91 98403 77767