20 January 2014

தமிழர் யார் என்பதற்கான வரையறை

கேள்வி: செம்மண்,உவர் மண்,களி மண் உண்டு. மாறாக 'தமிழ் மண்' என்று எங்கும் இருந்தது இல்லையே...? இதே போல தமிழர் தேசம் என்றோ, தமிழர் என்றோ யாரும் எங்கும் இருந்தது இல்லையே...? அப்படி என்றால், தமிழ் தேசியம் பேசும் அமைப்புகள், எந்த அடிப்படையில் 'இன்னார் தான் தமிழர்' என்று வரையறை செய்கிறீர்கள்?

பதில்: தொழில் பிரிவுகளாகவே ஆதியில் சாதி என்கிற இனக் குழுக்கள் உருவாகின என்பதையும், இந்தியா முழுக்க முன்பு 'தமிழ்' என்ற மொழி தான் பேசப்பட்டது என்று அண்ணல் அம்பேத்கார் உள்ளிட்டோர் ஆய்ந்து அறிந்து கூறியதற்கு இணங்க, அப்படி தமிழ் கூறும் மக்கள் அன்று முதல் இன்று வரை பல்வேறு இனக்குழுக்களாகவே வரையறுக்கப்பட்டு உள்ளனர் என்பதும் உண்மை. மாறாக மொழி மட்டுமோ, அல்லது பூகோள இடமோ ஒரு இனத்தை தீர்மானிக்காது. இந்திய அரசியல் சட்டத்தில் ஒருவர் மதம் கூட மாற முடியும். ஆனால், சாதி விட்டு சாதி மாற முடியாது. காரணம், பல ஆயிரம் வருடங்களாக இந்த இனக்குழு (என்கிற) சாதியானது, அத்துணை இறுக்கமான ஒரு இத்யாதி. இவ்வாறு இனக்குழுக்களின் தொகுதியே ஒரு இனத்தை வரையறுக்கிறது. இந்த அடிப்படையில் தமிழர் என்ற இனத்தை 'தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்' இப்படி வரையறை செய்கிறது.

"தாய் மொழியாக தமிழை கொண்ட, தமிழ் சாதியை சேர்ந்தவனே தமிழன் ஆவான்".

இப்படி துல்லியமாக வரையறுக்காவிட்டால், எதிர் காலத்தில் என்ன என்ன கேடுகள் விளையும் என்பதற்கு சமீபத்திய நிகழ்வு தான் 'கேரளாவில் இருந்து தமிழர்களை(?) வெளியேற்ற நினைக்கும் அட்டப்பாடி பிரச்சனை".

இதில் உண்மை நிலவரத்தை முதலில் பார்ப்போம்.
அட்டப்பாடியில் இருளர், முதுவன் உட்பட பல பழங்குடி மக்களின் நிலங்களை அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி பழங்குடி அல்லாத பலர் மோசடி செய்து உள்ளனர். பல ஆண்டுகளாக இந்த அபகரிப்பு பற்றிய சர்ச்சைகள் பல்நிலை நீதிமன்றங்களைத் தாண்டி உச்சநீதிமன்றத்தால் நிலங்களைத் திரும்பப்பெற தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. மொத்தமாக 70 பேரிடம் இருந்து நிலங்களைத் திரும்பப்பெற தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த 70 பேரில் 51 பேர் மலையாளிகள். மீதி 19 பேர் பிறமொழியினர். அந்த 19 பிறமொழியினரில் பெரும்பான்மையினர் கன்னட ஒக்கலிக்க கவுடாக்கள். நில மீட்புக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருபவர்கள் இந்த ஒக்கலிக்க கவுடாக்களே ஆவர். மலையாளிகள் கூட எதிர்க்காத நிலையில் ஒக்கலிக்க கவுடாக்கள் "தமிழரை விரட்ட மலையாளிகள் முயலுவதாக கதைக்கட்டிக்" கொண்டு தமிழர் தலையில் மிளகாய் அரைக்கிறார்கள். இதற்க்கு தமிழக கவுண்டர்கள் சிலரை கவுடாக்கள் பயன்படுத்தி வருவதாகவும் தெரிகிறது. கன்னட கவுடாக்களுக்கும் தமிழக கவுண்டர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. கவுடா எனும் பட்டம் கொண்டவர்களில் மூன்று சாதிகள் உண்டு கர்நாடகாவில். அதில் ஒக்கலிக்கா எனும் சாதியை சேர்ந்தவர்தான் முன்னால் பிரதமர் தேவாகவுடாவும் அவரது மகன் முன்னால் கர்நாடக முதல்வர் குமாரசாமியும் ஆவார். தமிழரின் வாழ்வாதாரத்திர்க்காய் குரல் கொடுக்காத தெலுங்கர் கருணாநிதி இதில் கொதிப்பதின் காரணம் இது தான். நடுவம் போன்ற அமைப்புகள் களத்தில் இறங்கி உண்மை நிலையை கூறிய பின்பு தான், அவமானப்பட்ட தமிழ் அமைப்புகள் 'கப் சிப்' என இந்த பிரச்னையை புரிந்து கொண்டு கை கழுவி விட்டனர்.

NOTE: அட்டப்பாடியில் வாழும் இருளப்பள்ளர்களை பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவுகளை காணவும்.

அட்டப்பாடி தமிழர்களுடன் நடுவத்தின் தலைவர் செல்வா பாண்டியர்

இதில் ஒக்கலிகா கவுண்டர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லி கொண்டாலும், அவர்கள் தமிழர்கள் அல்ல என்று உணர்த்துவது அவரின் சாதியே. மேலும், மலையாள பழங்குடியினர் என்று 'இருளப் பள்ளர்களை' கூறினாலும், அவர்கள் மலையாளிகள் அல்ல அவர்களே பூர்வீக தமிழர்கள் என்றும் கூறுவது அவரின் சாதியே.....!!!

ஆனால், எடுப்பார் கைப்பிள்ளை போல, குருட்டாம் போக்கில் தமிழ் தேசியம் பேசி, யார் தமிழர் என்ற வரையறையே தெரியாமல் அரசியல் செய்ய நினைக்கும் அமைப்புகளில் முக்கியமானது 'நாம் தமிழர்' அமைப்பு. இந்த அட்டப்பாடி பிரச்னையை, அதன் உள் அர்த்தம், நோக்கம் என எதுவுமே தெரியாமல், 'தமிழர்களுக்கு எதிராக மலையாளிகளின் அராஜாகம்' என்ற போர்வையில், உண்மை தமிழர்களை, அந்த பழங்குடி மக்களை 'மலையாளி' என்று திரித்து கூறியதோடு அன்றி, 'தமிழர்கள் என்று தங்களை கூறி கொள்ளும், கன்னட/தெலுங்கு கவுடாக்களை' காக்கும் பொருட்டு அவர்களை தமிழர் என்றும், அவர்கள் பக்கமே தாங்கள் நிற்ப்போம் என்று கூறும் 'செந்தமிழன்'(???) சீமான் அவர்களின் மெய் சிலிர்க்கும் உரையை இங்கே காணுங்கள் மக்களே...!!!

Source: https://www.youtube.com/watch?v=krXyrShap7s

நடுவத்தின் சார்ப்பாக தமிழ் அமைப்புகளுக்கு ஒரு கோரிக்கை வைக்கிறோம்.
* நாம் அனைவரும் ஒரே இலக்கை நோக்கி, கருத்தியலில் சில முரண்பாடுகளுடன் களமாடும் அமைப்புகள் தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், யாருக்காக போராடுகிறோம் என்ற அடிப்படையையே கேள்விக்குறி ஆக்கும் நோக்கத்தில், எந்தவித கருத்தியல் அடிப்படையும் இல்லாமல் இருக்கும் ஒரு சில தமிழர் அமைப்புகள், இனியாவது தங்கள் தவறை உணர்ந்து, தோழமை அமைப்புகளுடன் களமாட வருமாறு அழைக்கிறோம்.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

தொடர்புக்கு
செல்வா பாண்டியர் : +91 98403 77767

No comments:

Post a Comment

பின்னூட்டத்திற்கு நன்றி