29 April 2014

தமிழரை காட்டி கொடுத்த பெரியார்

பெரியாரின் திராவிட மொழிகள் பற்றிய பார்வை என்பது கன்னட,தெலுங்கு,மலையாளிகள் உள்ளிட்ட மாற்று இனத்தவர்கள் மட்டுமே தமிழர்களை மொட்டை அடிக்க குத்தகை எடுத்தவர்கள் என்பதை இந்த கட்டுரை ஆணித்தரமாக நிரூபிக்கும்.



தமிழரை காட்டி கொடுத்த பெரியாருக்கு தமிழ் மண்ணில் இருக்கும் சிலைகளில் ஒன்று

தமிழுக்கும், தமிழிய(திராவிட) மொழிகளுக்கும் இடையேயான உறவைப்பற்றிப் பெரியார் கொண்டிருந்த நிலைப்பாடு, இயற்கைக்கும் அறிவியலுக்கும் என்றும் பொருந்தவே பொருந்தாது. பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைப்படி பால்,தயிர்,மோர் இவை மூன்றும் ஒன்றே.....!!! புரியவில்லையா....? வாசியுங்கள்.

பெரியாரின் கருத்துப்படி பழைய சென்னை மாநிலத்தில் தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகிய தனித்தனி மொழிகள் கிடையாதாம்! அவை யாவுமே தமிழ் தானாம்! ஆகவே, தெலுங்கும், கன்னடமும் மலையாளமும் துளுவும் தமிழில் இருந்து தோன்றவில்லையாம். அவை யாவும் போக்குவரத்து குறைவு, தட்ப வெட்ப வேற்றுமை ஆகியவற்றால், தமிழே பல்வேறு வகைகளில் பேசப்பட்டமையால் வந்த தமிழின் வடிவங்கள் மட்டுமாம்!  தலை சுற்றுகிறதா? பெரியார் எழுதியதை படியுங்கள்.

"தமிழன்,தெலுங்கன்,கன்னடியன்,மலையாளி ஆகியோர் பேசுவதெல்லாம் தமிழ் தான். இவர்கள் பேசுவது வெவ்வேறு மொழி என்று கூறுபவன் தமிழ்மகன் அல்லன்;தமிழை அறியாதவன்;ஆரியத்துக்கு சோரம் போனவன்;நம்மைக் காட்டிக் கொடுத்து ஆரிய மேலாண்மைக்கு ஆக்கம் தேட முயற்சிப்பவன். இந்த நான்கும் வேறுவேறு மொழிகள் என்று கூறுபவர்கள் 'தமிழர் என்று தம்மை நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்; கருதிக் கொண்டு இருக்கிறார்கள்' என்று கூறலாமே ஒழிய இவர்களைத் தமிழறிந்தவர்கள் என்று நாம் ஒப்புக் கொள்ள முடியாது.

நம் புலவர்களில் சிலர், இந்த நான்கும் ஒன்றில் இருந்து வந்தவை; ஒரே தாய் வயிற்றில் பிறந்து வளர்ந்த அக்கை தங்கைகள் என்று கருதுகிறார்கள். இது பித்தலாட்டம் என்பது தான் என் கருத்து. இத்திராவிட தாய்க்கு பிறந்தது ஒரே ஒரு மகள் தான்; அது தான் தமிழ். அந்த ஒன்றைத்தான் நாம் நான்கு பெயரிட்டு அழைக்கின்றோம். நான்கு இடங்களில் பேசப்படுவதால் நான்கு பெயரில் வழங்குகிறதே ஒழிய, நான்கிடத்திலும் பேசப்படுவது தமிழ் தான். நான்கும் ஒன்றிலிருந்து உண்டானவை என்று எண்ணுவது தான் தவறு; ஒன்று தான் நான்காக,நமது அறியாமையால் கருதப்பட்டு வருகிறது. இதை மெய்ப்பித்து காட்டவும் முடியும்" (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80) என்றும்,

"ஒன்று நான்கா வகுக்கப்பட்டது என்பதற்கும், ஒன்றில் இருந்து நான்கு பிறந்தன,கிளைத்தன என்பதற்கும் வேற்றுமை உண்டு. ஆகவே, தமிழ் நீண்ட தொடர்பற்ற காரணத்தால் நான்காகப் பிரிந்து இருக்கிறதேயன்றி, தமிழில் இருந்து தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்பவை தோன்றியவை அல்ல;உண்டாக்கப்பட்டவை அல்ல என்று திராவிடர்கள் உணர வேண்டும். இந்த உண்மையைத் தெரிந்துகொண்டால் ஒழிய, இந்த நான்கு நாட்டாருக்குள்ளும் வேற்றுமை உணர்வு தோன்றாமல் இருக்காது. இந்த நான்கும் தமிழ்மொழியே தான் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை" (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80)

இப்படி இயற்க்கைக்கு ஒவ்வாத ஒரு விஷயத்தை கூறியதோடு மட்டும் இன்றி, தமிழ் புலவர்களை இன்னும் ஒரு படி மேலே சென்று மட்டம் தட்டுகிறார்.

"தெலுங்கர்,கன்னடியர்,மலையாளிகளுக்கு உள்ள மொழிப்பற்றில், மொழி உணர்ச்சியில் தமிழ் புலவர்களுக்கு நூறில் ஒரு பங்கு கூட இல்லை" -- (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80)

"மற்றும் தெலுங்கர்,கனடியர்,மலையாளி இவர்களை தமிழர்கள் ஆக்க வேண்டும் என்றால், 'திராவிடர்' என்று சொல்லித் தான் ஆக்க முடியும்; 'திராவிடமே தமிழ்; தமிழே திராவிடம்' என்னும் புத்துணர்ச்சியைத் திராவிட மக்கள் பெறுவார்களாக!" (-- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள், இரண்டாம் தொகுதி, பப 978-80)

நிற்க.

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்பும், முன்பும் இங்கே தாய் தமிழ் மண்ணில் தமிழர்கள் அல்லாதோர் ஆதிக்கமே இன்றும் நீடித்து கொண்டு இருக்கிறது என்பதை நன்கு அறிந்த பெரியாரின் திராவிட மொழிகள் பற்றிய சிந்தனை என்பது தமிழரை காலம் காலமாக மற்றவர்களிடம் காட்டி கொடுக்கும் ஒரு செயல் என்பதை நிறுவ இதுவே போதுமானது.

இருப்பினும், உண்மையில் பெரியார் 'என்னால் நிரூபிக்க முடியும்' என்று கூறினாரே, அந்த அடிப்படையில் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,கன்னடம் மட்டும் தானா திராவிட மொழிகள் என்று அவர் கூறியது உண்மை தானா என்பதை தமிழர்கள் உங்களின் பார்வைக்கே விட்டுவிடுகிறோம். உண்மையில் தமிழில் இருந்து உருவாகிய மொழிகள் சுமார் 60க்கும் மேல். அவற்றில் ஒருசிலவற்றை இங்கு காண்போம்.

* தமிழுக்கும், ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையே உள்ள தொடர்பு.
Ref: http://www.faculty.ucr.edu/~legneref/bronze/dravid.htm

* தமிழுக்கும், கொரிய மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு.
Ref: http://en.wikipedia.org/wiki/Dravido-Korean_languages

தமிழுக்கும், சப்பான் மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு.
http://japanese-dravidian.blogspot.in/

* தமிழுக்கும், சிங்கள மொழிக்கும் இடையே உள்ள தொடர்பு
"Rev. S. Gnanapiragasam - `There are more than 4,000 Tamil words in the Sinhala vocabulary. If the Sinhala vocabulary is stripped of all the Tamil words there will be no Sinhala language."
Ref: http://www.lankanewspapers.com/news/2007/10/20510_space.html

ஆகவே தமிழில் இருந்து உதித்த மொழிகள் பல இருந்தும், திராவிட மொழிகள் எனில் அது தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மட்டுமே என்றும், இவை நான்குமே தமிழ் தான் என்றும், அதை தம்மால் நிரூபிக்க இயலும் என்று மார்தட்டிய பெரியாரின் நோக்கம் தமிழர் அல்லாதோரிடம் தமிழரை காட்டி கொடுப்பது மட்டுமே......மட்டுமே.....மட்டுமே.....!!!

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்


No comments:

Post a Comment

பின்னூட்டத்திற்கு நன்றி