08 July 2013

இட ஒதுக்கீடும், திராவிட அயோக்கியதனமும்

கேள்வி: தமிழனுக்கு சட்டை போட சொல்லி கொடுத்ததே பெரியார் தான். மண்ணுக்குள் கிடந்தவனை தூசி தட்டி எடுத்து மனிதன் ஆக்கினதே பெரியார் தான். அவர் தான் இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்து, தமிழனை வளர்த்து விட்டது. அவரை விமர்சிப்பவர்கள் நன்றி கெட்டவர்கள். ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பவர்கள். சரி தானே?

தமிழர் வரலாற்று ஆய்வு நடுவத்தின் பதில்:
இந்த கேள்விக்கு பதில் சொல்லும் முன்பு, பெரியாரின் விடாப்பிடியான பொல்லாத திராவிட கொள்கையால் 'தமிழன்' என்ற ஒரு தேசிய இனம் எவ்வாறு உருவாகாமல் தடுக்கப்பட்டது என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

மொழிவாரி மாநிலங்கள் பிரிந்த பின்பு, கன்னடர்கள்,மலையாளிகள்,தெலுங்கர்கள் போன்ற திராவிடர்கள் தமிழரின் கண் முன்னேயே தமிழ் பிரதேசங்களை பறித்து சென்றனர். பெங்களூர்,கோலார்,மூணார்,சித்தூர்,திருப்பதி,தேவி குளம்,பீர் மேடு என்று தமிழன் இழந்த நிலம் ஏராளம் ஏராளம். இவை எல்லாம் பெரியார் இருக்கும் போது தான் நடந்தது.இன்னும் சொல்லப்போனால், அவரின் ஆசியுடன் ஜோராக நடந்தது. அப்படி மொழி வாரி மாநிலங்கள் பிரிந்து சென்ற பின்பு, அவர்கள் தங்களை திராவிட இனமாக அறிவிக்கவில்லை. தனி தனி தேசிய இனங்களாகவே அறிவித்து கொண்டு, ஆட்சி அமைத்து கொண்டனர். அன்று முதல் இன்று வரை, எந்த தமிழனுக்கும் மேலே சொன்ன எந்த மாநிலத்திலும் எந்த வகையிலும் பிரதிநிதி துவமோ, அந்தஸ்தோ கிடையாது. அவ்வளவு இறுக்கமாகவும், தீவிரமாகவும் அவர்கள் தங்கள் மேலாண்மையை அந்த அந்த பிரதேசங்களில் செய்து வருகின்றனர். இருந்தாலும் மற்றவர்கள் போல, 'தமிழர்' என்ற தேசிய இனம் உருவாவதை பெரியார் ஒருக்காலும் விரும்பியது இல்லை. மீண்டும் மீண்டும் தமிழன் என்பதற்கு பதிலாக திராவிடன் என்றும், தமிழ் நாடு என்பதற்கு பதிலாக திராவிட நாடு என்றே சொல்லியும், செயலாற்றியும் வந்தார்.



"மொழி வாரி மாநிலங்கள் பிரிந்தாலும் திராவிட நாடு கோரிக்கை அப்படியே தான் இருக்கு. அன்று சென்னை மாகாணம் என்பது ஆந்திர,கர்னாடக,மலையாள நிலங்களை உள்ளடக்கியது. இன்று அது தமிழ் நாடு என்று சுருங்கி விட்டது. இருந்தாலும் தமிழ்நாடு தான் திராவிட நாடு. எல்லை சுருக்கிருச்சு. ஆனால் கோரிக்கை மாறலை" --- குடியரசு இதழில் பெரியார்.

மொழி வாரி மாநிலங்கள் பிரிவதற்கு முன்பு இருந்த 'சென்னை மாகாணத்தில்' இன்றைய ஆந்திர,கேரளா,கன்னடம் போன்றவற்றின் ஒரு சில பிரதேசங்கள் இருந்தன. அப்படி ஒன்றாக இருந்த போது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது தான் அன்றைய BC / SC சாதி பட்டியல்கள். அப்போது MBC கிடையாது. அந்த சாதி பட்டியல்களில் மராட்டியர்,கன்னடர்,தெலுங்கர்,மலையாளி என சகல திராவிட சாதிகளும் இருந்தன.

அப்படி இருந்த அந்த சாதி பட்டியல், மொழி வாரி மாநிலங்கள் உருவான பின்பு தமிழ் நாட்டில் (மற்ற மாநிலங்களை போல) திருத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லவா? ஆனால், இன்று வரை அந்த பழைய பட்டியலின் அடிப்படையில் தான் இங்கே BC / SC பட்டியலில் இட ஒதுக்கீடு தமிழ் நாட்டில் வழங்கப்பட்டு கொண்டு இருக்கிறது என்ற மிக அயோக்கியத் தனமான உண்மை எத்தனை தமிழர்களில் பேருக்கு தெரியும்? எந்த திராவிட அரசாவது திருத்த முயற்சித்தது உண்டா? குறைந்த பட்சம் வெளியில் தெரிவித்ததாவது உண்டா? இது தமிழ் சாதிகளுக்கு திராவிடர்கள் இழைக்கும் வரலாற்று துரோகத்தின் எச்சம் தானே?

இந்த அயோக்கியத் தனமான சாதி பட்டியலினால் ஒரு குஜராத்தியர் (உம்: சவுராஷ்டிரா) ென்னையில் குடியேறி, அங்கேயே படித்து, தமிழக BC பட்டியலில் வழங்கப்படும் 27 சதேவீத இட ஒதுக்கீட்டால், தனக்கு மருத்துவம்,பொறியியல் என இட ஒதுக்கீட்டை அனுபவித்து கொழிக்க முடியும். எந்த தமிழனாவது இதை குஜராத் மண்ணில் செய்ய முடியுமா? அதற்க்கு குஜராத் சட்டம் இடம் கொடுக்குமா? என்ன அநியாயம் அய்யா இது?

Referrence: 
தமிழக அரசின் இன்றைய சாதி பட்டியல்
http://www.tnpsc.gov.in/communities-list.html

குஜராத் அரசின் இன்றைய சாதி பட்டியல்
http://www.ncbc.nic.in/pdf/gujarat.pdf

* தமிழர் அல்லாத சாதிகள் அந்த அயோக்கிய தனமான சென்னை மாகாண சாதி பட்டியலில் சுமார் 20 சதவீதத்துக்கும் மேல். அவர்களுக்கு இன்றும் தமிழ் நாட்டில் இட ஒதுக்கீடு BC / SC பட்டியலில் இருந்து கொடுத்து கொண்டு தான் இருக்கிறோம். யார் வீட்டு சலுகையை யார் அனுபவிப்பது?

* இன்றைய ஆந்திர கர்னாடக கேரளாவில் யாராவது இது மாதிரி தமிழனுக்கு ஒதுக்கீடு தருகிறார்களா...? மாநிலம் பிரிச்ச உடனே அவரவர் தங்களுக்கு சாதகமாக  சாதி பட்டியலை தயாரிச்சி, அவனுக்கு மட்டுமே பயன்படும் படி இட ஒதுக்கீடு அமைத்து கொண்டனர். ஒரு உதாணத்திற்கு:
"1957 க்கு முன்பு இருந்து வசிப்பவர்களுக்கு மட்டும் தான் இனி கேரளாவில்  இட ஒதுக்கீடு". அங்கு வாழும் தமிழன் எப்படி 1957 இல் கேரளாவில் வாழ்ந்தான் என்று நிரூபிக்க முடியும்? கேரளாவின் பல பகுதிகள் 1957இல் கிடையாதே? இதில் இருந்து என்ன தெரிகிறது. மலையாளிகளை தவிர வேற எவருக்கும் எந்த சலுகையும் தர கூடாது என்பதற்கு திட்டமிட்டு மலையாளிகள் செயலாற்றுகிறார்கள் என்பது தானே உண்மை?

"400 வருடங்களுக்கு மேலாக அவர்கள் இங்கேயே வாழ்ந்து விட்டார்கள், அதனால் அவர்களுக்கும் இட ஒதுக்கீடு தர வேண்டும்" என்று சொல்லும் திராவிட சிகாமணிகளே, இதே போல மற்ற மாநிலங்களில் தமிழனுக்கு அங்கே சலுகையும்,ஒதுக்கீடும் வாங்கி தர உங்களுக்கு துப்பு இருக்கா? அவர்களும் திராவிடர்கள் தானே? முடியுமா உங்களால்? ..... அடி சக்கை....அடிச்சான் பாரு பல்டி......ஆக, தமிழன் மட்டும் ஏமாந்த சோனகிரியா இருக்கணும்.....!!!

மக்களே, வெறும் 20 சதவீதம் மட்டுமே உள்ள தமிழர் அல்லாத சாதிகளால் என்ன நிகழ்ந்துவிட போகிறது என்று நீங்கள் நினைக்கலாம். அதை சில தரவுகளின் மூலம் அலசுவோம்.

* ஒரு கோடிக்கும் மேல் வன்னியர்கள் உண்டு. ஆனால் அரசு பணியாளர்களில் அவர்கள் சுமார் 30 ஆயிரம் பேர் கூட இல்லை. ஆக BC இட ஒதுக்கீட்டால் வன்னியருக்கு பிரயோஜனம் இல்லை.
* MBBS சீட்டில் 180 இல் கோனாருக்கு வெறும் 5 தான். அப்போ மீதியை யார் ஆட்டையை போடுறா...?
* முக்குலத்தோர் தொடங்கி கவுண்டர் என அனைத்து தமிழ் சாதிகளின் நிலையும் இது தான்.
* BC யில் இப்படி என்றால், SC பிரிவில் எந்த அடிப்படையில் அருந்ததியினருக்கு 3% சதவீத உள் இட ஒதுக்கீட்டை கொடுத்தீங்க...?

அப்போ யார் தான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்கிறா...?
* தமிழக அரசு செகரட்டியெட்டில் தெலுங்கர்கள் மட்டும் சுமார் 40%க்கும் மேல். இது எப்படி சாத்தியமானது? இன்னும் மராட்டியர்,கன்னடர்,மலையாளி என்று கணக்கெடுத்தால் தலை சுற்றும்.
* இருக்கும் அனைத்து திராவிட கட்சிகளின் தலைவர்களும், பெரும்பான்மை அமைச்சர்களும் தெலுங்கர்களே.
* கோவை உள்ளிட்ட பல மாநகரங்களில் பெரு வணிகர்களும், ஆலை முதலாளிகளும் தெலுங்கர்களே.
* PSG உட்பட பெரும்பாலான ஆங்கில வழி கல்வி நிறுவனங்களின் முதாளிகளும் தெலுங்கர்களே. இவர்களே 'சமச்சீர் கல்வி, மற்றும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியையும்' எதிர்த்து கடுமையாக தடுக்கின்றனர்.

ஆக, தமிழர் அல்லாதோரின் விகிதாச்சாரத்துக்கு அதிகமாகவே அவர்கள் இட ஒதுக்கீட்டால் இங்கே பயன் அடைத்துள்ளனர் என்பதும், தமிழ் சாதிகள் திருவோடு ஏந்தி கொண்டு தான் உள்ளனர் என்பதற்கும் இவை சில உதாரணங்கள் மட்டுமே.

இப்படி பெரும்பான்மை தமிழ் சமூகத்துக்கு வர வேண்டிய சலுகை எல்லாத்தையும் கமுக்கமாக,அயோக்கியமா நீங்க அனுபவிச்சுக்கிட்டு இருக்குறதும் இல்லாம, 'கவுண்டரோட இட ஒதுக்கீட்டை ஒரு பறையர் தான் பறித்துக் கொண்டார்' என்று எங்களுக்குள்ளையே சண்டையை மூட்டி விட்டுகிட்டு இருக்கீங்களே.....எவ்ளோ பெரிய அயோக்கியர்கள் நீங்கள்...? இனியும் உங்களை எம் சமூகம் மன்னிக்காது. எனவே வேண்டும் 'சாதி வாரி இட ஒதுக்கீடு'.

(குறிப்பு: 'தமிழர் வரலாறு ஆய்வு நடுவம்' சார்பில் அனைத்து தமிழ் சாதிகளையும் ஒருங்கிணைத்து இந்த இட ஒதுக்கீடு என்ற அயோக்கிய தனத்தை எதிர்த்தும், 'சாதி' வாரி இட ஒதுக்கீடு வழங்க கோரியும் ஒரு மாநாடு நடைபெற இருக்கிறது. அந்த மாநாட்டில் தெரிவிப்பதற்காக 'சுதந்திரம் வாங்கிய நாள் முதல் இன்று வரை சாதி வாரியான இட ஒதுக்கீடு தமிழகத்தில் யார் யாருக்கெல்லாம் வழங்கப்பட்டுள்ளது' என்று RTI மூலம் தமிழகத்துக்கு கேள்வி அனுப்பப்பட்டு உள்ளது. பதிலை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறோம்)

ஆக தமிழக அரசு பதில் கொடுத்தாலும் சிக்கல், கொடுக்காவிட்டாலும் திராவிட யோக்கிய சிகாமணிகளுக்கு சிக்கல் தான். அந்த புள்ளி விவரம் வெளியில் தெரியும் போது 'பெரியாரும், திராவிடமும் இட ஒதுக்கீடு மூலம் தமிழனை கைக்கி விட்டாங்க்ற பொய் பிம்பம் சுக்கு நூறாக உடையும்.

-- இவண் --
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்