15 November 2013

தமிழர் vs திராவிடர் - 2

உரையாடல் 2 
தமிழர்:  ஈழத்தில் தான் 60 ஆண்டுகால போராட்டம், ராஜபக்ஷே போன்ற சிங்கள நல்ல உள்ளங்களால் அடக்கப்பட்டு விட்டது. மேலும், அங்கு ஜனநாயகமும் திரும்பி வந்து விட்டது. தமிழ் கூட்டமைப்பை சேர்ந்த விக்னேஸ்வரன் அவர்கள் மாகாண முதல்வராகவும் ஆகி விட்டார். இத்தனை நடந்த பிறகும், அங்கு அமைதி திரும்பிய பிறகும் இங்கே தமிழ் நாட்டில், ஈழத்தை பற்றி குரல் கொடுக்கும் அமைப்புகள், குறிப்பாக திராவிட அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள் ஏன் மீண்டும் மீண்டும் 'தமிழ் ஈழம் தான் தீர்வு' என்றும், ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழர் வாழ இயலாது என்றும் சொல்கிறீர்கள்? இது மோசடி அல்லவா...? யாரை ஏமாற்ற இந்த நாடகம்?

திராவிடவாதி: புலிகள், தமிழர்கள் தோற்று விட்டார்கள் என்பதற்காக, 60 ஆண்டுகால போராட்டத்தை தூக்கி எறிந்துவிட சொல்கிறீர்களா..?

தமிழர்: தடங்கலுக்கு மன்னிக்கவும். இலங்கையை பொருத்தவரை தமிழ் மன்னர்களே பெரும்பாலான சிங்கள மன்னர்களை அடக்கி ஆண்டு உள்ளனர். மேலும், முதல் மூன்று ஈழப்போர்களிலும் புலிகளே வெற்றி பெற்று உள்ளனர். எனவே வரலாற்றில் பலமுறை தோல்வியை சந்தித்துள்ள சிங்களன், இந்த முறை தமிழனை வீழ்த்தி உள்ளான். இது தவறு என்றால், தமிழ் மன்னர்கள் செய்தது மட்டும் சரியா...? எதற்கு தேவை இல்லாமல் 60 ஆண்டு கால வரலாறு பேச வேண்டும்?

திராவிட வாதி: 'அதுக்கு இது சரியாகி விட்டது' என்று இதை அப்படியே விட்டுவிட முடியுமா...? அப்படி என்றால் 'வெற்றி பெற்ற சிங்களனுக்கு, தமிழர்கள் இனி அடிமையாகத் தான் வாழ வேண்டும்' என்று சொல்கிறீர்களா..?

தமிழர்: அடிமையாக வாழ வேண்டும் என்று சொல்லவில்லையே. அது தான் அங்கு ஜனநாயகம் திரும்பி விட்டதே? நீங்கள் சொல்லும் ஈழ பகுதியில் பிள்ளையானும், கருணாவும், டக்லஸ் தேவானதாவும், இன்று விக்னேஸ்வரனும் தானே ஆள்கிறார்கள். ஆக, தமிழர் பிரதேசத்தை ஜனநாயக முறையில் தமிழர்கள் தானே ஆள்கிறார்கள். அப்புறமும் ஏன் இங்கு நீங்கள் 'ஈழமே இறுதி தீர்வு' என்று பிரிவினை வாதம் பேசி குழப்பம் விளைவிக்கிறார்கள்?

திராவிடவாதி: சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை கொன்று விட்டு, வடக்கில் விக்னேஸ்வரனை தேர்ந்தெடுத்தது என்பது உலகத்தை ஏமாற்ற சிங்களன் நடத்தும் நாடகம். இதனால் தமிழர்களுக்கு விடிவு ஏதும் வரப்போவது இல்லை. மேலும் நீங்கள் குறிப்பிட்ட மற்றவர்கள், சிங்களனுக்கு சோரம் போனவர்கள். அவர்களை தலைவர்களாக கருத இயலாது.

தமிழர்: அப்படி என்றால், 60 ஆண்டுகால வரலாறை மறக்க முடியாது என்று சொல்கிறீர்கள். ஒரு லட்சம் மக்கள் கொல்லப்பட்டதை கண்டிக்கிறீர்கள். ஜனநாயகம் என்ற பெயரில் அங்கு தமிழர்கள் ஆள்வது என்று சிங்களன் சொல்வது நாடகம் என்று சொல்கிறீர்கள். சரி தானே?

திராவிடவாதி: ஆமாம்.

தமிழர்: நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கட்டுமே. அதனால் தமிழர்களுக்கு ஏதும் தீமையா என்ன? இது நாள் வரை புலிகளுக்கும், சிங்களனுக்கும் மத்தியில் நடந்த போரில் தமிழ் மக்கள் நிலையற்ற வாழ்வை வாழ்ந்தார்கள். அதனால் என்ன? இப்போது தான் புலிகள் வீழ்த்தப்பட்டு, போலி ஜனநாயகம் என்ற ஒன்றாவது வந்து விட்டதே? தமிழ் மக்கள் இனி உயிர் பயம் இன்றி நிம்மதியாக வாழ்வார்கள் தானே? அப்படியே தொடரட்டுமே? ஏன் 'ஈழமே இறுதி இலக்கு' என்று நீங்கள் இங்கே கூச்சல் போட வேண்டும்?

திராவிடவாதி: சிங்களனின் அதிகாரத்தில் இருக்கும் இன்றைய பொம்மை ஈழ தமிழர் அரசு தொடர்ந்தால் என்ன நடக்கும் தெரியுமா?

தமிழர்: தெரியாது சொல்லுங்கள்.

திராவிடவாதி: 1. தமிழர் பெண்களை சூறையாடியது போல, தமிழர் நிலங்களை சிங்களன் சூறை ஆடுவான். அதற்க்கு தான் விக்னேஸ்வரனுக்கு 'காணி அதிகாரம்' தரப்படவில்லை.
2. தமிழர் பகுதியில் போர் முடிந்தும் நிறுத்தப்பட்ட சிங்கள இராணுவம், அவர்களுக்கு உதவிய சிங்கள கைக்கூலி தமிழர்களின் துணையுடன் அங்கேயே நிரந்தரமாக தங்கிவிடுவான். இதன் மூலம் எந்த காலத்திலும் தமிழர்கள் எழுச்சி பெறக்கூடாது என்பதுடன், ஊர் உலகை ஏமாற்ற தங்களின் கைக்கூலி தமிழர்களுக்கு ஆட்சியையும், அதிகாரத்தையும் கொடுத்து,தன்னால் வீழ்த்தப்பட்ட தமிழர்களை ஆள செய்வான். தமிழர் ஆட்சி தான் அங்கு நடக்கிறது என்பது போல சித்தரிப்பான்.
3. தமிழ் பண்பாடும், கலாச்சாரம்,அடையாளம் என அனைத்தையும் சீரழிப்பான். கோவில்களை இடிப்பான். கோவில் சொத்தை கொள்ளை இடுவான். அதற்க்கு 'ஏற்றுக்கொள்ளும்படி' பல காரணங்களை சொல்வான்.
4. தமிழர்களை பிச்சைகாரர்கலாக ஆக்குவான். தங்களுக்கு பயன்படும் வெறும் ஓட்டு எந்திரங்களாக மட்டுமே அவர்களை பயன்படுத்துவான்.

தமிழர்: மிக்க நன்றி. நீங்கள் சொன்னவற்றுடன் சேர்த்து நாங்களும் கொஞ்சம் என்ன நடக்கும் என்று ஊகித்து உள்ளோம். கொஞ்சம் சரி பார்த்து சொல்லுங்களேன்.

திராவிடவாதி: சொல்லுங்களேன்.

தமிழர்: 1. அவனே கல்வி,தொழில்,பொருளாதாரம் என்று கொடி கட்டி பறப்பான். தமிழ் நிலத்தில் சிங்களன் கட்டும் கல்வி மய்யங்களில் தான் நாளை தமிழ் பிள்ளைகள் படிக்க வேண்டி இருக்கும். 
2. தான் வீழ்த்திய தமிழர்களை தன்னால் 'தாழ்த்தப்பட்டோர்' என்று பொருள் படும்படி, 'தாழ்த்தப்பட்டோர்' என்று குறிப்பிடுவான்.
3. தனக்கு தோதான சிங்கள, தமிழ் அமைப்புகளை, நபர்களை தனது அருகில் வைத்து கொண்டு, அவர்களை வைத்தே அரசியல் செய்வான்.
4. தமிழர் என்று சொல்லையே அருவருப்பான சொல்லாக மாற்றுவான். 
5. தன்னால் வீழ்த்தப்பட்ட தமிழர்களுக்கும், தனக்கு தோதான தமிழர்களுக்கும் இடையே என்றைக்குமே பகை இருக்கும்படி செய்வான். அதன் மூலம் தன்னை யோக்கியனாக காட்டிக் கொள்வதோடு, தமிழர்கள் தன்னை பற்றியே நினைக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையுடன், தனது அரசியலை தடையின்றி செய்வான்.
6. நிலம்,நீர்,காற்று என தமிழர் பிரதேசத்தின் வளங்களை ஜனநாயக அடிப்படையில் கொள்ளை அடிப்பான். அதற்க்கு தோதாக சாரை சாரையாக தங்களது குடியேற்றங்களை தமிழர் பிரதேசங்களில் அமைத்து கொள்வான்.
7. சுமார் 500 வருடங்கள் கழித்து, தமிழர்களுக்கு தானே தலைவர் என்று சொல்வான். 'தமிழர்களை வீழ்த்திய, இன்றும் அவனை அடக்கி ஆண்டு கொண்டு இருக்கும் நீ எப்படி தமிழனுக்கு தலைவர் ஆக முடியும்' என்று யாரவது விளக்கமாக கேட்டால், 'யார் தமிழர்? அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது' என்று சிங்களர்களை வைத்தே பதில் சொல்ல வைப்பான்.

திராவிடவாதி: இதில் ஏதும் உள்குத்து இருக்கிறதா?

தமிழர்: அதை தொடர்ந்து படிப்பவர்கள் தெரிந்து கொள்வார்கள். இதுவரை நீங்கள் கொடுத்த பதில்களின் அடிப்படையில் நாங்கள் சில கேள்விகளை முன்வைக்கிறோம். நீங்கள் பதில் சொல்கிறீர்களா?

திராவிடவாதி: கேளுங்கள்.

தமிழர்:
ஈழத்தில் தமிழர்கள் தோற்றுவிட்டார்கள் என்பதற்காக 60 ஆண்டுகால போராட்டத்தை, அதன் வரலாற்றை பற்றி மறந்துவிட வேண்டுமா என்று நீங்கள் எங்களை பார்த்து கேட்டீர்கள். மேலும், தமிழ் மன்னர்களுக்கும், சிங்கள மன்னர்களுக்கும் நடந்த போர்களை வைத்து, இன்று ஈழத்தில் ராஜபக்ஷேவின் 'இன அழிப்பை' நியாயப்படுத்த கூடாது என்றும் சொல்ல முற்பட்டீர்கள். அப்படி என்றால்,
கேள்வி 1: தமிழகத்தில் தமிழர்கள், வடுகர்கலான விஜயநகர நாயக்கர்களிடம் தோற்றுவிட்டார்கள் என்பதற்காக 500 வருட வரலாற்றை மறந்துவிட வேண்டும் என்று நீங்கள் சொல்வது நியாயமா?

கேள்வி 2: மூவேந்தருக்கும், வடுக நாயக்கருக்கும் நடந்த போரை வைத்து, கடந்த 500 வருடங்களாக தமிழகத்தில் நடக்கும், நடந்து கொண்டு இருக்கும் 'தமிழின அழைப்பை' நியாயப்படுத்த கூடாது என்று நாங்கள் சொல்வது உங்களுக்கு ஏன் முரணாக படுகிறது?

கேள்வி 3: வெற்றி பெற்றுவிட்டான் என்பதற்காக தமிழர்கள் போலி ஜனநாயகம் என்ற பெயரில் சிங்களனுக்கு அடிமையாக இருக்க கூடாது என்று சொல்கிறீர்கள். ஆனால் இதையே தமிழகத்தில் வடுக திராவிட அரசு தமிழர்களை வீழ்த்தி வெற்றி பெற்று விட்டான் என்பதற்காக, திராவிடம் என்ற பெயரில் எங்களை அவர்கள் அடிமையாக நடத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். திராவிடமே தமிழர்களுக்கு முதல் எதிரி என்று சொல்கிறோம். இதில் மாற்றுக்கருத்து உண்டா?

கேள்வி 4: தமிழர்களாகவே இருந்தாலும் சிங்கள பேரினவாதத்துடன் சோரம் போன தமிழர்களை நீங்கள் 'தமிழரே அல்ல' என்று சொல்லும் போது, தமிழர்களை வீழ்த்திய வடுக திராவிட வாரிசான வைகோ போன்றவர்களை, தமிழகத்தில் தலைவராக ஏற்க்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்? ஈழத்தை தமிழர்கள் ஆள வேண்டும் என்று சொல்லும் நீங்கள், தமிழகத்தில் ஒரு வடுக தெலுங்கரை தலைவராக முன்னிறுத்த நினைப்பது ஏன்?

கேள்வி 5: ஈழத்தில் நடப்பது ஆட்சியே அல்ல, அது போலி ஜனநாயகம் என்று சொல்லும் நீங்கள் இதே நாங்கள் இங்கு தமிழகத்தில் நடப்பது ஆட்சியே அல்ல, திராவிடம் என்ற போர்வையில் போலி ஜனநாயகமும், இன அழிப்பும் என்று சொன்னால் மட்டும் ஏன் கோவம் வருகிறது உங்களுக்கு?

கேள்வி 6: ஒரு லட்சம் தமிழர்களை கொன்ற சிங்களத்துடன் தமிழர்கள் அனைத்தையும் மறந்து, அவர்களின் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வதை கடுமையாக மறுக்கும் நீங்கள், இதே போல தமிழர்களை 'கயத்தாறில்' சுமார் 400 வருடங்களுக்கு முன்பு கொன்று ஒழித்த திராவிடத்துடன், அனைத்தையும் மறந்து, அவர்களின் தலைமையை தமிழகத்தில் மீண்டும் மீண்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்? 

கேள்வி7: இதே போலி ஜனநாயகம் ஈழத்தில் தொடர்ந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்று நீங்கள் சொன்னதோடு, நாங்கள் சொன்னதும் தான் இன்றும் தமிழகத்தில் திராவிடர்களின் ஆட்சியில் நடந்து கொண்டு இருக்கிறது என்ற உண்மை உங்களுக்கு தெரியவில்லையா? இல்லை தெரிந்தும் தெரியாதது போல நடிக்கிறீர்களா?அத்துடன் மூவேந்தரின் ஆட்சி முடிவுக்கு வந்து இன்று வரை வடுக நாயக்கரின் ஆட்சியே தமிழகத்தில் நடக்கிறது என்று சொன்னால், அந்த உண்மையை மூடி மறைக்க, இங்கே ஆள்பவர்களையும் நீங்கள் தமிழர்களாக சித்தரிக்க முயல்வது ஏன்?

கேள்வி8: சில நூறு வருடங்கள் கழித்து,தமிழர் என்று சொன்னாலே அது பிற்போக்கு சிந்தனை என்றும், அப்படி பேச ஆரம்பித்தால் தன்னுடைய குட்டு எல்லாம் வெளிப்பட்டு விடும் என்று சிங்களன் எப்படி அச்சப்படுவானோ, அதே போலவே இங்கு தமிழகத்திலும் திராவிடம் பேசி,அரசியல் செய்பவர்கள் செய்து கொண்டு இருக்கிறீர்கள். இதற்க்கு மாற்றுக்கருத்து உண்டா?

<<< திராவிடர்கள் பதில் சொல்லலாம் >>>

3 comments:

  1. ஒரே கேள்விக்கு பதில் கூறுங்கள்?

    இலங்கையில் விடுதலைப்புலிகள் தோற்றதற்க்கும் அங்கு இன அழிப்பு நடந்ததற்க்குமான ஒட்டுமொத்த காரணத்தை தமிழக திராவிட கட்சிகளின் மீது சுமத்துவது ஏன்?

    விடுதலைப்புலிகளின் தொடர்ச்சியான வெற்றிகளின் போது... அடுத்தடுத்து விடுதலைப்புலிகள் தங்களின் கட்டுப்பாட்டு எல்லைகளை வெற்றிகரமாக விரிவுபடுத்திய போதெல்லாம் தமிழக திராவிட கட்சிகளை புகழ்து கொண்டா இருந்தீர்கள்?

    நீங்கள் வெற்றி பெற்றால் அது உங்களக்கு தோல்வி அடைந்தால் அது திராவிட கட்சிகளுக்கா???

    தி.மு.க முயற்சித்து இருந்தால் போரை தடுத்தி நிறுத்தி இருக்கலாம் என்ற விவாதத்தை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். அதே சமயம் அ.தி.மு.க மாபெறும் அளிவில் கடும் போராட்டங்களை நடத்தி தமிழகத்தை ஸ்தம்பிக்க வைத்து இருந்தால் கூட அது நடந்திருக்குமே.

    அட திராவிட கட்சிகளை விடுங்கள்... சித்திரை விழாவிற்க்கு பிறகு பா.ம.க நடத்திய கலவரங்களைப் போல.... தருமபுரியில் 3000 குடிசைகளை எரித்து சாம்பலாக்கியதைப்போல பா.ம.க செய்திருந்தாலும் அது நடந்திருக்குமே. பா.ம.க, பிஜேபி, இன்னும் ஏராளமான கட்சிகள் தமிழகத்தில் இருந்தன அவை எல்லாம் தங்கள் உயிரை மதிக்காமல் கடும் போராட்டங்களை நடத்தி மத்திய மாநில அரசுகளை ஸ்தம்பிக்க வைத்திருந்தாலும் அது நடந்திருக்குமே...

    அது என்னங்க ஆனா ஊனா-னா.... தி.மு.க வின் மீது குற்றம் சுமத்தி தப்பிக்க பார்க்கின்றீர்கள்? விடுதலைப் புலிகள் வீழ்ந்து போனதற்க்கும் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதற்க்கும் முழு முதற்க்காரணம் விடுதலைப்புலிகள் தானே. ஆண்டன் பாலசிங்கம் இறந்தது... சுப தமிழ்ச்செல்வன் இறந்தது... கருணா எதிர் முகாமிற்க்கு சென்றது... செப்டம்பர் அமெரிக்க தாக்குதலுக்கு பிறகு பல்வேறு நாடுகள் விடுதலைப்புலிகளை தீவிரவாத முத்திரை குத்தி தடை செய்தது... 75 ஆயிரம் இஸ்லாமியர்களை இரவோடு இரவாக அகதிகளாக்கி இஸ்லாமிய நாடுகளின் வெறுப்பை சம்பாதித்தது... பள்ளி வாசலில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகையின் போது தற்கொலை படை தாக்குதல் நடத்தி கொன்றது. இறுதியாக அமெரிக்கா சீனா பாக்கிஸ்தான் உட்பட பல்வேறு நாடுகள் இலங்கைக்கு உதவியது... என இன்னும் இன்னும் ஏராளமான காரணங்களை ஏன் மறைக்கின்றீர்கள்?

    ReplyDelete
  2. அட இதஎல்லாம் விடுங்க இலங்கையிலும்... உலகம் புராவும் இருக்கும் இலங்கைவாழ் இந்து தமிழர்கள் மாங்கு மாங்கு-னு இந்து தெய்வங்களை கும்புடுகின்றீர்களே.... அந்த தெய்வங்கள் எல்லாம் உங்களை ஏமாற்றவில்லை... ஆனால் திராவிட கட்சிகள் உங்களை ஏமாற்றி விட்டனவா? ஹா ஹா ஹா ஹா ஹா ஹா. நீங்கள் திராவிடத்தையும் பெரியாரையும் எதிர்ப்பதன் பின்னனி எங்களுக்கு எல்லாம் நன்றாகவே தெரியும். உங்கள் சமுக்காலத்திற்க்குள் ஒளிந்திருப்பவை மெல்ல மெல்ல எட்டிப்பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றன.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி