கேள்வி: தலித்தியமும், திராவிடமும் ஒடுக்கப்பட்டவருக்கு ஆதரவாகவும், பார்ப்பனியத்துக்கு எதிராகவும் செயல்படுகிறது. அதில் ஏதேனும் விமர்சனம் உண்டா?
பதில்:
இது கொஞ்சம் பெரிய மேட்டர். அதை எளியவடிவில் கதை போல விளக்கிவிட்டு விசயத்துக்குள் செல்வோம்.
தமிழரசனுக்கு ஒரு தங்கநிற சட்டையும், வீடும், அஞ்சு ஏக்கர் நிலமும், அந்த நிலத்தின் நடுவில் குலதெய்வ கோவிலும் உள்ளது.
ஆரியா என்பவன் தமிழரசனை வீழ்த்த நினைத்து அதை தந்திரமாக செய்கிறான். எப்படி? தமிழரசனுக்கு சொந்தமான அத்தனையும் தன்னுடையது என்கிறான்.
திவாகர் என்பவன் 'கவலைப்படாதே தமிழரசா, நான் இருக்கிறேன் உனக்கு' என்று ஆறுதல் சொல்வது போல களம் இறங்குகிறான். பின்பு திவாகர் 'உண்மை தான் தமிழரசா, ஆரியா சொல்வது தான் உண்மை. இதெல்லாம் உன்னுடையது அல்ல, அவனுடையது' என்கிறான். அதாவது தமிழரசனுக்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று திவாகர் ஆர்யாவுக்கு தான் துணை நிற்கிறான்.
தலிக்கா என்ற இன்னொரு நாட்டாண்மை வருகிறான். 'கவலைப்படாதே தமிழரசா. நான் இருக்கிறேன் உனக்கு' என்று களம் இறங்குகிறான். இறுதியில் அந்த தலிக்கா போட்டானே ஒரு போடு.... "அடேய் தமிழரசா......நீ தமிழரசனே கிடையாதப்பா......உனக்கும் இந்த உடமைகளுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதப்பா.....எல்லாமே ஆரியாவோடது தான்" என்கிறான். திவாகராவது தமிழரசனின் உடமைகளை ஆரியாவோடது என்று கூறினான். ஆனால் தலிக்கா ஒரு படி மேலே போய், தமிழரசனுக்கும் அவனது உடமைக்கும் 'எந்த சம்பந்தமுமே இல்லை' என்று கூறிவிட்டான்.
கொடுத்த காரியத்தை கண கச்சிதமாக முடித்து விட்டீர்கள் என்று ஆர்யாவுடன், திவாகரும், தலிக்காவும் இருட்டறைக்குள் கை குலுக்குகிறார்கள்.
====================
இப்போ விசயத்துக்கு வருவோம்.
உண்மையில் தமிழரசனை காக்க நினைத்து இருந்தால் திவாகர் , தமிழரசனின் உடமைகள் அவனுடையது தான் என்பதை ஆய்ந்து அறிந்து சொல்லி இருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை.
தலிக்கா தமிழரசனை காக்க நினைத்து இருந்தால், தமிழரசனே இந்த உடமைகளுக்கு உரியவன் என்று கூறி இருக்க வேண்டும். ஆனால் ஒரு படி மேலே சென்று , தமிழரசனுக்கும் உடமைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அடி ஆதாரத்தையே குலைக்கும் வேலையை செய்து இருக்கிறார்.
மேலே தமிழரசன் என்ற இடத்தில் 'தமிழர்' என்றும்,
ஆரியா என்ற இடத்தில் 'பார்ப்பனிய இந்துத்துவா' என்றும்,
திவாகர் என்ற இடத்தில் 'திராவிடம்' என்றும்,
தலிக்கா என்ற இடத்தில் 'தலித்தியம்' என்றும் போட்டு மீண்டும் படியுங்கள். உங்களுக்கு ஒரு உண்மை புரியும்.
> இந்திரன் ஆரியக்கடவுள் என்பது போன்ற திராவிடர்களின் உளறலின் உள் அர்த்தம் இப்போது புரிந்திருக்கும்.
> ஒரு உதாரணத்துக்கு, தமிழ் குடியான பள்ளர்களை/பறையர்களை ஏன் தலித்தியவாதிகள் 'நீங்களெல்லாம் தமிழர்களே அல்ல, பூர்வீக பவுத்தர்கள்' என்று பிரச்சாரம் செய்கிறார்கள் என்றும் இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.
ஆம்,
ஆரியம் - திராவிடம் - தலித்தியம் ===> இந்த மூன்றுமே 'மண்ணின் மைந்தர்கள்' என்ற கருத்தியலுக்கு எதிரானது என்று புரியும். 'தமிழர்' என்ற கருத்தியலுக்கு எதிரானவை என்று புரியும். அந்த அடிப்படையில் இவை மூன்றையுமே நாம் எச்சரிக்கையுடன் அணுக வேண்டும் என்றும், புறம்தள்ள வேண்டும் என்றும் புரியும்.
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்
இந்த கதையுடன் சிதம்பர நடராஜ கோயில் விவகாரத்தை இணைத்து பார்த்தால் உண்மை விளங்கும்.....
ReplyDeleteதமிழரசன்(தமிழர்)
சிதம்பர கோயில் தமிழ் சமூகமான பறையர் குலத்தை சார்ந்தவரும் அறுபத்தி மூன்று நயன்மார்களில் ஒருவருமான நந்தனார் அவர்களால் புகழ்பெற்ற வழிபாட்டு தளம்
ஆரியா (ஆரியம்)
சிதம்பரம் கோயில் எங்களுக்கு சொந்தமானது- ஆரிய தீட்சிதர்கள்
திவாகர்(திராவிடம்)
சிதம்பர கோயிலில் தமிழ் வழிபாட்டு உரிமை மீட்க்கிறேன் என்று சொல்லிக்கொண்டு ஆரியருக்கு மறைமுகமாக உதவிடும் வகையில் சரியான வழக்கறிஞ்சரை நியமிக்காமலும், போதிய வாதங்களை உச்சநீதி மன்றத்தில் இந்த திராவிட அரசு எடுத்து வைக்காததின் விளைவு இன்று தமிழருக்கு சொந்தமான வழிபாட்டு தளம் ஆரிய தீட்சிதர் கையில்
தலிக்கா(தலித்தியம்)
உண்மையில் தமிழர்களான பறையர்களை தமிழர்களே அல்ல அவர்கள் புத்த மதத்தை இங்கே பரப்ப வந்த பூர்வீக பௌத்தர்கள்… தமிழர்களுக்கும் பறையர்களும் எவ்வித சம்மந்தமும் இல்லை இவர்கள் சாக்கியர்கள் என்று பரப்புரை செய்து தமிழ் பறையருக்கும் சிதம்பர கோயிலுக்கும் உள்ள தொடர்பை முற்றாக அருப்பது தான் தலித்தியம்
சிந்திப்பாய் தமிழா சிந்திப்பாய்…. ஆரிய திராவிட, தலித்திய கருத்தியலை தமிழராய் இணைந்து முறியடிப்போம்
1. நந்தனார் எப்போது தமிழர் ஆனார்?
ReplyDelete2. பறையர் எப்போது தமிழர் ஆனார்கள்?
3. பறையருக்கு சொந்தமான சிதம்பரம் கோவில் எப்போது தமிழர்களுக்கு சொந்தமானது?
4. தமிழர்களின் திருவிழாக்கள் சிலதை சொல்லுங்கள் பார்ப்போம்?
5. தமிழ் கடவுள் என்று சொல்லபடும் முருகனின் வரலாரை சொல்லுங்கள்?
6. தமிழ் பேசுபவர்கள் எல்லாம் தமிழர் இல்லை என்று கன்னடன், தெலுங்கன் மலையாளி என்று சொல்லுகிரீகள், அப்படி எனில் திருவள்ளுவர், அவ்வையார், கனியன் பூங்குன்றனார்.., மட்டும் தமிழர்களா?
7. இந்தியா முழுவதும் பரவி இருக்கும் பரையர் இனத்தை தமிழர் என்று சொல்வது எதனால்?
8. தமிழர் என்பவர் யார்? ஆதி தமிழர் என்பவர் யார்? திராவிடர் என்பவர் யார்? ஆதி திராவிடர் என்பவர் யார்?
எதற்காக உயர்ஜாதி இனத்தவர்கள் திருவள்ளுவர், ஔவையார் பறையர் இல்லை என்று கொக்கரிகின்றார்கள் ? ஒரு தலித் சான்றோனாக இருக்கக் கூடாதா? ஏண்டா நீங்க மட்டும்தான் எல்லாவற்றிலும் இருக்க வேண்டுமா? திருவள்ளுவர் பறையர் என்பதினால் தமிழகத்தில், அதிக அரசுப் பேருந்துகளில் திருக்குறளை புறக்கணித்து வருகின்றார்கள்.
ReplyDeleteஜாதி வெறி பிடித்த இந்திய கிறிஸ்தவர்கள்
ReplyDeleteChristian church untouchablity
http://marayar.blogspot.in/