08 May 2014

திராவிடம் என்னும் கொள்ளி வாய் பிசாசு

ஐன்ஸ்டீன் முன்வைத்த அணு இயற்ப்பியல் தத்துவத்தின் படி ஒளிக்கு துகள் பண்பு (போட்டான்) உண்டு என்பது. ஆனால் டிபிராக்லி தத்துவத்தின் படி பொருள்கள் அனைத்துக்கும் அலை பண்பு உண்டு என்பது. அதாவது ஒரே நேரத்தில் ஒரு பொருளை நீங்கள் அலையாகவும் கருதாலாம், துகளாகவும் கருதலாம்.

மனித எண்ண ஓட்டங்கள் என்பதுவும் அலைப் பண்பு ஆகும். இந்த அலைகளே பல ஆயிரம் காலமாக பிரபஞ்சத்தில் இன்றும் சுற்றி வருகின்றன. இந்த பிரபஞ்ச அலைகளில் மனிதனுக்கு +ve அலைகளை முடிந்தவரை ஈர்த்து கொடுக்கும் அமைப்பே 'கோவில்','மசூதி',சர்ச்' எல்லாம்....!!! இவ்வாறு தொகுக்கப்பட்ட '+ve ' energy என்பதையே தமிழன் 'கடவுள்' என்கிறான். மற்றபடி உலகில் இருக்கும் அனைத்து கோவில்களும் (தமிழகம் உட்பட), முன்னோர்களின் நினைவாக எழுப்பட்ட பள்ளி படை (சமாதிகளே) ஆகும். 
<<< இது மிகப்பெரிய தலைப்பு. இப்போதைக்கு இத்துடன் நிறுத்தி கொள்ளலாம் >>>>
+ve என்று ஒன்று இருந்தால் -ve என்ற ஒன்று இருக்க வேண்டும் அல்லவா...? அதை தான் சாத்தான், பிசாசு, பேய் என்றெல்லாம் கூறி வைத்தனர். மேற்ப்படி அறிவியல் சமாச்சாரங்கள் பாமரனுக்கு விளக்கி கூறி கொண்டு இருக்க முடியாது என்ற காரணத்தினால் தான், பாமரனுக்கு மேம்போக்காக சொல்லி வைத்தனர். அதாவது 'சுடுகாடு பக்கம் போகாதே, கெட்டதை பேசாதே, செய்யாதே இத்தியாதிகள்'. அதுவும் அப்படியே வழக்கத்தில் வந்து விட்டது. தமிழனின் வாழ்வியலின் ஒவ்வொரு செயலுக்கும் ஒரு பொருள் பொதிந்த அர்த்தம் இருந்து வந்துள்ளது. திராவிட கண்மணிகள் சொல்வது போல அவை எல்லாம் 'மூட நம்பிக்கைகள்' என்றால், அதே திராவிட கண்மணிகள் சொல்லும் ஐரோப்பியனை தமிழன் எப்படி ஆதிக்கம் செய்து இருக்க முடியும், பக்கத்து தெருவை கூட ஆதிக்கம் செய்ய முடியாது அல்லவா...?
"There Pandion used to reign, dwelling at a great distance from the mart, in a town in the interior of the country called Modura. The district from which pepper is carried down to Becare in canoes is called Cottonara."
Ref: http://www.sdstate.edu/projectsouthasia/upload/Pliny-Voyages-to-India.pdf



இனி கொள்ளி வாய் பிசாசுக்கு வருவோம். உண்மையில் சுடுகாடு பக்கம், ஆள் அரவம் இல்லாத,மக்கி போன கழிவுகள் கொட்டி வைத்து இருக்கும் இடங்கள் பக்கம் இந்த பிசாசை பார்க்கலாம். இன்றும் பார்க்கலாம். இது உண்மை தான். மேற்ப்படி இடங்கள் -ve ஆற்றல் புழங்கும், அல்லது அதை உள்வாங்கும் நபர்கள் திரியும் இடங்கள் (பில்லி ,சூனியம் etc ). எனவே அந்த பக்கம் போகாதே 'கொள்ளி வாய் பிசாசு' இருக்கிறது, அது திடீர் திடீர் என நெருப்பை கக்கும் என்று சொல்லி வைத்தனர்.
உண்மையில் கொள்ளி வாய் பிசாசு இருக்கா....? இதற்கு பின்பு உள்ள அறிவியல் என்ன?
மேற்ப்படி இடங்களை கவனித்தால் 'அழுகிய/மக்கிய' என்கிற வார்த்தை முக்கியமானது. நாம் கூறும் கொள்ளி வாய் பிசாசுக்கு ஆங்கில அறிவியல் வைத்திருக்கும் பெயர் 'மீத்தேன்'. அதன் தீப்பற்றும் வெப்பநிலை, அறை வெப்பநிலை (அதாவது 30 டிகிரி) க்கும் குறைவு. அதனால், மக்கிய இத்யாதிகளில் இருந்து வெளிவரும் மீத்தேன் வாயு, வெளியே வந்ததும் அதுவாகவே திடீர் என பற்றி கொள்ளும். எரியும். இதுவே கொள்ளி வாய் பிசாசு.
தமிழனின் வாழ்வாதாரமான விவசாயத்தை அழிக்கும் பொருட்டு, அவன் நிலத்தை பாழ்படுத்தி, மீத்தேனை எடுக்க இருப்பது திராவிடம் என்கிற கொள்ளி வாய் பிசாசு....!!!
இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

1 comment:

பின்னூட்டத்திற்கு நன்றி