10 May 2014

திராவிடம் என்பது பிராமணிய அடிமை கருத்தியல்

"பார்ப்பான் கிழக்கே போக சொன்னால் நீ மேற்க்கே போ. பார்ப்பான் செய் என்று சொன்னால் அதை செய்யாதே, செய்யாதே என்றால் அதை செய்" --- ராமசாமி நாயுடு (எ) பெரியாரின் நிலைப்பாடு.
### எல்லாம் சரி. அதை செஞ்சீங்களா திராவிடர்ஸ்....?
1. 'நாங்கள் ஆரியர்கள்' என்று பார்ப்பான் சொன்னால், நீங்க இல்லை என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்? ஆனால் அவனை விட நீங்க தான் 100 மடங்கு ஆரியன் ஆரியன் என்று அதிகமாக கூவுகிறீர்கள்...? --- இந்த ஒரே விசயத்திலேயே 99.99 சதவீதம் திராவிட நிலைப்பாடு கோவிந்தா.....கோ......விந்தா......!!!
2. நாங்க தான் நால்வர்ணத்தை உருவாக்கினோம் என்று பார்ப்பான் சொன்னால், நீங்க இல்லை என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட நீங்க தானே 100 மடங்கு 'நால்வர்ணத்தை உருவாக்கியவன் பார்ப்பான்' என்று சொல்கிறீர்கள்...?
3. இந்து மதத்தை பார்ப்பான் தான் உருவாக்கினான் என்று சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லாவ மறுத்திருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு இந்து மதம் ஆரிய மதம், பார்ப்பான் மதம் என்று தானே சொல்கிறீர்கள்...?
4. 'இந்திரன் ஆரிய கடவுள். சிவன்,முருகன் என அனைவருமே ஆரிய கடவுள்' என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் அப்படி அல்ல என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு நீங்கள் தான் மேற்ப்படி கடவுள்களை ஆரிய கடவுள்கள் என்று முழங்குகிறீர்கள்?
5. சாதி என்பதை ஆரிய பார்ப்பான் தான் உருவாக்கினான் என்று அவன் சொன்னால், நீங்கள் இல்லை என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு நீங்கள் தானே 'சாதியை விதைத்தவன் பார்ப்பான்' என்று சொல்லி கொண்டு திரிகிரீகள்?
6. கோவில்கள் பிராமனர்களுக்கானது என்று அவன் சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்து இருக்க வேண்டும்? மாறாக, நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு, அதே கோவில்களை அவனுக்கு தாரை வார்த்து கொண்டு தானே இருக்கிறீர்கள்?
7. இன்னார் தாழ்த்தப்பட்டவன் என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்து இருக்க வேண்டும்? மாறாக, நீங்கள் தானே அவனை விட மூச்சுக்கு முன்னூறு தடவை தாழ்த்தப்பட்ட என்று முழங்கி கொண்டு இருக்கிறீர்கள்?
8. 'பார்ப்பனர்கள் நாங்கள் ஒருங்கிணைத்தே இருக்கிறோம்' என்று அவன் சொன்னால், அப்படி அல்ல ஒரு சில குரூர பார்ப்பனர்களின் புத்தி தான் இது, தமிழ் பார்ப்பனர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்று அல்லவா கூறி இருக்க வேண்டும்? அதற்க்கான முயற்ச்சியில் இறங்கி இருக்க வேண்டும்? மாறாக, 100 மடங்கு அவனை விட அவனது ஒருங்கிணைப்பை 'பாம்பை கண்டால் விடு, பார்ப்பானை கண்டால் அடி' என்று வளர்த்தது நீங்கள் தானே திராவிடர்ஸ்....?
9. சமஸ்கிருதம் ஆரிய மொழி என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் அபப்டி அல்ல என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால் அவனை விட 100 மடங்கு நீங்கள் தானே சமஸ்கிருதம் ஆரிய மொழி என்று சொல்லி திரிகிறீர்கள்?
10. தமிழன் என்று யாரும் இல்லை பார்ப்பான் சொன்னால், நீங்கள் தமிழன் இருக்கிறான், இது தான் அவனுக்கான வரையறை என்று சொல்லி இருக்க வேண்டும்? அதை விட்டு விட்டு, 'யார் தமிழன், எங்கே இருக்கிறான் அவன்?' என்று பார்ப்பானை விட 100 மடங்கு தமிழன் என்கிற அடையாளத்தையே ஒழிக்க நினைப்பது நீங்கள் தானே...?
சுருக்கமாக,
பார்பானை விட திராவிடம் பேசுவோர் தான் மிக அதிகமாக பார்ப்பனியத்தை தாங்கு தாங்கு என்று தாங்கி இருக்கிறீகள் என்று தெளிவாகிறது. எமக்கு ஒரே ஒரு கேள்வி தான்.
மேற்ப்படி எந்த இடத்தில் நீங்கள் பிராமணியத்தை எதிர்த்து இருக்கிறீர்கள் திராவிடர்ஸ்....? அவனை விட, அவனின் கொ.ப.செ ஆக மட்டுமே செயல்பட்டு இருக்கிறீர்கள்...?
தமிழர்கள் ஒரு உண்மையை விளங்கி கொள்ள வேண்டும்.
"நாங்கள் பிராமணியத்தை எதிர்க்கிறோம் என்று திராவிடர்கள் கூறுவது பொய். உண்மையில் பிராமணியம் என்ற ஒன்று இல்லை என்றால், இவர்களுக்கு அரசியல் இல்லை என்பதே மெய். எனவே, பிராமணிய வீழ்ச்சியில் பிராமணர்களை விட, இவர்களுக்கே இழப்பு அதிகம். இவர்கள் ஒருக்காலும் மேற்ப்படி இத்யாதிகளை எதிர்த்து ஒரு சுண்டு விரலை கூட நீட்ட மாட்டார்கள் என்று அறிக."
இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

10 comments:

  1. 1. 'நாங்கள் ஆரியர்கள்' என்று பார்ப்பான் சொன்னால், நீங்க இல்லை என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்? ஆனால் அவனை விட நீங்க தான் 100 மடங்கு ஆரியன் ஆரியன் என்று அதிகமாக கூவுகிறீர்கள்...? --- இந்த ஒரே விசயத்திலேயே 99.99 சதவீதம் திராவிட நிலைப்பாடு கோவிந்தா.....கோ......விந்தா......!!!

    நாங்கள் ஆரியன் என்று பார்ப்பான் எப்படி சொல்லுவான்... அப்படி அவன் சொன்னால் அவன் வெளியில் இருந்து உள்ளே வந்ததாக பொருட்பட்டுவிடும். மேலும் அவர்கள் தாங்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் அல்ல இங்கேயே இருந்தவர்கள் என்று தானே வரலாற்றை திரித்துக் கூறிக்கொண்டு இருக்கின்றனர்? அப்புறம் எந்தப் பார்ப்பான் தன்னை பார்ப்பான் என்றில்லாமல் ஆரியன் எனச்சொல்லிக்கொண்டு இருக்கின்றான். எங்கே எதாவது சான்றுகள் இருந்தால் சொல்லுங்களேன் தோழர்.

    திராவிடர் எனச் சொல்லியவர்கள் தான் அவர்களை ஆரியன் வந்தேரி என்றெல்லாம் சொன்னார்கள். இதுல கோவிந்தா கோவிந்தாவா? மிடியல.

    இதுல இருந்தே தெரியுது நீங்கள் பார்ப்பனீயத்தையும் திராவிடத்தையும் தெரிந்து வைத்திருக்கும் அழகு.

    ReplyDelete
  2. 2. நாங்க தான் நால்வர்ணத்தை உருவாக்கினோம் என்று பார்ப்பான் சொன்னால், நீங்க இல்லை என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட நீங்க தானே 100 மடங்கு 'நால்வர்ணத்தை உருவாக்கியவன் பார்ப்பான்' என்று சொல்கிறீர்கள்...?

    எந்தப் பார்ப்பான் தாங்கள் தான் நால் வர்ணத்தை உருவாக்கினோம் எனச் சொல்கின்றான்? அவன் சொல்லுவது நால் வர்ணம் இருக்கின்றது, அது விஷ்ணுவின் படைப்பு எனத்தானே சொல்கின்றான். அப்புறம் அவன் நால் வர்ணம் இருக்கின்றது எனச் சொன்னால் அது இல்லை. நீ சூத்திரனும் இல்லை சத்ரியனும் இல்லை... பார்ப்பானைப் போல நீயும் ஒரு சாதாரண மனிதனே அவனை விட நீ தாழ்ந்தவன் இல்லை எனத்தானே சொல்கின்றோம். நால் வர்ணத்தை உண்டாக்கியது பார்ப்பான் தான் என எந்த பார்பான் சொல்லுகின்றான் அதற்க்கும் சான்று கொடுங்கள்.

    ReplyDelete
  3. 3. இந்து மதத்தை பார்ப்பான் தான் உருவாக்கினான் என்று சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லாவ மறுத்திருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு இந்து மதம் ஆரிய மதம், பார்ப்பான் மதம் என்று தானே சொல்கிறீர்கள்...?

    இது என்னங்க கொடுமையா இருக்கு? இந்து மதத்தையும் கடவுளையும் நாங்கள் தான் உருவாக்கினோம் என பார்ப்பான் எப்படிச் சொல்லுவான்? அப்படி அவன் சொன்னால் நல்லது தான் நாங்கள் கையெடுத்து அவர்களை வணங்குவோம். ஏன் என்றால் இந்து மதமும் கடவுளும் இல்லை... இவர்கள் தான் அதை உருவாக்கினார்கள் என நாங்கள் காட்டு கத்து கத்துவதை உண்மை தான் என அவர்கள் வாயாலயே ஒப்புக்கொண்டதாகி விடுமே.

    ReplyDelete
  4. 4. 'இந்திரன் ஆரிய கடவுள். சிவன்,முருகன் என அனைவருமே ஆரிய கடவுள்' என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் அப்படி அல்ல என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால், அவனை விட 100 மடங்கு நீங்கள் தான் மேற்ப்படி கடவுள்களை ஆரிய கடவுள்கள் என்று முழங்குகிறீர்கள்?

    நாங்க எங்கங்க அவர்கள் எல்லாம் கடவுள்-னு சொன்னோம்? ஏங்க கடவுளே இல்லை... கடவுளை வணங்குபவன் முட்டாள் கடவுளை பரப்புவன் அயோக்கியன் எனத்தானே சொல்கின்றோம். முருகனோ ராமனோ சிவனோ இவங்க எல்லாம் எல்லாம் சாதாரண மனிதனா வாழ்ந்தவர்களா வேணும்னா இருக்கலாம் ஆனால் பார்ப்பனன் சொன்னதைப்போல் இவர்கள் எல்லாம் கடவுள் இல்லை என்று தானே சொல்லி வருகின்றோம்.

    நாங்க என்ன ஆமா இவர்கள் எல்லாம் கடவுள் அதனால நல்லா கும்புடுங்க-னா சொல்லிக்கிட்டு திரியுறோம்?

    ReplyDelete
  5. 6. கோவில்கள் பிராமனர்களுக்கானது என்று அவன் சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்து இருக்க வேண்டும்? மாறாக, நீங்கள் ஆட்சிக்கு வந்த பின்பு, அதே கோவில்களை அவனுக்கு தாரை வார்த்து கொண்டு தானே இருக்கிறீர்கள்?

    கோவில்களை விட்டு ஒழிங்க-னு எவ்வளவு கூவினாலும் உங்களைப்போன்றவர்கள் இன்னமும் சாமி இருக்கு கோவில் இருக்கு-னு போய் கும்பிட்டுக்கொண்டு தான் இருக்குறீங்க. சரி 5000 வருசமா சாமி காப்பாத்தும்-னு திரிஞ்ச கூட்டம் 50 வருசத்துலயா மாறும்??? கொஞ்சம் கொஞ்சமாத்தான் மாறும்.... நாங்க காத்துத்தான் இருக்கனும்.... இதுல எந்த இடத்துல கோவிலை பார்பானுக்கு தாரை வார்த்து இருக்கின்றோம்?

    கோவில்களை பார்பானுக்கு தாரை வார்க்கும் சட்டத்தை இயற்றவேண்டும் என திராவிட சிந்தாந்த்தை நல்லது என ஏற்றுக்கொண்டவர்கள் போராடினார்களா? அப்படி போராடி அதன் விளைவாக ஏதாவது சட்டம் இயற்றப்பட்டு இருக்கின்றதா?

    ReplyDelete
  6. 7. இன்னார் தாழ்த்தப்பட்டவன் என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் இல்லை என்றல்லவா மறுத்து இருக்க வேண்டும்? மாறாக, நீங்கள் தானே அவனை விட மூச்சுக்கு முன்னூறு தடவை தாழ்த்தப்பட்ட என்று முழங்கி கொண்டு இருக்கிறீர்கள்?

    இன்று பெரும்பாலானோர் அட்டவணை சாதியினர் எனத்தான் அழைக்கின்றனர். ஆனால் போலிகளும் சாதிய வெறியர்களும் தான் தாழ்த்தப்பட்ட அல்லது தலித் என்றெல்லாம் அழைத்துக்கொண்டு இருக்கின்றனர்.

    ReplyDelete
  7. 8. 'பார்ப்பனர்கள் நாங்கள் ஒருங்கிணைத்தே இருக்கிறோம்' என்று அவன் சொன்னால், அப்படி அல்ல ஒரு சில குரூர பார்ப்பனர்களின் புத்தி தான் இது, தமிழ் பார்ப்பனர்கள் எங்களுடன் தான் இருக்கிறார்கள் என்று அல்லவா கூறி இருக்க வேண்டும்? அதற்க்கான முயற்ச்சியில் இறங்கி இருக்க வேண்டும்? மாறாக, 100 மடங்கு அவனை விட அவனது ஒருங்கிணைப்பை 'பாம்பை கண்டால் விடு, பார்ப்பானை கண்டால் அடி' என்று வளர்த்தது நீங்கள் தானே திராவிடர்ஸ்....?

    நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம் என பார்ப்பான் என்று சொன்னான்? அரி பெருசு சிவன் பெருசு-னு அடிச்சுக்கிட்டு செத்ததே அவனுங்க தான? என்ன கடந்த 400 வருசமா அவனுக்க சண்ட போடலனா எல்லாம் ஒத்துமையா இருக்குறாங்க-னு அர்த்தமா? அது சரி அவங்க என்று ஒற்றுமையா இருக்குறோம்-னு சொன்னாங்க? அல்லது நாங்க என்னைக்கி அவங்க எல்லாம் ஒத்துமயா இருக்குறாங்க அதனால நாமும் ஒத்துமையா இருக்குறோம்-னு சொன்னோம். இது என்னங்க பகல் கொல்லையா-ல இருக்கு?

    ReplyDelete
  8. 9. சமஸ்கிருதம் ஆரிய மொழி என்று பார்ப்பான் சொன்னால், நீங்கள் அபப்டி அல்ல என்று அல்லவா மறுத்து இருக்க வேண்டும்? ஆனால் அவனை விட 100 மடங்கு நீங்கள் தானே சமஸ்கிருதம் ஆரிய மொழி என்று சொல்லி திரிகிறீர்கள்?

    இது என்ன வம்பா இருக்கு? அவன் சமஸ்கிருதத்தை தேவ மொழி என்றான்... அப்படி எல்லாம் ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது... தமிழைப்போல சைனீஸ்-ஐப்போல ஹிப்ரூவைப்போல அதுவும் ஒரு மொழி அவ்வளவே-னு தான சொன்னோம்?

    ReplyDelete
  9. அப்புறம் இறுதியாக... பார்ப்பான் சொன்னால் அதை மறுத்துப்பேசு எனச் சொன்னோம் உண்மைதான்... ஏன்? ஏன் என்றால் அவன் கடவுளின் பெயரால் மதத்தின் பெயரால் சாதியின் பெயரால் சக மனிதனை பிரிவினைக்குள்ளாக்கி தான் அதில் உயர்ந்தவன் எனக்கூறி குளிர்காய்கின்றான்... ஆகவே அவனது சொல்லையும் செயலையும் ஆராய்சிக்கு உட்படுத்தப்பட்டு தவறாக இருந்தால் புற்க்கணியுங்கள் கண்மூடித்தனமாக அவன் சொல்வதை நம்பாதீர்கள்? அவன் சொல்வதை செய்யாதீர்கள் என்ற பொருளில் தான் பெரியார் அதைச் சொன்னார்.

    அது சரி ஒரு பார்ப்பான் வந்து(பாரதியைப்போல) சாதிகள் இல்லையடி பாப்பா-னு சொன்னா? பார்ப்பான் சொல்லிட்டான் அதுனால அது தப்பு... அதெல்லாம் கிடையாது சாதி இருக்கு-னா சொல்ல முடியும்?

    இல்லை ஒரு பார்ப்பான் வந்து நீயும் என்னைப்போல ஒரு சக மனிதனே நீயும் நானும் சமம்-னு சொன்னா... உடனோ இல்ல இல்ல செல்லாது செல்லாது... ஒன்னு நீ உயர்ந்தவன் இல்லனா நான் உயர்ந்தவன்... நீ சொன்னா அது தப்பா தான் இருக்கும்-னு சொல்லிகிட்டா திரிய முடியும்? விலங்கும் உங்கள் கொள்கை விளக்கம்.

    ReplyDelete
  10. ஒன்றை இருக்கு என்று சொல்வதற்கும் இல்லை என்று சொல்வதற்கும் மனித ஆராய்ச்சியின் முடிவின் வெளிப்பாடாக இருக்க வேண்டும் . சமூகத்தில் வேருன்றி இருக்கும் பார்பனிய கொள்கைகளை அகற்றுவதற்கு பதில் பார்பனிய கொள்கைக்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக பதில்கள் உள்ளதாகவே தெரிகின்றது

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி